பனி மூடிய மலைகளை பின்னணியிலும் மற்றும் வளமான தாவர மற்றும் விலங்கினங்களையும் கொண்டிருக்கும் க்ளோவ் லேக், ஒரு அழகிய சுற்றுலாத் தலமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 5000 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
இதற்கு அருகில் உள்ள ட்வாம் கிராமத்தின் சோங்க்ஹாம் - வாக்ரோ சாலையிலிருந்து தான் இந்த ஏரிக்கு மலையேற்றம் செய்ய புறப்பட வேண்டும். முறையான சாலை வசதி இல்லாத காரணத்தால், இந்த ஏரிக்கு செல்லும் மலையேற்றப் பயணம் சாகசங்கள் நிறைந்ததாக இருக்கும்.