பக்காலி – கடலோர எழில் அழகு!

பக்காலி எனப்படும் இந்த பொழுதுபோக்கு ஸ்தலம் மேற்கு வங்காள மாநிலத்தில் 24 பர்க்கானா மாவட்டத்தில் அமைந்துள்ளது. நகர சந்தடியிலிருந்து விலகி தூய்மையான இயற்கை சூழலை அனுபவிக்க ஏங்குபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமான இடம்.

கடற்கரையோடு கூடிய இரட்டை நகரம்

இரட்டை நகரங்களான பக்காலி மற்றும் ஃப்ரேசர்குஞ்ச் எனும் இரண்டு நகரங்களுக்கு இடையே 7 கி.மீ தூரத்துக்கு இந்த பக்காலி கடற்கரை தீவுப்பகுதி அமைந்துள்ளது.

இந்த கடற்கரைப்பகுதி கடினமான தரையுடன் காட்சியளிப்பதால் கடலை ஒட்டி சைக்கிள் சவாரி மற்றும் ஓட்டப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட முடியும் என்பது ஒரு சுவாரசிய அம்சம். மாநிலத்தலைநகரான கொல்கத்தாவிற்கு அருகிலேயே அமைந்துள்ளதால் இந்த கடற்கரைப்பகுதிக்கு பயணம் மேற்கொள்வதும் சுலபமாக உள்ளது.

சுற்றுலா அம்சங்கள்

தனிமையான இடத்தில் அமைந்திருப்பதுதான் இந்த தீவுக்கடற்கரையின் பிரதான சிறப்பம்சமாக கருதப்படுகிறது. பொதுப்போக்குவரத்து வசதிகள் இங்குஅதிகமில்லை என்றாலும் வேன் ரிக்ஷாக்கள் இங்கு பயணிகளின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

இவற்றின் மூலமாக ஹென்றி தீவு மற்றும் வாட்ச் டவர் எனப்படும் கண்காணிப்பு கோபுரம் போன்றவற்றுக்கு பயணிகள் விஜயம் செய்யலாம்.

ஹென்றி தீவில் கன்க்ரு, பாம், சுந்தரி மற்றும் இதர மரங்கள் ரம்மியமான தோற்றத்தை தரும் வகையில் வளர்ந்திருக்கின்றன. மாங்க்ரோவ் காடுகளும் இந்த தீவுப்பகுதியை ஒட்டி காணப்படுகின்றன.

ஜம்புத்வீப் சுற்றுலா

பக்காலி தீவுக்கு அருகிலேயே அமைந்துள்ள ஜம்புத்வீப் எனும் மற்றொரு அழகிய தீவுப்பகுதிக்கும் பயணிகள் விஜயம் செய்யலாம். புத் புதி எனும் நாட்டுப்படகுகளின் மூலமாக இந்த தீவுக்கு செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்த ஜம்புத்வீப் தீவில் இறங்கி சுற்றிப்பார்ப்பதற்கு அனுமதி இல்லை.

படகில் இருந்தபடியே பயணிகள் தீவின் அழகை பார்த்து ரசிக்கலாம். எனினும் இந்த அற்புதம் அனுபவம் தவறவிடக்கூடாத ஒன்றாகும்.

பிரயாண வசதிகள்

சாலைப்போக்குவரத்து, ரயில் மற்றும் விமான மார்க்கம் போன்ற மூவழிகள் மூலமாகவும் இந்த வித்தியாசமான தீவுக்கடற்கரைக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

Please Wait while comments are loading...