Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» உட்டோர்டா பீச்

உட்டோர்டா பீச் - இயற்கை காதலர்களுக்கு!

9

உட்டோர்டா பீச்சில் வரிசையாக அமைந்திருக்கும் பனை மரங்களுக்கு மத்தியிலே, அதன் தங்க மணற்பரப்பில் படுத்துக்கொண்டு மதுவையும், கடல் உணவுகளையும் ருசிக்கும் அற்புதமான அனுபவத்தை வாத்தைகளால் விவரிக்க முடியாது.

இந்த கடற்கரையின் பேரமைதியின் காரணமாக இங்கு இயற்கை காதலர்களும், நடைபயணம் செல்ல விரும்புவர்களும், தனிமை விரும்பிகளும் அதிக அளவில் கூடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் கோவாவின் மற்ற கடற்கரைகளை போல இங்கு இடைத் தரகர்களின் தொல்லை உங்களுக்கு இருக்காது.  

உட்டோர்டா பீச்சில் பயணிகளின் பாதுகாப்புக்காக எண்ணற்ற பாதுகாப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே எந்த கவலையும் இல்லாமல் நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்டோர்டா பீச்சில் நீந்தித் திளைக்கலாம்.

அதோடு இந்தக் கடற்கரையில் உள்ள ஜீபாப் குடிலையும், மார்ட்டின் கார்னர்ஸ் என்ற உணவகத்தையும் கண்டிப்பாக நீங்கள் தவற விட்டுவிடக்கூடாது.உட்டோர்டா பீச் தெற்கு கோவாவின் புகழ்பெற்ற கோல்வா கடற்கரைக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது. எனவே கோல்வா கடற்கரையிலிருந்து வாடகை கார் அல்லது பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சுலபமாக நீங்கள் உட்டோர்டா பீச்சை அடைந்து விட முடியும்.

மேலும் கோவா தலை நகர் பனாஜி, உட்டோர்டா பீச்சிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் உட்டோர்டா பீச்சுக்கு அருகில் இருக்கும் மஜோர்டா ரயில் நிலையத்தையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உட்டோர்டா பீச் சிறப்பு

உட்டோர்டா பீச் வானிலை

சிறந்த காலநிலை உட்டோர்டா பீச்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது உட்டோர்டா பீச்

  • சாலை வழியாக
    கோவாவை மும்பையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 17 அல்லது மும்பை-கோவா நெடுஞ்சாலை மூலமாக அடையலாம். ஆனால் இந்த வழி உங்களை நீண்ட பயணத்துக்கு இட்டுச் செல்வதோடு, கொஞ்சம் ஆபத்தானதும் கூட. எனினும் மும்பையிலிருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் வழியை பயன்படுத்தி, சதாரா நெடுஞ்சாலையை அடைந்து, அதன் பின்னர் சாவந்த்வாடியை அடைந்து விடலாம். அப்படி சாவந்த்வாடியை நீங்கள் அடைந்து விட்டால் அங்கிருந்து கோவா வருவதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். மேலும் மும்பை, புனே மற்றும் மற்ற மகாராஷ்டிர நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து பகுதிகளிலிருந்தும் கோவாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பை மற்றும் கோவாவுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு இரவு நேரத்தில் பயணம் செய்வது பலருக்கு சௌகரியமாக இருப்பதே காரணம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தெற்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும் கோவாவில் பன்னாட்டு விமான நிலையம் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு பயணிகள் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்த பின்புதான் கோவாவை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Mon
Return On
21 Apr,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Mon
Check Out
21 Apr,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Mon
Return On
21 Apr,Tue