Search
  • Follow NativePlanet
Share

சியோலிம் - புலிகளும், சிங்கங்களும் வாழ்ந்த பூமி!

3

சியோலிம் நகரம் பாகா, அஞ்சுனா மற்றும் கலங்கூட் போன்ற கேளிக்கை பகுதிகளுக்கு வடக்கிலும், மாபுசா நகரிலிருந்து வடமேற்கு திசையிலும் அமைந்திருக்கிறது. இந்த நகருக்கு வந்து புகழ்பெற்ற சியோலிம் கடற்கரையிருந்து சூரிய உதயத்தையும், அஸ்த்தமனத்தையும் பார்த்து ரசிக்கும் போதுதான் கோவா சுற்றுப்பயணம் முழுமை பெரும்.

சியோலிம் நகரின் குன்றுகளில் முன்பு அதிக எண்ணிகையில் புலிகளும், சிங்கங்களும் வாழ்ந்து வந்தன. இதன் காரணமாகவே சிங்கங்கள் வாழும் பகுதி எனும் பொருள்பட இந்த நகரம் சியோலிம் என்று அழைக்கப்படுகிறது.

சியோலிம் நகருக்கு வரும் பயணிகள் சியோலிம் தேவாலயம், மே டே டியூஸ், அவர் லேடி ஆஃப் சாரோஸ், ஸ்ரீ தத்தா, சத்தேரி கோயில் உள்ளிட்ட புனித ஸ்தலங்களுக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.

சியோலிம் நகரம் அஞ்சுனா பீச்சுக்கு அருகில் இருப்பதால் அஞ்சுனாவின் புகழ்பெற்ற கர்லீஸ் குடில்களுக்கும், சனிக்கிழமை செகண்ட் ஹேண்ட் மார்கெட்டுக்கும் நீங்கள் சுலபமாக சென்று வர முடியும். அதோடு வாகத்தோர் கடற்கரையையும், சாப்டெம் மீன் சந்தையையும் நீங்கள் கண்டிப்பாக தவற விட்டுவிடக்கூடாது.

சியோலிம் நகரை கோவா தலைநகர் பனாஜியிலிருந்தும், மாபுஸா, பாகா உள்ளிட்ட வடக்கு கோவா பகுதிகளிருந்தும் வாடகை கார்கள் மூலம் சுலபமாக அடைந்து விடலாம். ஆனால் பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு சியோலிம் நகரை நோக்கி பயணிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது.

மேலும் சியோலிம் நகரில் உங்கள் தேவைக்கு ஏற்ப குறைந்த கட்டணம் வாங்கும் விடுதிகள் முதல் 4 நட்சத்திர ஹோட்டல்கள் வரை அனைத்து வகையான தங்குநிடங்களும் இருக்கின்றன.

சியோலிம் சிறப்பு

சியோலிம் வானிலை

சிறந்த காலநிலை சியோலிம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சியோலிம்

  • சாலை வழியாக
    கோவாவை மும்பையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 17 அல்லது மும்பை-கோவா நெடுஞ்சாலை மூலமாக அடையலாம். ஆனால் இந்த வழி உங்களை நீண்ட பயணத்துக்கு இட்டுச் செல்வதோடு, கொஞ்சம் ஆபத்தானதும் கூட. எனினும் மும்பையிலிருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் வழியை பயன்படுத்தி, சதாரா நெடுஞ்சாலையை அடைந்து, அதன் பின்னர் சாவந்த்வாடியை அடைந்து விடலாம். அப்படி சாவந்த்வாடியை நீங்கள் அடைந்து விட்டால் அங்கிருந்து கோவா வருவதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். மேலும் மும்பை, புனே மற்றும் மற்ற மகாராஷ்டிர நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து பகுதிகளிலிருந்தும் கோவாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பை மற்றும் கோவாவுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு இரவு நேரத்தில் பயணம் செய்வது பலருக்கு சௌகரியமாக இருப்பதே காரணம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தெற்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும் கோவாவில் பன்னாட்டு விமான நிலையம் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு பயணிகள் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்த பின்புதான் கோவாவை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Jun,Wed
Return On
25 Jun,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Jun,Wed
Check Out
25 Jun,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Jun,Wed
Return On
25 Jun,Thu