Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» போக்மாலு பீச்

போக்மாலு பீச் - சூரியனின் இளஞ்சூட்டு ஸ்பரிசம்!

7

போக்மாலு பீச் கோவா விமான நிலையத்துக்கும், வாஸ்கோடகாமா நகரத்துக்கும் வெகு அருகிலேயே இருப்பதால் சுலபமாக அடைந்து விடலாம். இங்கு நீங்கள் காலை நேரம் முழுக்க நீர் விளையாட்டுகளில் ஈடுபட்டு திளைக்கலாம். அதன் பின்னர் நேவல் மியூசியம் சென்று வரலாற்று காலத்தில் கொஞ்ச நேரம் பயணிக்கலாம். இல்லையென்றால் போக்மாலு பீச் ரிசார்ட்டில் அமர்ந்துகொண்டு சூரிய அஸ்த்தமனத்தை ரசிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் டோனா பௌலாவுக்கு ஃபெர்ரி அல்லது படகு மூலம் செல்லும் அனுபவம் அலாதியானது.அதோடு போக்மாலு பீச்சில் எண்ணற்ற குடில்களை நீங்கள் பார்க்கலாம். மேலும் ஸ்கூபா டைவிங் விளையாட்டு இந்தப் பகுதிகளில் மிகப்பிரபலம்.

போக்மாலு பீச்சின் சுத்தமான நீரில் உல்லாசமாக நீந்தித் திளைக்கும் அனுபவம் அற்புதமானது. இந்தக் கடற்கரை விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலேயே இருப்பதால் பயணிகள் வாடகை கார்களை அமர்த்திக் கொள்வதில் ஒன்றும் சிரமம் இருக்காது.

அதோடு நீங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் பகுதிகளிலிருந்து பைக்குகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டும் போக்மாலு பீச்சுக்கு வந்து சேரலாம். மேலும் இந்தக் கடற்கரை வாஸ்கோடகாமா மற்றும் தபோலிம் ரயில் நிலையங்களுக்கும் அருகில்தான் இருக்கிறது.

போக்மாலு பீச் சிறப்பு

போக்மாலு பீச் வானிலை

சிறந்த காலநிலை போக்மாலு பீச்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது போக்மாலு பீச்

  • சாலை வழியாக
    கோவாவை மும்பையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 17 அல்லது மும்பை-கோவா நெடுஞ்சாலை மூலமாக அடையலாம். ஆனால் இந்த வழி உங்களை நீண்ட பயணத்துக்கு இட்டுச் செல்வதோடு, கொஞ்சம் ஆபத்தானதும் கூட. எனினும் மும்பையிலிருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் வழியை பயன்படுத்தி, சதாரா நெடுஞ்சாலையை அடைந்து, அதன் பின்னர் சாவந்த்வாடியை அடைந்து விடலாம். அப்படி சாவந்த்வாடியை நீங்கள் அடைந்து விட்டால் அங்கிருந்து கோவா வருவதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். மேலும் மும்பை, புனே மற்றும் மற்ற மகாராஷ்டிர நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து பகுதிகளிலிருந்தும் கோவாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பை மற்றும் கோவாவுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு இரவு நேரத்தில் பயணம் செய்வது பலருக்கு சௌகரியமாக இருப்பதே காரணம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தெற்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும் கோவாவில் பன்னாட்டு விமான நிலையம் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு பயணிகள் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்த பின்புதான் கோவாவை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon