Search
  • Follow NativePlanet
Share

ஜார்கிராம் – அமைதி தவழும் எழிற்பிரதேசம்!

10

எங்கும் அமைதி தவழும் தவழும் ஒரு அற்புத நகரமாக இந்த ‘ஜார்கிராம்’ வீற்றிருக்கிறது. மேற்குவங்காள மாநிலத்தின் தென்பகுதியில் அமைந்திருக்கும் இந்த நகரம் பசுமையான காட்டுப்பகுதி மற்றும் சிவப்பு நிற மண் போன்றவற்றை கொண்டிருக்கிறது. வித்தியாசமான ஒரு விடுமுறைப்பயணம் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் இந்த நகரத்துக்கு வரலாம். இங்குள்ள காடுகளில் சால் மற்றும் மொஹுவா மரங்கள் நிரம்பியுள்ளன.

வரலாற்றுப்பின்னணி கொண்ட கோயில்கள், அரண்மனைகள் போன்றவை இந்நகரத்தில் சுற்றுலாப்பயணிகளுக்காக காத்திருக்கின்றன. ஜார்கிராம் மக்கள் பெங்காளி இசை மற்றும் நடன வடிவங்களின் ரசிகர்களாகவும் காணப்படுகின்றனர்.

வணிக நோக்கு கலந்த சுற்றுலா செயல்பாடுகள் இல்லாமல் தூய்மையான இயல்புகளுடன் காட்சியளிக்கும் இந்நகரம் பயணிகளை வெகுவாக கவரும் என்பதில் சந்தேகமில்லை.

இது பெல்பஹாரி மற்றும் கங்க்ராஜோல் மலைத்தொடர்களுக்கிடையே அமைந்திருப்பதால் புகைப்பட பிரியர்களுக்கு விருந்தாக ஏராளமான இயற்கைக்காட்சிகள் இங்கு பரந்து கிடக்கின்றன.

ஜார்கிராம் பகுதியில் சுவாரசிய சுற்றுலா அம்சங்கள்

இயற்கை எழிற்காட்சிகள் மட்டுமல்லாது இங்கு ஆன்மீக யாத்திரை ஸ்தலங்களும் நிரம்பியுள்ளன. சிவனுக்கான உமாபதி கோயில் ஜார்கிராம் பகுதியில் பிரபலமான கோயிலாக வீற்றிருக்கிறது.

மேலும் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட குரும்பேரா கோட்டை இங்கு வரலாற்று ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த கோட்டையில் ஒரிய மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு குறிப்புகள் காணப்படுகின்றன. இது ஒரு முக்கியமான தொல்லியல் சான்றாக கருதப்படுகிறது.

ஜார்கிராம் நகரத்தில் இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாக ஆலம்பூர், துர்க்கைக்கான கானக் கோயில், மான் பூங்கா, ஜங்கிள் மஹால் மற்றும் சாபித்ரி கோயில் போன்றவை அமைந்திருக்கின்றன.

துர்க்கா பூஜா மற்றும் காளி பூஜா போன்ற திருவிழாக்காலங்களில் இந்த நகருக்கு விஜயம் செய்வது சிறந்தது. அச்சமயம் வண்ணமயமான கொண்டாட்டங்கள் மற்றும் வண்ணவிளக்கு அலங்காரங்களுடன் ஜார்கிராம் நகரம் பிரகாசிக்கிறது.

நல்லதொரு விடுமுறை நகரம்

கொல்கத்தாவிலிருந்து 172 கி.மீ தூரத்தில் உள்ளதால் கல்கத்தாவிலிருந்து சிறிய விடுமுறை பொழுதுபோக்கு பயணமாக இந்நகருக்கு வரலாம். தங்குவதற்கான விடுதிகள் மற்றும் உணவகங்கள் போன்ற வசதிகள் இந்த நகரத்தில் குறைவின்றி கிடைக்கின்றன.

போக்குவரத்து வசதிகள்

உள்ளூர் போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லை என்பதால் வாடகை வாகனங்களை சொந்த உபயோகத்துக்கு அமர்த்திக்கொள்வது நல்லது. பயணிகள் தாமே பயன்படுத்திக்கொள்வதற்கான வாகனங்களும் இங்கு வாடகைக்கு கிடைக்கின்றன.

விஜயம் செய்ய ஏற்ற பருவம்

குளிர் காலத்தில் இங்கு இனிமையான பருவநிலை நிலவுவதால் இதுவே ஜார்கிராம் நகருக்கு சுற்றுலா விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.

ஜார்கிராம் சிறப்பு

ஜார்கிராம் வானிலை

சிறந்த காலநிலை ஜார்கிராம்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஜார்கிராம்

  • சாலை வழியாக
    தேசிய நெடுஞ்சாலை 6 ஜார்கிராம் நகரம் வழியாக செல்கிறது. மேலும் கொல்கத்தா நகரம் இங்கிருந்து 172 கி.மீ தூரத்தில் உள்ளதால் சாலைப்போக்குவரத்து வசதிகளுக்கு குறைவே இல்லை.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ஜார்கிராம் நகரிலுள்ள ரயில் நிலையத்துக்கு மேற்கு வங்காள மாநிலத்தின் இதர நகரங்களிலிருந்து ரயில் சேவைகள் உள்ளன. சில முக்கிய நகரங்களிலிருந்து வரும் ரயில்களும் இந்த ரயில் நிலையம் வழியாக செல்கின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கொல்கத்தா விமான நிலையம் ஜார்கிராம் நகருக்கு அருகில் உள்ளது. இந்தியாவில் எந்த பகுதியிலிருந்தும் இந்த விமான நிலையம் மூலமாக ஜார்கிராம் வரமுடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri