லூதியானா - கலாச்சார நிகழ்வுகளின் மையம்!

சட்லஜ் நதிக்கரையில் உள்ள லூதியானா பஞ்சாபின் மிகப் பெரிய நகரமாகும். 1480ல் உருவாக்கப்பட்டு, லோடி வம்சத்தின் பெயரால் லூதியானா என அழைக்கப்படும் இந்நகரம் பழைய லூதியான, புதிய லூதியானா எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வூரின் மக்கள் விருந்தோம்பலுக்குப் பெயர் போனவர்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

லூதியானாவில் பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. குருத்வாரா மான்ஜி சாஹிப், குரு நானக் பவன், பில்லார் கோட்டை, ரஞ்சித் சிங் போர் அருங்காட்சியகம், குரு நானக் மைதானம், ராக் பாக் பூங்கா ஆகியவற்றுடன் வனவிலங்கு பூங்காக்களும் உள்ளன.  

லூதியானா கடைவீதிகளுக்கு புகழ்பெற்றது. 20க்கும் மேற்பட்ட பேரங்காடிகளைக் கொண்ட லூதியானாவில் மக்கள் உணவுப்பிரியர்களாகவும் இருப்பதால் ஏராளமான உணவுவிடுதிகளும் உள்ளது.

இனிப்பு மற்றும் உப்புச் சுவையில் பறிமாறப்படும் லஸ்ஸி இங்கு புகழ்பெற்ற பானமாகும். சண்டிகார், ஷிம்லா, கூஃப்ரி, மெக்லியோகாஞ்ச், தர்மசாலா ஆகிய தளங்கள் லூதியானாவிற்கு அருகாமையில் உள்ளன

லூதியானாவின் விழாக்கள், பாரம்பரியங்கள் மற்றும் உயிரோட்டமான தன்மை!

கலாச்சாரத்திற்காகவும், பாரம்பரியத்திற்காகவும் புகழ்பெற்ற லூதியானாவில் பஞ்சாபி பவ, குரு நானக் பவன், நேரு சிந்தாந்த கேந்த்ர மண்டபம் ஆகிய இடங்களில் மதம் சார்ந்த விழாக்கள் நடத்தப்படுகின்றன.

நாட்டுப்புறப் பாடல்கள், ஆட்டங்கள், விளையாட்டுக்கள், கயிறாட்டங்கள் ஆகியவையும் மேற்கொள்ளப்படுகின்றன. லோஹ்ரி என்ற புகழ்பெற்ற திருவிழா போஹ்வின் கடைசி நாளில் கொண்டாடப்படுகிறது. மேலும் வசந்த பஞ்சமி, ஹோலி, வைசாகி, குருபரப் ஆகிய விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

லூதியானா அடைய வழி

டெல்லியில் இருந்து 320கிமீ தொலைவில் உள்ள லூதியானாவை அடைய சாலை மார்க்கமாக 5மணி நேரம் ஆகிறது. ஏராளமான ரயில் வசதிகள் உள்ள இந்நகரத்தில் பேருந்து, ஆட்டோ, ரிக்‌ஷா வசதியும் நிறைந்து இருக்கிறது.

பயணிக்க சிறந்த பருவம்

அதீதமான வானிலையே நிலவாத லூதியானாவிற்கு ஃபிப்ரவரியில் இருந்து ஏப்ரல் மாதம் வரை பயணிக்கலாம்.

Please Wait while comments are loading...