பசிகாட்- அருணாச்சல பிரதேசத்தின் பழமையான நகரம்!

அருணாச்சல பிரதேசத்தின் நுழைவாயில் எனக் கருதப்படும் பசிகாட் அம்மாநிலத்தின் மிகப்பழமையான நகரமாகும். 1911ல் ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இவ்வூர் கிழக்கு சியாங் மாவட்டத்தின் தலைமையிடமாக விளங்குகிறது. கடல் மட்டத்தில் இருந்து 152மீ உயரத்தில் இருக்கும் பசிகாட், சியாங் நதியின் கரையில் அமைந்துள்ளது.  

உள்ளூர் மக்களின் முக்கியத்தொழிலாக விவசாயம் விளங்குகிறது. முதன்மைப் பயிரான அரிசி தவிர்த்து தேயிலைத் தோட்டங்கள் நிறைய இருக்கின்றன. தோட்டக்கலை மற்றும் விவசாயம் ஆகிவற்றுடன் சுற்றுலாத்துறையும் பசிகாட்டின் வருமானத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.

பசிகாட் நகருக்கு அருகில் உள்ள சுற்றுலாத்தலங்கள்

சாகச விளையாட்டுகளுக்காகவும் இயற்கை எழில் நிறைந்த இடங்களுக்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது. நீர்வீழ்ச்சிகள், தொங்குபாலங்கள், மலை உச்சிகள் என பல ரம்மியமான இடங்கள் நிறைந்த பசிகாட் ஓய்வெடுக்க சிறந்த தளமாக கருதப்படுகிறது. டேயிங் எரிங் சரணாலயம் மற்றும் பான்ஜின் ஆகிய இடங்களும் இங்கு உள்ளன.  

கலாச்சார செழுமை!

ஆதிவாசிகளால் நிறைந்த பசிகாட்டில் தான் ஆதி வாசிகளின் மொழிகள் தோன்றியதாகக் கருதப்படுகிறது. பசிகாட் நகரின் பூர்வகுடிகள் செழுமையான கலாச்சாரத்தையும், பழக்கவழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள்.

இங்கு கொண்டாடப்படும் மோபின், சலோங் ஆகிய விழாக்கள் நிரம்ப ஆர்வத்துடன் கொண்டாடப்படுகின்றன. பெரும்பாலும் தீய சக்திகளை விரட்டுவதற்காகவும், கெட்ட விஷயங்களை தங்கள் வாழ்க்கையில் இருந்து தூரத் தள்ளவும் உள்ளூர் மக்கள் தங்கள் தெய்வத்தை வழிபடுகின்றனர்.

நெல் விதைக்கும் பருவத்திற்கு முன்பு, அதாவது ஏப்ரல் மாதத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. சோலங் விழா ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.

Please Wait while comments are loading...