Search
  • Follow NativePlanet
Share

மிட்னாபூர் - யாத்ரிகர்களின் ஸ்தலம்!

9

ஒரு காலத்தில் கலிங்கத்து அரசாட்சியின் ஒரு பகுதியாக இருந்த மிட்னாபூர், வெள்ளையர்களுக்கு எதிராக பல சுதந்திர போராட்ட தியாகிகளை தந்துள்ளதால் புகழ் பெற்று விளங்குகிறது. தற்போது இந்த நகரம் கங்சபடி நதிக்கரையில் அமைந்துள்ளது. தலைநகரமான கொல்கத்தாவிற்கு மிக அருகில் இருப்பதாலும் இந்த இடம் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.

பெயரில் உள்ள மர்மம்!

இந்த நகரத்தின் பெயரை பற்றி தெரிந்து கொள்ளும் போது சுவாரசியாமாக இருக்கும். ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் இதற்கு ஒவ்வொரு கதையை கூறுகின்றனர். இங்குள்ள உள்ளூர் கடவுளான மெடினிமாதாவின் நினைவாக இந்நகரம் இப்பெயரை பெற்றது என்று ஹிந்துக்கள் நம்புகின்றனர்.

ஆனால் இஸ்லாமியர்களோ பல மசூதிகளை கொண்ட அவர்களின் புனித ஸ்தலமான மெடினாவின் நினைவாக இந்நகரம் இப்பெயரை பெற்றது என்று நம்பி வருகின்றனர்.

மிட்னாபூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

மிட்னாபூரில் வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலாத் தலங்கள் பல உள்ளன. சப்லேஷ்வர் சிவன் கோவில், ஜகன்னாத் கோவில் மற்றும் அனைத்து மசூதிகளும் தர்காஹ்களும் தான் அவைகளில் சில.

காளி தேவியின் பக்தர்கள் பட்டலா கோவிலுக்கு அடிக்கடி வருவார்கள். மேற்கு வங்காளத்தில் உள்ள மற்ற நகரங்களை போல மிட்னாபூருக்கும் துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் காளி பூஜைகளின் போது வருவதே உகந்த நேரமாக இருக்கும்.

திருவிழாக்களின் போது நகரமே வண்ணமயமாக காட்சி அளிக்கும். இந்நேரத்தில் நகரத்தில் பல இடங்களில் பந்தல்களும், ஷாமியானக்களும் அமைக்கப்பட்டிருக்கும்.

மிட்னாபூரில் கல்வி!

சுற்றுலாப் ஈர்ப்புகளை தவிர மிட்னாபூரில் சில முக்கியமான பள்ளிகளும் பல்கலைகழகங்களும் உள்ளன. இந்த பல்கலைகழங்களில் படிப்பதற்காக மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் இருந்து கூட மாணவர்கள் வருகின்றனர்.

இங்குள்ள உள்ளூர்வாசிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் நடை பயணம் மேற்கொள்வதால் இங்கு பல பூங்காக்கள் கட்டப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டும் வருகின்றன.

மிட்னாபூரை அடைவது எப்படி?

மிட்னாபூரை முக்கிய நகரங்களிலிருந்து விமானம், இரயில் மற்றும் சாலை வழியாக சுலபமாக வந்தடையலாம்.

மிட்னாபூர் சிறப்பு

மிட்னாபூர் வானிலை

சிறந்த காலநிலை மிட்னாபூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மிட்னாபூர்

  • சாலை வழியாக
    மிட்னாபூரை, கொல்கத்தாவில் இருந்து தேசிய நெடுஞ்சாலை-6 வழியாக வந்தடையலாம். கொல்கத்தாவிலிருந்து 129 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மிட்னாபூர்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மிட்னாபூரிலேயே ஒரு இரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து மாநிலத்தில் உள்ள மற்ற இடங்களுக்கு இரயில்கள் இயங்கி வருகின்றன. சில முக்கியமான தொலைதூர இரயில்கள் இந்த இரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன. இங்கே வருவதற்கு கரக்பூர் இரயில் நிலையம் மூலமாகவும் வரலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மிட்னாபூருக்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையம் கொல்கத்தாவில் உள்ளது. இங்கிருந்து இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து சில வெளிநாடுகளுக்கும் கூட விமான சேவை உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat