அம்பாலா -  இரட்டை நகரத்தில் ஒரு சுற்றுலா!

அம்பாலா, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும்.  இந்த நகரத்தை அம்பாலா நகரம் மற்றும் அம்பாலா கண்டோன்மெண்ட் என்று அரசியல் மற்றும் புவியியல் ரீதியாக பிரிக்கலாம். இதில் அம்பாலா கண்டோன்மெண்ட் என்பது அம்பாலா நகரத்தில் இருந்து சுமார் 3 கீ.மீ தொலைவில் உள்ளது.

அம்பாலா நகரம் கங்கை மற்றும் இண்டஸ் என்கிற இரண்டு ஆற்று தொடர்புகளை பிரிக்கிறது. இந்த நகரத்தை வடக்கில் கக்கர் ஆறும் தெற்கில் டாங்ரி ஆறும் சூழ்ந்துள்ளன.

அம்பாலா மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

அம்பாலா ஒரு சிறிய நகரம் என்றாலும், இங்கு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்களும் உள்ளன. மேலும் இந்த நகரம் ஹரியானா மற்றும் பஞ்சாப் எல்லையில் உள்ளதால், இது உள்ளூர் சுற்றுலாவில்  ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நகரத்தின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இங்குள்ள பிரசித்தி பெற்ற பவானி அம்பா கோவில் விளங்குகிறது.  மேலும் இந்த நகரம் இந்தக் கோவிலின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

இந்த நகரில் உள்ள மிக முக்கியமான இடங்களாவன: பாட்ஷா பாக் குருத்வாரா, சகோதரி கஞ்ச் குருத்வாரா, லக்ஹி ஷா & தக்வால் ஷா, செயின்ட் பால் தேவாலயம் மற்றும் காளி மாதா மந்திர்.

அம்பாலாவில் உள்ள சந்தைகள்

அம்பாலா நகரில் உள்ள மிக முக்கியமான மற்றொரு சுற்றுலா இடம் இங்குள்ள துணி சந்தை ஆகும். இந்தச் சந்தையில் அனைத்து வகையான துணிகளையும் மொத்த விலையில் விற்கும் ஒரு தெரு ஒன்று உள்ளது.

இந்தச் சந்தையில் மொத்தமாக சுமார் 1000 மொத்தக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில்  கைத்தறிகள் மற்றும் பட்டுகளில் இருந்து கோட் சூட்க்கு பொருத்தமான துணிகள் வரை விற்கப்படுகின்றன.

அம்பாலா நகரத்தில் அறிவியல் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை விற்கும் ஒரு அறிவியல் உபகரண சந்தை ஒன்றும் உள்ளது. மேலும்  இந்த நகரம் 'அறிவியல் உபகரணங்களின் நகரம்' என்றும்  அழைக்கப்படுகிறது. அம்பாலா நகரம் அதன் கைத்தறி மற்றும் தங்க நகைகளுக்காக பிரபலமாக உள்ளது.

மேலும் சில தகவல்கள்...

அம்பாலா, வடக்கு ரயில்வே மண்டல பிரதேசத்தின்  தலைமையமாக உள்ளது. இதன் காரணமாக இந்த நகரத்தில் ஒரு முக்கிய ரயில்வே சந்திப்பு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அம்பாலா கண்டோன்மெண்ட் ரயில்வே தலைமையகம்  இந்தியாவின் மிகப் பழமையான கண்டோன்மெண்டுகளில் ஒன்றாகும்.

அம்பாலா நகரத்தின் புவியியல் அமைப்பு காரணமாக, இங்கிருந்து பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களில் இருந்து சண்டிகர் யூனியன் பிரதேசம் வரை எளிதாக அணுக முடியும்.

அம்பாலாவை சுற்றிப் பார்க்க சிறந்த பருவம்

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவமழை முடிந்த பின்னர் அம்பாலா நகரத்தை சுற்றிப் பார்க்கலாம். இதுவே அம்பாலா சுற்றுலாவிற்கு மிகவும் உகந்த பருவம் ஆகும்.

அம்பாலாவை எவ்வாறு அடைவது?

அம்பாலா நகரம் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களுடன் நன்றாக  இணைக்கப்பட்டுள்ளது. நகருக்கு அருகில் சண்டிகார் விமான நிலையம்  உள்ளது. அம்பாலா கண்டோன்மெண்ட் சுற்றுலா பயணிகளை ரயில் மற்றும் சாலை வழியாக இணைக்கும் ஒரு முக்கியப் புள்ளியாக திகழ்கிறது.

Please Wait while comments are loading...