Search
  • Follow NativePlanet
Share

தேஸு - அழகிய பள்ளத்தாக்குகளும், எழில் கொஞ்சும் நதிகளும்!

8

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தின் லோஹிட் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் தான் தேஸு. இந்த சிறு நகரம் அதன் அழகிய பள்ளத்தாக்குகள் மற்றும் ஆறுகளுக்காக புகழ் பெற்ற இடமாகும். இந்த நிலப்பகுதிகளின் பழமையான பூர்வகுடிகளாக மிஸ்மி பழங்குடியினர் உள்ளனர். இவர்கள் மகாபாரத காலத்திலிருந்தே இங்கே வாழ்ந்து வருகின்றனர்.

கிருஷ்ணரின் முதல் மனைவியான ருக்மினி மிஸ்மி டேம்செல் என்றும் சொல்லப்படுகிறது. மிஸ்மி இனத்தவர் கொண்டாடும் முக்கியமான பண்டிகையாக தம்லாடு பூஜா உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 15-ம் நாளில் கொண்டாப்படும் இந்த திருவிழாவின் போது எல்லா இனத்தவரும் இதன் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள அழைக்கப்படுவார்கள்.

சிறிய நகரமான தேஸு-வில் காணத்தகுந்த சில முக்கியமான சுற்றுலா தலங்கள் உள்ளன. புகழ் பெற்ற புனிதத் தலமான பரசுராம் குந்த் என்ற தலம், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை அருகிலுள்ள நாடுகளிலிருந்தும் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் கவர்ந்திழுக்கும் இடமாக உள்ளது. இங்கிருக்கும் நீரில் புனித நீராடவும், தங்களுடைய பாவங்களை களையவும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதத்திலும், ஒரு கண்காட்சி  இங்கே நடத்தப்படுகிறது. இது மட்டுமல்லாமல் க்ளோவ் லேக், ஹவா கேம்ப் மற்றும் வெந்நீர் ஊற்று ஆகிய சுற்றுலாத் தலங்களும் உள்ளன.

தேஸுவின் மக்கள்

உள்ளூரில் லாமா கேம்ப் என்று அழைக்கப்படும் குடியேற்றப் பகுதியில் வசித்து வரும் 2000 திபெத்திய இனத்தவர் தான் தேஸுவின் மக்களில் முக்கியமான பிரிவினராவார்கள்.

தேஸு மார்க்கட் பகுதியிலிருந்து 6 கிமீ தொலைவிலுள்ள தின்டோலாங் என்ற இடத்தில் இந்த கேம்ப் அமைந்துள்ளது மற்றும் இங்கிருக்கும் 5 முகாம்களும் காம் கோங்போ மற்றும் பெமாகோ என்ற திபெத்திய பிரதேசங்களைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளன.

இந்த வசித்து வரும் திபெத்திய இனத்தவர் 1960-ம் ஆண்டில் சீனப்படையினர், தாயகமான திபெத்தை கைப்பற்றிய போது இங்கு வந்து குடியேறினார்கள்.

இன்றைய நாள் வரையிலும், திபெத்திய இனத்தவரான இவர்கள் தங்களுடைய வழக்காறுகள் மற்றும் பாரம்பரியங்களை இங்கே பின்பற்றி வருபவர்களாகவும், இதன் அடிப்படையிலேயே மடாலயங்கள், மருத்துவ மையங்கள், செவிலியர் இல்லங்கள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றை அரசு மற்றும் பிறரின் நிதி உதவியுடன் கட்டியுள்ளனர்.

தேஸுவை அடையும் வழிகள்

தேஸுவை சாலை, இரயில் மற்றும் விமானம் வழியாக எளிதில் அடைந்திட முடியும். மிகவும் அருகிலுள்ள இரயில் நிலையமாக தின்சுகியா உள்ளது. தேஸுவில் டாக்ஸிகளும், பேருந்துகளும் முக்கியமான போக்குவரத்து சாதனங்களாக உள்ளன.

தேஸுவிற்கு சுற்றுலா வரத்தகுந்த நாட்கள்

டிசம்பர் முதல் பிப்ரவரி வரையில் இருக்கும் குளிர்காலத்தில் தேஸுவிற்கு வருகை புரிவது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்.

தேஸு சிறப்பு

தேஸு வானிலை

சிறந்த காலநிலை தேஸு

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது தேஸு

  • சாலை வழியாக
    தேஸுவை சாலை வழியாகவும் எளிதில் அடைய முடியும். டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் இதில் முதன்iயான வாகனங்களாக உள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    தேஸுவிற்கு மிகவும் அருகிலுள்ள இரயில் நிலையமாக தின்சுகியா இரயில் நிலையம் உள்ளது. இரயில் மூலமாக இந்த இடத்திற்கு வருவது மிகவும் வசதியான பயணமாக இருக்கும். இந்த இரயில் நிலையம் இந்தியாவின் பிற நகரங்களுடன் மிகவும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    தேஸுவில் உள்ள சிறிய விமான நிலையம் ஒப்பந்த விமானங்களுக்காக (Charer Flights) செயல்படும் விமான நிலையமாகும். தேஸுவிற்கு அருகில் உள்ள பயணிகள் விமான நிலையமாக மோஹபாரியில் உள்ள விமான நிலையம் உள்ளது. திப்ரூகரில் உள்ள இந்த விமான நிலையத்திலிருந்து கௌகாத்தி, இடாநகர் மற்றும் டெல்லி விமான நிலையங்களுக்கு தொடர்ச்சியான விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. விமானத்தில் வர விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதுதான் மிகவும் ஏற்ற விமான வழியாக இருக்கும். இந்த விமான நிலையத்திற்கு வெளியிலேயே ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.7/- வீதம் வாடகை டாக்ஸிகளை அமர்த்திக் கொண்டு தேஸு செல்ல முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 May,Sat
Check Out
10 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun