Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போம்டிலா » ஈர்க்கும் இடங்கள் » செஸ்ஸா ஆர்கிட் சரணாலயம்

செஸ்ஸா ஆர்கிட் சரணாலயம், போம்டிலா

20

இமயமலை அடிவாரத்தில் உள்ள பாலுக்போங் பகுதியில் உள்ள 100 கிமீ அளவுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியான செஸ்ஸா ஆர்கிட் சரணாலயம் போம்டிலாவின் முதன்மையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

இது தென்மேற்கில் ஈகிள்நெஸ்ட் சரணாலயத்துடன் இணைகிறது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையினர் இந்த பகுதியில் மலையேற்றம் செய்வதற்கான பாதைகளை உருவாக்கி உள்ளதால், இந்த பகுதியில் பார்வையாளர்கள் ஆர்கிட்களின் இயற்கையான வாழ்விடத்தையும், மலையேற்றத்தையும் ஒரே நேரத்தில் இரசித்திட முடியும்.

சாகசத்தை விரும்பும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் இடங்களாக செஸ்ஸா சரணாலயத்தின் மேன்மையான மலைச் சமவெளிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் மலையிடுக்குகள் ஆகியவை உள்ளன. இங்கிருக்கும் தாவர வளர்ப்பு பண்ணையில் பல்வேறு வகையான ஆர்கிட்களையும் பார்க்க முடியும்.

அப்ரோட்ராபிக் ஆர்கிட்ஸ் உட்பட அழியக் கூடிய வகையிலான 7 ஆர்கிட் வகைகளுடன் இருக்கும் செஸ்ஸா ஆர்கிட் சரணாலயத்திற்கு வரும் இயற்கை விரும்பிகளின் கண்ணுக்கு அற்புதமான காட்சிகள் காத்துக் கொண்டுள்ளன.

டென்டோர்பியம், பல்போபைல்லம், கோயெலோகைன், எரியா, ஃபைய்யுஸ், லிபாரிஸ் மற்றும் பல வகையான ஆர்கிட்களை இந்த சரணாலயத்தில் காண முடியும். போம்டிலாவிற்கு செல்லும் வழியில் உள்ள டிபி-யில் இருந்து 24 கிமீ தொலைவில் உள்ள செஸ்ஸா என்ற இடத்தில் செஸ்ஸா ஆர்கிட் சரணாலயம் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue