Search
  • Follow NativePlanet
Share

காஸிரங்கா - காண்டாமிருகங்களின் தேசம்

24

அஸ்ஸாம் மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கும் இடங்களில் ஒன்றாக காஸிரங்கா தேசிய பூங்கா உள்ளது. அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றான இந்திய காண்டாமிருகங்களையும், 2006-ம் ஆண்டில் புலிகள் பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு உலகிலேயே அதிக அடர்த்தியில் புலிகளை உடைய இடமாகவும் இந்த தேசிய பூங்கா உள்ளது.

இது மட்டுமல்லாமல் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய பூங்கா சுமார் 429.93 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகாட் மற்றும் நோவாகோன் மாவட்டங்களில் இந்த பூங்கா அமைந்துள்ளது.

ஓற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அல்லது புலிகளைப் பார்ப்பதுடன் காஸிரங்கா சுற்றுலாப் பயணம் முடிவடைந்து விடாமல், மிகப்பெரிய உடலமைப்பை உடைய தாவர உண்ணிகளான ஆசிய யானைகள், ஆசிய நீர் எருமைகள் மற்றும் சேற்று மான்கள் ஆகியவற்றையும் இங்கே பரந்து விரிந்திருக்கும் நிலப்பகுதிகளில் காண முடியும்.

இந்த சரணாலயத்தில் பறவைகளை பாதுகாப்பதற்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளின் காரணமாக பேர்டு லைஃப் இண்டர்நேஷனல் அமைப்பு இந்த தேசிய பூங்காவை முக்கியமான பறவைகள் பாதுகாப்பு மையங்களில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளது.

தேசிய பூங்காவிற்குள் யானை பாகன்களின் வழிகாட்டுதல்களுடன் செய்யப்படும் யானை சவாரிகள் - காஸிரங்கா சுற்றுலாவின் முக்கிய அம்சம்

நன்கு பயிற்சி பெற்ற பாகன்களின் (மகுட்) துணையுடன் காடுகளுக்குள் சுற்றித் திரிவது காஸிரங்கா சரணாலயத்தின் மிகவும் கவர்ச்சியான அம்சமாகும். பிரம்மாண்டமான விலங்குகளை அருகில் நின்று ரசிப்பதற்கான ஒரு பயணமாகவே இது உள்ளது.

இவை மட்டுமல்லாமல் ஜுப்கள் மற்றும் 4WD வாகனங்களிலும் இந்த தேசிய பூங்காவை சுற்றிப் பார்க்க முடியும். இந்த வாகனங்களை பூங்காவின் நிர்வாக அலுவலகத்தில் முன்னதாகவே பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

காஸிரங்கா தேசிய பூங்காவை சுற்றியுள்ள ஆர்வமூட்டக்கூடிய பார்வையிடங்கள்!

காஸிரங்கா தேசிய பூங்கா சுற்றுலாப் பயணம் என்பது அதன் உள்பகுதியுடன் நின்று விடாமல் அதனைச் சுற்றியுள்ள வேறு சில இடங்களுக்கும் நம்மை அழைத்துச் செல்கின்றது. அருகிலுள்ள சோனிட்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபூர் ஒரு வரலாற்றுச் சிறப்பு பெற்ற நகரமாகும்.

இங்கிருக்கும் காகோக்சாங் நீர்வீழ்ச்சியும் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. கோலாகாட் மாவட்டத்தின் நுமாலிகார் பகுதியில் உள்ள தியோபர்பத் சிதைவுகளையும் சுற்றுலாப் பயணிகள் இநத சுற்றுலாப் பயணத்தில் காண முடியும்.

காஸிரங்காவை அடையும் வழிகள்

காஸிரங்கா தேசிய பூங்காவாக இருப்பதால் அதனை சாலை வழியாக அடைவதே முதன்மையான போக்குவரத்து வழிமுறையாக இருக்கும். கௌகாத்தியிலிருந்து 225 கிமீ தொலைவில் இருப்பதால், ஒரு வாடகை காரில் இந்த பூங்காவிற்கு செல்வது சிறந்த வழிமுறையாக இருக்கும்.

இதற்கு அருகிலுள்ள பிற நகரங்களான தேஸ்பூரும், கோலாகாட்டும் மாநிலத்தின் பிற பகுதிகளுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

காஸிரங்காவின் பருவநிலை

காஸிரங்கா அதிக அளவு மழைப்பொழிவு பெறும் இடமாகும். இதன் காரணமாகவே வருடத்தின் சில மாதங்கள் மூடியே இருக்கும். இந்த தேசிய பூங்காவில் கோடை, மழை மற்றும் குளிர்காலம் ஆகிய மூன்று பருவநிலைகள் நிலவுகிறது.

கோடைக்காலத்தில் வறண்டும், அனல் காற்றுடனும் இருக்கும் இந்த சரணாலயம், மழைக்காலத்தில் வெள்ளத்தில் மூழ்கி விடும். எனவே, குளிர்காலம் இந்த தேசிய பூங்காவிற்கு சுற்றுலா வர சிறந்த பருவமாகும்.

காஸிரங்கா சிறப்பு

காஸிரங்கா வானிலை

சிறந்த காலநிலை காஸிரங்கா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது காஸிரங்கா

  • சாலை வழியாக
    காஸிரங்கா தேசிய பூங்காவின் வாழ்க்கையோட்டமாக சாலைப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை எண் 37A காஸிரங்கா தேசிய பூங்காவுடன் - கௌகாத்தி மற்றும் மேல் அஸ்ஸாம் பகுதிகளை இணைக்கும் சாலையாக உள்ளது. 80 கிமீ தொலைவில் உள்ள தேஸ்பூர், காஸிரங்காவிற்கு மிகவும் அருகிலுள்ள மற்றுமொரு முக்கிய நகரமாகும். கௌகாத்தியில் இருந்து நேரடியாக காஸிரங்கா வர விரும்பும் சுற்றுலாப் பயணிகள் சில பேருந்துகள் அல்லது வாடகை கார்களில் வரலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    69 கிமீ தொலைவில் உள்ள பர்கேட்டிங் இரயில் நிலையத்தில் சில இரயில்கள் நின்று செல்லும். எனினும் முக்கியமான இரயில் நிலையமான மரியானி இரயில் நிலையம் 98 கிமீ தொலைவில் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் திப்ரூகர் செல்லும் இரயில் மரியானி இரயில் நிலையம் வரை வந்து, அங்கிருந்து காஸிரங்காவிற்கு பயணம் செய்ய துவங்கலாம். மேலும், வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பரபரப்பான இரயில் நிலையமான கௌகாத்தி இரயில் நிலையத்திலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் காஸிரங்காவிற்கு வரலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    80 கிமீ தொலைவிலுள்ள ஜோர்கட் விமான நிலையம் தான் காஸிரங்கா தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள விமான நிலையமாகும். ஜோர்கட் விமான நிலையத்திலிருந்து கௌகாத்தி மற்றும் கொல்கத்தாவிற்கு தொடர்ச்சியான விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. மிகவும் அருகிலுள்ள விமான நிலையமாக கௌகாத்தியிலுள்ள லோக்பிரியா கோபிநாத் பர்தோலாய் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் காஸிரங்கா தேசிய பூங்காவிலிருந்து 223 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
05 Feb,Sun
Return On
06 Feb,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
05 Feb,Sun
Check Out
06 Feb,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
05 Feb,Sun
Return On
06 Feb,Mon