Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போம்டிலா » ஈர்க்கும் இடங்கள் » ஈகிள்நெஸ்ட் வனவிலங்கு சரணாலயம்

ஈகிள்நெஸ்ட் வனவிலங்கு சரணாலயம், போம்டிலா

10

செஸ்ஸா ஆர்கிட் சரணாலயத்துடன் வடகிழக்கில் இணையுமாறு இருக்கும் ஈகில்நெஸ்ட் வனவிலங்கு சரணாலயம், மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள இமயமலைப் பகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.

1950-ம் ஆண்டில் இந்திய இராணுவத்தின் 'ரெட் ஈகிள் பிரிவு' இங்கு தங்கியிருந்ததால் இவ்விடம் 'ஈகிள்நெஸ்ட்' என்று பெயர் பெற்றது. இந்த இடத்திற்கு கிழக்கில் காமெங் நதி ஓடுகிறது.

ஈகிள்நெஸ்ட் வனவிலங்கு சரணாலயத்தில் பெரும் எண்ணிக்கையிலான பறவைகள் காணப்படுவதால் இது ஒரு புகழ் பெற்ற ‘பறவைகள் கவனிப்பிடமாக’ உள்ளது. தனிமையான இடத்தில் இருந்தாலும், மரங்களை வெட்டுதல் மற்றும் விலங்குகளை வேட்டையாடுதல் போனறவற்றிலிருந்து பாதுகாக்கப்படும் இடமாக இது உள்ளது.

இந்த சரணாலயத்தில் உள்ள சாலை வழியாக உயரமான இடங்களுக்கு செல்ல முடியும் என்பதால் இது இராணுவத்தினர், அறிவியலாளர்கள் மற்றும் சூழலியல்-சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியானதாக உள்ளது.

முதன்மையான பறவைகள் கவனிப்பிடமாக இருக்கும் ஈகிள்நெஸ்ட் வனவிலங்கு சரணாலயத்தில் கருப்பு ஸ்டார்க், ஓரியண்டல் வெள்ளை நாரைகள், வாத்துக்கள், கழுகுகள், நைட்ஜார், ஆந்தைகள், ஃபேரி-ப்ளூபேர்ட், வானம்பாடி, ஃப்ளைகேட்சர்ஸ், கிங்பிஷர்ஸ் மற்றும் பல என 454 வகையான பறவைகள் உள்ளன.

பறவைகள் மட்டுமல்லாமல், பாதுகாக்கப்பட்ட உயிரினமான தொப்பியுடைய லாங்கூர், வங்காளப் புலி, ஆசிய யானை, சிவப்பு பாண்டா, ஆசிய கருப்பு கரடி போன்ற 15 வகையான பாலூட்டிகளையும் கொண்டுள்ள இடமாக ஈகிள்நெஸ்ட் சரணாலயம் கொண்டுள்ளது.

மேலும், 34 வகையான நீர்-நில (இருவாழ்விகள்) வாழ் உயிரினங்களையும், 24 வகையான பாம்புகளையும் மற்றும் 7 வகையான பல்லிகளையும் இந்த சரணாலயத்தில் காணலாம். மேலும் அரிய வகை உயிரிகளான டார்ஜீலிங் பால்ஸ்-ஓநாய் பாம்பு மற்றும் குந்தெரின் குக்ரி பாம்புகள் போன்றவையும் ஈகிள்நெஸ்ட்டில் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Sep,Thu
Check Out
11 Sep,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri