Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போம்டிலா » ஈர்க்கும் இடங்கள் » காமெங் யானைகள் பாதுகாப்பகம்

காமெங் யானைகள் பாதுகாப்பகம், போம்டிலா

20

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மேற்கு காமெங் மற்றும் கிழக்கு காமெங் மாவட்டங்களில், இமயமலையின் அடிவாரப் பகுதிகளில் காமெங் யானைகள் சரணாலயம் உள்ளது. இந்த பகுதியில் பெருமளவில் காணப்படும் ஆசிய யானைகளை பாதுகாக்கும் பொருட்டாக இந்த சரணாலயம் 19 ஜுன் 2002-ம் நாள் உருவாக்கப்பட்டது.

காமெங் சரணாலயம் பாபும் ஆற்றிலிருந்து கிழக்காக நீண்டு அருணாச்சல பிரதேசம், பூடானின் எல்லையைத் தொடும் தூரம் வரையிலும் உள்ளது.

செஸ்ஸா ஆர்கிட் சரணாலயம், ஈகிள்நெஸ்ட் வனவிலங்குகள் சரணாலயம், பாகுலி புலிகள் பாதுகாப்பகம் மற்றும் கெல்லாங் வனப்பகுதியின் பாதுகாக்கப்பட்ட காடுகள் ஆகியவை அனைத்தும் இந்த யானைகள் பாதுகாப்பகத்தின் பகுதிகளாக உளளன.

காமெங் யானைகள் சரணாலயத்தில் அரை-மிதவெப்ப பசுமை மாறாக் காடுகள் உள்ளன. இந்த பாதுகாப்பகத்தில் இந்திய யானைகள், வங்காளப் புலி, சிறுத்தைப் புலி, க்ளெடட் சிறுத்தைப்புலி, சிவப்பு பாண்டா, கஸ்தூரி மான், சம்பார் வகை மான்கள், ஹாக் மான்கள், இமாலய கருப்புக் கரடிகள், காட்டு நாய், மீன் பிடிக்கும் பூனை, காட்டுப் பூனை, சுண்டா லோரிஸ், இந்திய பைசன், நரி, கருப்பு ராட்சச அணில், தொப்பியுடைய  லாங்குர், மஞ்சள் தொண்டை மார்ட்டென் மற்றும் பல உயிரினங்களைக் காண முடியும். இதற்கு மேலும், 250 வகையான பட்டாம் பூச்சிகள் மற்றும் 300 வகையான பறவைகளையும் இங்கே காண முடியும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri