Search
 • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» நம்டஃபா தேசியப் பூங்கா

நம்டஃபா தேசியப் பூங்கா - வடகிழக்கு பகுதியின் காட்டுயிர் வாழ்க்கை!

40

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள புகழ் பெற்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது நம்டஃபா தேசியப் பூங்கா. கிழக்கு இமயமலை முழுவதையுமே மாறுபட்ட பல வகையான உயிரினங்கள் வாழும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட பகுதியிலேயே மிக பெரிய பாதுகாப்பு வட்டாரமாக திகழ்கிறது நம்டஃபா தேசியப் பூங்கா. பரப்பளவை கொண்டு பார்த்தாலும் கூட நம் நாட்டில் இதுவும் ஒரு மிக பெரிய தேசிய பூங்கா தான். சங்லங் மாநகராட்சியில் அமைந்துள்ள நம்டஃபா, வனவிலங்கு சரணாலயத்திற்காக புகழ் பெற்று விளங்குகிறது. இதனை தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடம் முழுவதும் பசுமையோடு விளங்கும் அடர்ந்த மழைக்காடு தான் இந்த தேசியப் பூங்காவை ஆட்சி செய்கிறது. மிஷ்மி மலையின் பகுதியான டஃப்ஹா பம் மலைத்தொடர்ச்சியும், பட்கை மலைத்தொடர்ச்சியும் நம்டஃபாவை சுற்றியுள்ளன.

இது மியோ என்ற இடத்தில் இருந்து சிறிது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 1985 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா இந்தியாவின் 15-ஆவது புலிகள் காப்பகமாகும்.

நோவா-டிஹிங் நதி இந்த காட்டிற்குள் ஓடுவதால், நீரில் வாழ்வன பலவகையை இங்கே காணலாம். இந்த காட்டிற்குள் மற்றோரு நதியான நம்டஃபா ஓடுவதால், அதன் பெயராலயே இந்த பூங்கா அதன் என்ற பெயரைப்பெற்றது.

வனவிலங்கு வாழ்க்கையின் மீது ஈடுபாடு உள்ளவர்களுக்கு நம்டஃபா தேசியப் பூங்கா ஒரு சிறந்த வேட்டையாக இருக்கும். இங்கே பல வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளதால் இங்கு வருவது சவாலாக மட்டுமல்லாமல் குதூகலத்தையும் தரும்.

மிதூன் என்றழைக்கப்படும் காட்டெருமைகள், யானைகள், மான்கள், இமயமலை கருங்கரடிகள், டகின் எனப்படும் ஆடுகள், பட்கோய் மலைத்தொடரை சேர்ந்த காட்டு ஆடுகள், மஸ்க் மான்கள், தேவாங்குகள், கரடிப் பூனைகள் மற்றும் செந்நிற பாண்டாக்கள் போன்ற விலங்குகளை பயணிகள் கண்டு களிக்கலாம். பல வகையான பட்டாம்பூச்சிகள் இந்த பூங்காவிற்கு மேலும் அழகை சேர்க்கின்றன.

புலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை மற்றும் சிறுத்தை வகை பூனை ஆகிய நான்கு பூனையினத்தையும் ஒன்றாக நம்டஃபாவில் உயரமான சிகரத்தில் மட்டுமே காண முடியும். ஸ்னோ லெபர்ட் எனப்படும் சிறுத்தை வகையை சேர்ந்த பூனை என்பது இந்த காலத்தில் அரிய வகை விலங்கினமாக ஆகிவிட்டது.

வெண்ணிற இறக்கையை கொண்ட மர வாத்துக்களும் இந்த பூங்காவில் காணப்படும் அரிய வகை பறவையாகும். அஸ்ஸாமை சேர்ந்த ஆதி காலத்து குரங்குகள், பன்றி வாலை கொண்ட ஆதி காலத்து குரங்குகள், ஹூலாக் கிப்பன் எனப்படும் லங்கூர் வகை குரங்குகள், இருவாய்க்குருவிகள் மற்றும் காட்டுக்கோழிகள் போன்றவைகளையும் இங்கே காணலாம்.

இங்கு பல வகையான பாம்புகளும் இருக்கிறது என்பதை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பன்னிறமுள்ள தாவர வகைகளை இங்கே காணலாம். 150 டிம்பர் வகைகள் மற்றும் மிஷ்மி டீட்டா போன்ற பல அரிய வகை மூலிகை செடிகளை கொண்டுள்ளது. இந்த பூங்காவின் உயரத்தை பொறுத்து ஒவ்வொரு வகையான தாவர வகையை காணலாம்.

அகன்ற இலைகளை கொண்ட மரங்கள் முதல் அல்பைன் காடுகள் வரை இங்கு உள்ளது. மேலும் பேம்பூ வகை தாவரங்களையும் இங்கே காணலாம். முன்னாட்களில் உயர்ந்த இடங்களில் 425 வகையான பறவையினங்கள் இருந்தது.

இந்த பூங்காவில் சில பழங்குடியினர்கள் குடிக்கொண்டிருக்கிறார்கள், முக்கியமாக மியன்மார் எல்லையை ஒட்டியிருக்கும் இந்திய கிழக்கு பகுதியில். சக்மா, தங்சா மற்றும் சிங்போ போன்ற பழங்குடியினரை இந்த வட்டாரத்தில் காண முடியும்.

நம்டஃபா தேசியப் பூங்காவை அடைவது எப்படி?

நம்டஃபா தேசியப் பூங்காவிற்கு சாலை வழி இணைப்பு தான் பிரதானமாக உள்ளது. இரயில் மற்றும் விமானம் மூலமாக வர விரும்புபவர்கள் முதலில் அஸ்ஸாம் வந்து பின் அங்கிருந்து மியோவிற்கு வர வேண்டும்.

நம்டஃபா தேசியப் பூங்காவில் நிலவும் வானிலை

நம்டஃபா தேசியப் பூங்காவை சுற்றி பார்க்க அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை உகந்த பருவமாகும்.

நம்டஃபா தேசியப் பூங்கா சிறப்பு

நம்டஃபா தேசியப் பூங்கா வானிலை

சிறந்த காலநிலை நம்டஃபா தேசியப் பூங்கா

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது நம்டஃபா தேசியப் பூங்கா

 • சாலை வழியாக
  திப்ருகரிலிருந்து மியோவிற்கு டின்சுகியா வழியாக பேருந்துகளில் வந்தடையலாம். திப்ருகரிலிருந்து மியோ 160 கி.மீ. தொலைவில் உள்ளது. அஸ்ஸாம் மாநில போக்குவரத்து கழகமும் அருணாச்சல பிரதேச போக்குவரத்து கழகமும் இந்த பேருந்து சேவைகளை வழங்குகின்றன. இந்த பேருந்துகள் லெடோ, மர்க்ஹெரிடா, கர்சங் மற்றும் ஜகுன் போன்ற இடங்கள் வழியாக செல்கின்றன. மியோவிலிருந்து டெபன் 26 கி.மீ. தொலைவில் காட்டுப்பாதையில் உள்ளது.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  அஸ்ஸாமிலுள்ள டின்சுகியா இரயில் நிலையம் தான் இந்த பூங்காவிற்கு மிக அருகில் இருக்கும் இரயில் நிலையமாகும். இது டெபனிலிருந்து 141 கி.மீ. தொலைவில் உள்ளது. அஸ்ஸாமிலுள்ள மர்கேரிடா இரயில் நிலையம் தான் டெபனுக்கு மிக அருகில் இருக்கும் பாசஞ்சர் இரயில் நிலையம்.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  அஸ்ஸாமில் இருக்கும் திப்ருகரின் மோகன்பரியில் உள்ள விமான நிலையம் தான் இந்த பூங்காவிற்கு அருகில் இருக்கும் விமான நிலையமாகும். இது டெபனிலிருந்து 182 கி.மீ. தொலைவில் உள்ளது.
  திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Aug,Sun
Return On
02 Aug,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
01 Aug,Sun
Check Out
02 Aug,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
01 Aug,Sun
Return On
02 Aug,Mon