Search
  • Follow NativePlanet
Share

அலாங் -  பள்ளத்தாக்குகளுடன் சேர்ந்து விளையாடுவோம்!

27

அருணாச்சல பிரதேசம் மேற்கு ஷியாங் மாவட்டத்தில்  மலைகளுக்கு மத்தியில் பல்வேறு சிறிய கிராமங்களை உள்ளடக்கிய ஒரு அழகிய நகரம் அலாங் ஆகும். அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்த நகரம் யொம்கோ மற்றும் ஸிபு என்கிற இரண்டு ஆறுகளின் கரைகளில் அமைந்துள்ளது. இந்த இரண்டு ஆறுகளும் ஷியாங் ஆற்றின் கிளையாறுகள் ஆகும். இந்த நகரம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 300 மீ உயரத்தில் அமையப்பெற்றிருக்கிறது.

இந்த நகரத்தின் எழில் மிகு இயற்கைக் காட்சிகள், மற்றும் மலைகளின் அமைதியான மற்றும் அழகிய பள்ளத்தாக்குகளின் கண்ணுக்கினிய காட்சியானது உங்களுக்கு ஒரு முடிவில்லா பயணத்தை இயற்கை அன்னையின் மடியில் வழங்குகிறது.

இந்த நகரம் மேற்கு ஷியாங் மாவட்டத்தின் தலைநகர் ஆகும். மலையேற்றம், டெரெக்கிங் மற்றும் படகுச் சவாரி போன்றவற்றிற்கு அலாங் ஒரு சிறந்த இடமாகும். இந்த நகரம் கரும்பு மற்றும் மூங்கில் பொருட்களுக்கு மிகவும் பிரபலமானது.

மேலும் இந்த பிராந்தியத்தில் உள்ள பழங்குடி மக்களால்  உருவாக்கப்படும் சால்வைகள், ஜாக்கெட்டுகள் மற்றும் பைகள் போன்ற சில கைத்தறி தயாரிப்புகள் மிகப் பிரபலமாக விளங்குகிறது.

அலாங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மிக முக்கியமான இடங்கள்

அலாங்கைச் சுற்றி சிறியதும் மற்றும் பெரியதுமாகிய பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. பாட்டும் பாலம், தொங்கும் பாலங்கள், தடைசெய்யப்பட்ட மெச்ஹுக பள்ளத்தாக்கு, ஆகாஷகங்கா கோவில், டொனியோ கோவில், மிதுன் மற்றும் ஜெர்சி கலப்பு வளர்ப்பு பண்ணை, புவாக் காட், மாலிநித்ஹன், ராமகிருஷ்ண ஆசிரமம், கம்கி நீர்மின்சார அணை போன்றவை மிக முக்கியமான சுற்றுலா தலங்கள் ஆகும்.

இங்குள்ள ஆர்க்கிட் பாதுகாப்பப்பட்ட வனம் பல்வேறு அரிய மற்றும் அழிந்து வரும் உயிரினங்களுக்கு புகலிடமாக உள்ளதால், இந்த வனம் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.

அலாங் சிறப்பு

அலாங் வானிலை

சிறந்த காலநிலை அலாங்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது அலாங்

  • சாலை வழியாக
    அலாங் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 52 அலாங்கை பாஸிகாட்டுடன் இணைக்கிறது. பேருந்துகள் மற்றும் தனியார் போக்குவரத்து சாதனங்கள் அலாங்கை அடைய உதவுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    அலாங்கிற்கு அருகில் உள்ள ரயில் நிலையம் ஸிலபத்ஹர் ரயில் நிலையம் ஆகும். அலாங்கிற்கு நேரிடையான ரயில் போக்குவரத்து கிடையாது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    அலாங்கை மற்ற பகுதிகளுடன் இணைக்க உதவும் ஒரு விமான நிலையம் உள்ளது. மேலும் அலாங்கை பார்ப்பதற்கு உதவும் ஹெலிகாப்டர் சேவையானது இட்டாநகர், ஸிரொ மற்றும் டாபொரிஜோ போன்ற இடங்களில் இருந்து கிடைக்கிறது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri