Search
  • Follow NativePlanet
Share

டோனா பௌலா - இந்திய மீனவனை காதலித்த வெள்ளைக்கார பெண்!

12

கோவா தலைநகர் பனாஜியின் புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் டோனா பௌலா, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை ஒருசேர கவர்ந்திழுக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும்.

டோனா பௌலா வடக்கு மற்றும் தெற்கு கோவாவுக்கும், விமான நிலையத்திலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும் இருப்பதால் கோவாவின் மற்ற இடங்களுக்கு நீங்கள் சுலபமாக சென்று விட முடியும்.

மேலும், டோனா பௌலாவில் கேளிக்கை விரும்பிகளுக்கான கடற்கரைகளும் உள்ளன, அதேநேரத்தில் அமைதியின் இருப்பிடமாய் திகழும் கடற்கரைகளும் இருக்கின்றன. எனவே பயணிகளின் விருப்பத்திற்கேற்ப எந்த கடற்கரைக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

கோவா நகர வைஸ்ராயாக போர்த்துகீசியர்கள் காலத்தில் இருந்த ஒருவரின் மகளான 'டோனா பௌலா டி மெனிசெஸ்' என்பவரின் நினைவாகவே இந்த இடம் டோனா பௌலா என்று அழைக்கப்படுகிறது.

அப்போது ஒரு உள்ளூர் மீனவன் மீது காதல் கொண்ட டோனா, அவனை மனம் செய்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து குன்றின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

அந்தக் குன்று இன்று காதலர்களின் சுவர்க்கம் என்று பயணிகளிடையே பிரபலமாக அறியப்படுகிறது. இது பனாஜியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் டோனா பௌலா கடற்கரையில் அமைந்துள்ளது.

டோனா பௌலாவில் ஏராளமான நீர் விளையாட்டுகளில் நீங்கள் விளையாடி மகிழலாம். அதோடு இங்கு ஷாப்பிங் செய்வதும் பயணிகளிடையே அதிகமாக காணக்கூடிய பொழுதுபோக்கு. ஆனால் நீங்கள் பேரம் பேசும் வித்தையை அறிந்து வைத்திருப்பது நல்லது.

டோனா பௌலாவை வாடகை கார்கள் மற்றும் பேருந்துகள் மூலம் சுலபமாக அடைந்து விடலாம். அதோடு பைக் அல்லது கார்களை தனி வாடகைக்கு எடுத்துக்கொண்டு டோனா பௌலாவுக்கு செல்வதும் சிறப்பானது. அப்படி நீங்கள் பட்சத்தில் ஆங்காங்கு காணப்படும் அகலமான அறிவுப்புப் பலகைகள் உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

டோனா பௌலா சிறப்பு

டோனா பௌலா வானிலை

சிறந்த காலநிலை டோனா பௌலா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது டோனா பௌலா

  • சாலை வழியாக
    கோவாவை மும்பையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 17 அல்லது மும்பை-கோவா நெடுஞ்சாலை மூலமாக அடையலாம். ஆனால் இந்த வழி உங்களை நீண்ட பயணத்துக்கு இட்டுச் செல்வதோடு, கொஞ்சம் ஆபத்தானதும் கூட. எனினும் மும்பையிலிருந்து புனே செல்லும் எக்ஸ்பிரஸ் வழியை பயன்படுத்தி, சதாரா நெடுஞ்சாலையை அடைந்து, அதன் பின்னர் சாவந்த்வாடியை அடைந்து விடலாம். அப்படி சாவந்த்வாடியை நீங்கள் அடைந்து விட்டால் அங்கிருந்து கோவா வருவதற்கு ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும். மேலும் மும்பை, புனே மற்றும் மற்ற மகாராஷ்டிர நகரங்களிலிருந்து ஏராளமான பேருந்துகள் கோவாவுக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்று அனைத்து பகுதிகளிலிருந்தும் கோவாவுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் மும்பை மற்றும் கோவாவுக்கு இடையில் இயக்கப்பட்டு வரும் ரயில்களில் பயணம் செய்வதற்கு பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு இரவு நேரத்தில் பயணம் செய்வது பலருக்கு சௌகரியமாக இருப்பதே காரணம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து தெற்கு கோவாவின் தபோலிம் விமான நிலையத்துக்கு எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனினும் கோவாவில் பன்னாட்டு விமான நிலையம் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு பயணிகள் மும்பை அல்லது டெல்லி போன்ற நகரங்களுக்கு வந்த பின்புதான் கோவாவை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 May,Mon
Return On
12 May,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 May,Mon
Check Out
12 May,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 May,Mon
Return On
12 May,Tue