Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போம்டிலா » ஈர்க்கும் இடங்கள் » போம்டிலாவின் கோம்பாஸ்

போம்டிலாவின் கோம்பாஸ், போம்டிலா

20

போம்டிலாவில் பௌத்த லாமாக்கள் மற்றும் துறவிகள் வசிக்கும் இடமாக GRL மடாலயம் என்று அழைக்கப்படும் கோன்ட்ஸே காடேன் ராப்கெய் லிங் மடாலயம் உள்ளது. மகாயான பௌத்த மதத்தில் பின்பற்றப்படும் லாமாயிச நம்பிக்கைகள் நிலவும் முக்கியமான மையங்களில் ஒன்றாகவும் இது உள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் அமைந்துள்ள GRL மடாலயத்தை ட்சோனா கோன்ட்ஸே ரின்போசே-வின் 12 மறுஅவதாரமாக 1965-66-ல் கட்டியுள்ளனர்.

இதன் முதன்மையானயான கோம்பாவில் உள்ள மூன்று பிரிவுகள்— கீழ் கோம்பா, மத்திய கோம்பா மற்றும் மேல் கோம்பா என்று அழைக்கப்படுகின்றன. மேல் கோம்பாதான் முதன்மையான மடாலயமாக உள்ளது.

முக்கிய சந்தைப் பகுதியின் முடிவில் அமைந்திருக்கும் கீழ் கோம்பாவில் திபெத்திய கட்டடிக்கலையின் வளத்தை காண முடியும். மத்திய கோம்பாவை இந்த சந்தையிலிருந்து 2 கிமீ தொலைவில் காண முடியும்.

கீழ் கோம்பாவில் ஒரு பெரிய பிரார்த்தனைக் கூடம் உள்ளது. இந்த கோம்பாவில் உள்ள மணிகளை அடிக்கும் போது நாம் எண்ணியது நடக்கும் என்பது இங்குள்ள நம்பிக்கையாகும்.

மத்திய கோம்பாவில் 'மருந்துகளின் கடவுள்' என்று அழைக்கப்படும் நீல மருந்து புத்தரைக்' காண முடியும். இவர் நோய்களை தீர்க்கும் சக்தி உள்ளவர் என்று உள்ளூர்; மக்களால் நம்பப்படுகிறார்.

நோய்கள் குணமாக்கும் பொருட்டாக இங்கு வரும் மக்கள் பிரார்த்தனை மற்றும் தியானம் செய்கின்றனர். இந்த மூன்று கோம்பாக்களில் பழமையானதாக மத்திய கோம்பா உள்ளது.

GRL மடாலயத்தல் கீழ் கோம்பா மற்றும் மத்திய கோம்பா மட்டுமல்லாமல், மேல் கோம்பாவும் ஒரு முக்கியமான இடமாக உள்ளது. இங்கே துறவிகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளி, பிரார்த்தனைக் கூடம் மற்றும் புத்தர் கோவில் ஆகியவை உள்ளன. மேல் கோம்பாவில் வழங்கப்படும் அமைதியான புத்தமத கருத்துகளுக்காகவே இந்த இடம் முதன்மையான சுற்றுலாத் தலமாக உள்ளது.

அமைதியான சூழலில் துடிப்பான கட்டிடத்தைக் கொண்டிருக்கும் இந்த கோம்பா பார்வையாளர்களுக்கு ஒப்பிட இயலாத அமைதியை மனதில் கொடுக்கும். தெற்கு திபெத்தின் ட்சோனாவில் உள்ள ட்சோனா கோன்ட்ஸே மடாலயத்தின் மறுபிரதியாகவே இந்த கோம்பா உள்ளது.

இந்த GRL மடாலயத்தில் துறவிகளும், லாமாக்களும் பிரார்த்தனை செய்வதற்கான ஒரு பிரார்த்தனைக் கூடமும் உள்ளது. முக்கிய கோம்பாவிற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் லாமாக்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த மடாலயத்தின் மூத்த லாமாக்கள் இளம் லாமாக்களுக்கு தந்த்ராயனா பயிற்சிகள் மற்றும் மடாலாய வாழக்கை முறையைப் பற்றியும் கல்வி புகட்டும் பணியை செய்து வருகின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu