அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காண வேண்டிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கும் போம்டிலா என்ற சிறு நகரம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கிழக்கு இமயமலைத் தொடர்களினூடாக அமைந்திருக்கும் போம்டிலா அற்புதமான சுற்றுப்புறத்தைக் கொண்டிருக்கும் நகரமாகும். இயற்கையழகு மற்றும் ஆப்பிள் தோட்டடங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள போம்டிலாவில் பௌத்த மடாலங்களும் உள்ளன. நிறைய மலையேற்றப் பாதைகளும் உள்ளதால், சாகசம் செய்ய விரும்புபவர்கள் வந்து செல்ல வேண்டிய இடமாகவும் போம்டிலா உள்ளது.
போம்டிலாவின் வரலாற்று சுருக்கம்
மத்திய காலங்களில் போம்டிலா திபெத்திற்கு சொந்தமான இடமாக இருந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. மேலும், உள்ளூர் பழங்குடியின தலைவர்கள மற்றம் பூடான் ஆட்சியாளர்களும் இந்த நகரத்தை ஆண்டு வந்திருக்கின்றனர்.
1873-ம் ஆண்டில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்தது. 1962-ம் ஆண்டில் போம்டிலாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீனப்படை ஆக்கிரமிப்பு செய்து, பின்னர் பின் வாங்கிச் சென்று விட்டது.
1947-ம் ஆண்டிலிருந்தே இந்தியா மற்றும் சீனாவிற்கு பிரச்னை மிகுந்த விஷயமாகவே அருணாச்சல பிரதேசம் இருந்து வருகிறது.
போம்டிலாவைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்
போம்டிலா ஒரு முதன்மையான சுற்றுலாத் தலமாக உள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தின் தலைமையிடமாக இருக்கும் போம்டிலா, இயற்கையின் பேரழகை முழுமையாக கண்டு இரசிக்க மிகவும் ஏற்ற இடமாகும்.
போம்டிலாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மனதை மயக்கும் இமயமலை சமவெளிகளையும், பனி-மூடிய சிகரங்களையும் காண முடியும்.
மேலும், இந்நகரத்தில் சுற்றுலாப் பயணிகள் காண வேண்டிய சில பௌத்த மடாலயங்களும் மற்றும் கோம்பாஸ்களும் உள்ளன. உள்ளூர் திபெத்திய உணவு வகைகளான மோமோஸ் மற்றும் தூபா ஆகிய உணவு வகைகளையும் சுற்றுலாப் பயணிகள் சுவைத்திட முடியும்.
போம்டிலாவின் அழகிய சுற்றுப் புறங்களை பார்வையிட்ட பின்னர் சில நினைவுப் பரிசுகளையும் சுற்றுலாப் பயணிகள் வாங்கிட முடியும். முக்கியமான கைவினை பொருள் மையம் மற்றும் பிற கடைகளில் கிடைக்கக் கூடிய பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்காக போம்டிலா புகழ் பெற்றிருக்கிறது.
சுற்றுலாப் பயணிகள் பல்வேறு வகையான கம்பளி விரிப்புகள் மற்றும் பாரம்பரிய முகமூடிகளையும் இங்கே வாங்கிட முடியும். இந்த கைவினைப் பொருள் மையம் மற்றும் மூன்று பௌத்த மடாலயங்கள் ஆகியவை கீழ் கோம்பா, மத்திய கோம்பா மற்றுமு; மேல் கோம்பா என்று அழைக்கப்படுகின்றன. இந்த இடங்கள் போம்டிலாவில் அதிகம் பார்வையிடப்பட்ட இடங்களாகும்.
போம்டிலாவிற்கு வடக்கில் இருக்கும் தவாங் என்ற சிறிய நகரம் பிரம்மாண்டமான மலைச் சமவெளிகளை காட்டும் இடமாக இருப்பதால், போம்டிலவிற்கு சுற்றுலா வருபவர்கள் இந்நகருக்கும் வந்து செல்லலாம்.
கடல் மட்டத்தில் இருந்து 34000 மீட்டர் உயரத்தில் உள்ள தவாங்கில், 400 ஆண்டுகள் பழமையான பௌத்த மடாலயம் ஒன்றும் உள்ளது.
இவை மட்டுமல்லாமல், போம்டிலாவில் உள்ள செஸ்ஸா ஆர்கிட் சரணாலயம், ஈகிள் நெஸ்ட் வனவிலங்கு சரணாலயம் மற்றும் காமெங் யானைகள் பாதுகாப்பகம் ஆகியவையுமம் பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக காத்துக் கொண்டுள்ளன.
போம்டிலாவின் பருவநிலை
போம்டிலாவில் நிலவும் அல்பைன் பருவநிலையில் குறுகிய கோடைக்காலமும், நீண்ட குளிர்காலமும் நிலவி வருகிறது.
போம்டிலாவை அடையும் வழிகள்
தேஸ்பூரிலிருந்து சாலை வழியாக 180 கிமீ மற்றும் தவாங்கில் இருந்து 160 கிமீ தொலைவில் போம்டிலா உள்ளது நீங்கள் கார்களில் பயணம் செய்யவில்லை எனில், உங்களுக்காகவே பேருந்து சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன.