Search
  • Follow NativePlanet
Share

ரி போய்  – இயற்கை அன்னையின் மடியில் தவழும் நகரம்!

16

மேகாலயாவில் உள்ள 11 மாநகராட்சியில் ஒன்றாக விளங்குகிறது ரி போய். இதன் மாநகராட்சி பணித் தலைமையிடம் நோங்போவில் உள்ளது. மேகாலயாவில் குறைந்த மக்கள் தொகை உள்ள மாநகராட்சியாக தெற்கு கரோ மலைக்கு பிறகு ரி-போய் விளங்குகிறது. இந்த மாநகராட்சி கிழக்கு காசி மலையை குடைந்து உருவாக்கப்பட்டதாகும்.

ரி போய் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

ரி போய்யிலுள்ள முதன்மையான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது உமியம் ஏரி. இதனை பரா பாணி என்றும் அழைக்கின்றனர். மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த ஏரியில் முக்கிய நீர்-மின் அணை உள்ளது.

பல விளையாட்டு வசதிகள் உள்ளதாலும் இந்தே ஏரி புகழ் பெற்றுள்ளது. பனிப்பிரதேசத்தில் உபயோக்கிக்கும் படகை கொண்டு சவாரி, தண்ணீரில் சைக்கில் ஓட்டுதல் மற்றும் படகு சவாரி போன்ற வசதிகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள லும் நேரு பூங்காவும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க தவறுவதில்லை. லும் சொஹ்பெட்ப்நெங், டீன்கீய் உச்சி மற்றும் ட்வார்க்சூட் போன்றவைகள் ரி போய்யில் உள்ள மற்ற சுற்றுலாத் தலங்கள்.

ரி போய்யின் வானிலை

கிழக்கு காசி மலையை சேர்ந்த வட்டாரங்களை தவிர ரி-போய் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்கள் தட்டையான நிலப்பரப்பில் அமைந்துள்ளதால் கோடைக்காலத்தில் இங்கு அதிக வெப்பத்துடன் இருக்கும்.

நோங்போ மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கு அதிகமாகவே செல்லும். இதுவே குறைந்தபட்ச வானிலை 4 டிகிரி செல்சியஸ் வரை கீழிறங்கும்.

ரி போய்க்கு சுற்றுலா வருவதற்கான உகந்த பருவம்

கோடைக்காலத்தில் வானிலை வறண்டிருப்பதால் இக்காலத்தில் இந்த இடங்களை சுற்றிப் பார்க்க தோதாக இருக்கும். அதனால் ரி போய்யை சுற்றிப் பார்க்க கோடைக்காலமே உகந்த பருவமாக அமையும்.

ரி போய்யை அடைவது எப்படி?

ரி போய்யின் மாவட்ட தலைமையகமான நோங்போ ஷில்லாங்கிலிருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது குவஹாத்தி-ஷில்லாங் நெடுஞ்சாலை இடை நிறுத்தத்தில் உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை-40 ரி-போய் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்கள் வழியாக ஊடுருவி செல்கிறது. குவஹாத்தியிலிருந்து நோங்போவிற்கு வாடகை டூரிஸ்ட் வண்டிகள் மற்றும் பேருந்துகள் மூலமாக சுற்றுலாப் பயணிகள் சுலபமாக வரலாம்.

ரி போய் சிறப்பு

ரி போய் வானிலை

சிறந்த காலநிலை ரி போய்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ரி போய்

  • சாலை வழியாக
    தேசிய நெடுஞ்சாலை-40 இந்த மாவட்டத்திற்கு உயிர் நாடியாக விளங்குகிறது. இந்த நெடுஞ்சாலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகள் வழியாக செல்லவில்லை என்றாலும் செங்குத்தாக செல்வதால் ஷில்லாங்கையும் குவஹாத்தியையும் இணைக்கிறது. சீரான பேருந்துகள், டூரிஸ்ட் மற்றும் தனியார் வாகனங்கள், லாரிகள் என இந்த நெடுஞ்சாலை எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படும். நோங்போவை ஷில்லாங் மற்றும் குவஹாத்தி என இரண்டு இடங்களில் இருந்தும் சுலபமாக வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ரி போய் மாவட்டத்திற்கு மிக அருகில் இருக்கு இரயில் நிலையம் 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குவஹாத்தியில் உள்ளது. குவஹாத்தி ரயில் நிலையத்திலிருந்து நோங்போவிற்கு போக்குவரத்து உச்சத்தில் இருக்கும் போது ஒன்றரை மணி நேரத்தில் வந்தடையலாம். நம் நாட்டில் சுறுசுறுப்பாக செயல்படும் இரயில் நிலையங்களில் குவஹாத்தி இரயில் நிலையமும் ஒன்றாகும். இங்கிருந்து நாட்டின் அனேக இடங்களுக்கும் இரயில் சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மேகாலயாவில் உள்ள ஒரே விமான நிலையம் ரி போய் மாவட்டத்தில் உள்ள உம்ரோய்யில் அமைந்திருக்கிறது. இது உமியம் ஏரிக்கு அருகில் உள்ளது. இருப்பினும் இந்த விமான நிலையத்திலிருந்து ஒரே ஒரு விமானம் தான் கொல்கத்தாவிற்கு சேவையில் இருக்கிறது. அதனால் குவஹாத்தி விமான நிலையம் வந்து அங்கிருந்து சாலை வழியாக ரி-போய் வருவதே சிறந்த வழியாகும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
28 Mar,Thu
Check Out
29 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
28 Mar,Thu
Return On
29 Mar,Fri