ஜம்மு - புனிதம்  அள்ளித்தரும் ஆனந்தம்!

ஜம்மு அல்லது துக்கர்தேஸம் என அழைக்கப்படும் ஜம்மு, இந்தியாவில் அதிக அளவில் பார்வையிடப்படும் இடங்களில் ஒன்றாகும். குளிர்காலத்தில் ஜம்மு, ஜம்மு & காஷ்மீரின் நிர்வாக தலைநகராக செயல்படுகிறது. ஏனெனில் குளிர்கலங்களில் ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவு இருக்கிறது. இந்த பிராந்தியமானது கி.மு 8 ஆம் நூற்றாண்டில் ஜம்முவை கண்டறிந்ததாக நம்பப்படும் அரசர் ஜம்பு லோசான் என்பவர் பெயரால் அழைக்கப்படுகிறது.

எண்ணற்ற கோயில்கள் ஜம்மு முழுவதும் நிறைந்து காணப்படுவதால் 'கோவில்களின் நகரம்' என்ற புனைப்பெயரை பெற்றுள்ளது. இந்த இடமானது ஒரு பிரபலமான புனித யாத்திரை சுற்றுலா தலமாக அமைந்துள்ளது ஏனெனில் புகழ்பெற்ற இந்து மத கோயிலான, வைஷ்ணவ தேவி கோவில் இங்கு அமைந்துள்ளது.

ஜம்மு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளை புனிதயாத்திரைக்காக ஈர்ப்பது மட்டுமல்லாமல், அதன் கண்கவர் இயற்கை அழகை காண்பதற்காகவும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

ஜம்மு இமாலய மலைதொடரின் தெற்கு பகுதியிலும், பஞ்சாப் சமவெளியின் வடக்கு பகுதியிலும் அமைந்துள்ளது. தாழ்வான பகுதியில் செஸ்னட் மற்றும் ஓக் வகை மரங்களால் சூழப்பட்டுள்ளபோதிலும் அதன் வடககே உயரே செல்ல செல்ல தேவதாறு மற்றும் பைன் மரவகைகள் என தாவர வகைகள் மாறு படுகின்றன.

ஜம்முவிற்கு வருகை தர திட்டமிடும் சுற்றுலா பயணிகள் வைஷ்ணவ தேவி கோவில், ரகுநாத் கோயில், முபாரக் மண்டி அரண்மனை, மான்சர் ஏரி, பஹு கோட்டை, மற்றும் அமர் மஹால் போன்ற இடங்களை தவறவிட்டுவிட கூடாது.

வைஷ்ணவ தேவி கோவில் ஒரு குகைகோவிலாகும். இது இந்து மத தாய் கடவுள் வைஷ்ணவ தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் முக்கிய ஈர்ப்பானது வைஷ்ணவ தேவியின் மூன்று அவதாரங்களை, சித்தரிக்கும் சிலைகள் உள்ளன; அதாவது மகாகாளி, நேரம் மற்றும் இறப்பின் இந்து கடவுள், மகா சரஸ்வதி, இந்துக்களின் அறிவு கடவுள் மற்றும் மகாலட்சுமி, இந்துக்களின் செல்வம் மற்றும் அதிர்ட்ஷ்ட கடவுள்.

ஜம்முவின் முற்கால மன்னர்கள் மகாராஜா ரன்பீர் சிங் மற்றும் அவரது தந்தை மகாராஜா குலாப் சிங் ஆகியோரால் கட்டப்பட்டது ரகுநாத் கோவில்; இது இப்பகுதியில் மற்றொரு முக்கிய புனித யாத்திரை தளமாக உள்ளது. கட்டுமான முறை, வளைவுகள், மற்றும் கோவில் மாடமும் முகலாய கட்டடக்கலை பாணியை பிரதிபலிக்கின்றன.

ஜம்முவிற்கு பயணம் மேற்கொள்ளும் போது, பயணிகள் டோக்ரா மன்னர்களின் அரச உறைவிடம் என அறியப்பட்ட முபாரக் மண்டி அரண்மனையை கட்டாயம் பார்க்க வேண்டும்.

இந்த அரண்மனையின் தனிப்பட்ட அம்சம், இது ராஜஸ்தானி, முகலாய, பரோக், மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலை பாணிகளின் கூட்டு கலவையை நிரூபிக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ளே உள்ள ஷீஸ் மஹால் முபாரக் மண்டி அரண்மனையின் பிரதம ஈர்ப்பாக உள்ளது.

மானசா சரோவார் கொடை அல்லது 'தூய்மையின் உருவகமாக' மக்கள் மத்தியில் அறியப்பட்ட மான்சர் ஏரி, ஜம்முவின் முக்கிய சிறப்புகளில் ஒன்று. பச்சைப்பசேல் காடுகளால் சூழப்பட்டுள்ளது , ஒரு இந்து மத பாம்பு கடவுளான ஷேஷ் நாக் கோவில் இந்த நதிக்கரையில் அமைந்துள்ளது.

பஹு கோட்டை, ஜம்முவின் மிகவும் பழமையான கோட்டையாகும் இது சூரிய வம்சத்தை சேர்ந்த, ராஜா பஹு லோசான் மூலம்.கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது, ஒரு விரிவான புல்வெளி சூழப்பட்டுள்ள இந்த கோட்டை பாக் ஈ பஹு என பெயரிடப்பட்டது.

இந்து தேவதையான காலம் மற்றும் இறப்பிற்கு அர்பணிக்கப்பட்ட பாவே வாலி மாதா கோவிலை சுற்றிபார்க்கும் வாய்ப்பு இங்கு வரும் பயணிகளுக்கு கிடைக்கிறது.

பரிந்துரைக்கப்படுகிற மற்ற இடங்களாவன, பீர் பாபா தர்கா, சர்னிசார் ஏரி, பீர் கோ குகை கோவில், ஷிராத் பீர் மிதா, மற்றும் நந்தினி விலங்குகள் சரணாலயம் முதலியன அடங்கும்.

பயணிகள் விமான, ரயில் அல்லது சாலை வழியாக இந்த இலக்கை அடைய முடியும். ஜம்மு விமான நிலையம் மற்றும் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அருகில் உள்ள உள்நாட்டு விமான தளமாகும்.

ஜம்மு தாவி ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில் சந்திப்பு இது மற்ற முக்கிய ரயில் நிலையங்களான, புனே, சென்னை, புது தில்லி மற்றும் மற்ற ரயில் சந்திப்புகளோடு இணைக்கப்பட்டுள்ளன.

சாலை வழியாக பயணம் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் புது தில்லி, அம்பாலா, அமிர்தசரஸ், லூதியானா, சிம்லா மற்றும் மணலி உள்ளிட்ட நகரங்களில் இருந்து தனியார் பேருந்துகள் மற்றும் டாக்சி சேவைகளை பயண்படுத்திக்கொள்ளலாம்.

ஜம்முவை சுற்றிப்பார்க்க விரும்பும் சுற்றுலா பயணிகள், இந்த பிராந்தியத்திற்கு அக்டோபர் மற்றும் மார்ச்க்கு இடைப்பட்ட காலத்தில் எந்த நேரத்திலும் தங்கள் பயணதிட்டத்தை வகுத்து கொள்ளலாம். இந்த காலத்த்தில் வெப்பம் மற்றும் ஈரப்பபதம் நிறைந்த கால நிலைய தவிக்க முடியும்.

Please Wait while comments are loading...