ஜிரோ – இயற்கையின் திணரடிக்கிற அழகிற்குள் ஒரு பயணம்!

ஜிரோ என்ற அழகான சிறிய மலை நகரம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழைய நகரங்களில் ஒன்றாகும். நெற்பயிர்களை கொண்ட நிலங்கள் மற்றும் பைன் மரங்களால் சூழ்ந்துள்ளது இந்த நகரம். இந்த வட்டாரத்தில் பரவி கிடக்கும் பெரிய காடான இது பல பழங்குடியினருக்கும் வீடாக அமைந்திருக்கிறது. இந்த அழகிய நகரம் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு காணப்படும் பல வகையான தாவரங்களும், விலங்கினமும் இயற்கை காதலர்களை கவர்ந்திழுக்கும் அம்சங்கள்.

இங்கு காணப்படும் அபடணி பழங்குடியினர்  இயற்கை கடவுளை வழிபடுகின்றனர். ஈர நில வேளாண்மை போக தங்கள் வாழ்வாதாரத்துக்காக கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்தறி பொருள்களையும் தயாரித்து விற்கின்றனர். மற்ற பழங்குடியினரை போல இவர்கள் நாடோடிகள் அல்ல. இவர்கள் ஜிரோ வட்டாரத்தில் நிரந்தரமாக வசிக்கும் மக்களாவார்கள்.

ஜிரோ மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்

பசுமையான டால்லி பள்ளத்தாக்கு, ஜிரோ புடு என்ற சிறு குன்று, டரின் மீன் பண்ணை, கார்டோவில் உள்ள உயரமான சிவலிங்கம் ஆகியவைகள் தான் ஜிரோவின் முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.

அபடணி மக்கள் இங்கு பல திருவிழாக்களை கொண்டாடுகிறார்கள். மார்ச் மாதம் கொண்டாடப்படும் மியோகோ திருவிழா, ஜனவரி மாதம் கொண்டாடப்படும் முருங் திருவிழா மற்றும் ஜூலை மாதம் கொண்டாடப்படும் ட்ரீ திருவிழா போன்றவைகள் மிகவும் பிரசித்தியானவைகள்.

ஜிரோவிற்கு சுற்றுலா வர சிறந்த பருவம்

திருவிழா நேரத்தில் ஜிரோவிற்கு சுற்றுலா வந்தால் அருணாச்சல பிரதேசத்தின் நாட்டுப்புற கலையை கண்டு கழிக்க வாய்ப்பு கிடைப்பதால் இக்காலத்தில் இங்கு வருவதே சிறந்த காலமாகும்.

Please Wait while comments are loading...