ஜின்ட் - ஆலயங்களில் அடைக்கலம்!

ஹரியானா மாநிலத்தின் மாவட்டமான ஜின்ட், ஜெயின்டாபுரி என்ற பெயரில் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பழமையான தீர்த்தமாகும். வெற்றியின் கடவுளாக கருதப்படும் ஜெயந்தி தேவி கடவுளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாண்டவர்கள் இங்கே ஜெயந்தி தேவி கோவிலை கட்டியுள்ளனர். இந்த கோவிலைச் சுற்றிலும் உருவான ஜெயின்டாபுரி நகரம் இன்று ஜின்ட் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

புராணங்கள் மட்டுமல்லாமல், இந்த இடத்தில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளின் மூலமாகவும் இந்த இடத்தின் பழமை உரமேற்றப்பட்டுள்ளது. ஹரப்பா நாகரிகத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய வண்ணமேற்றப்பட்ட சாம்பல் மட்பாண்ட பாத்திரங்கள் இந்த மாவட்டத்தைச் சுற்றிலும் கிடைத்துள்ளன. இந்த பழமையான தலத்தின் தீர்த்தங்களும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஜின்ட் நகரத்தைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

முக்கியமான புனிதத் தலமான ஜின்ட்-ல் பல்வேறு மத வழிபாட்டுத் தலங்கள் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளன. பூத்நாத் என்றழைக்கப்படும் சிவ பெருமானின் கோவில் ஒன்றும் பூதேஸ்வரா கோவில் என்ற பெயரில் இங்கே உள்ளது. இந்த கோவிலை ஜின்ட்டின் அரசராக இருந்த ரக்பீர் சிங் என்பவர் கட்டினார்.

தம்தான் சாஹிப் என்ற இடம் பழமையான சிவன் கோவில் உள்ள இடமாகவும் மற்றும் இராமயணத்தை எழுதிய வால்மீகி முனிவரின் வசிப்பிடமாகவும் இருந்த இடமாகும். ஜெயந்தி கோவில் 550 வருடங்களுக்கும் அதிகமான பழமையுடைய கோவிலாக நம்பப்படுகிறது.

பரசுராமர் என்ற வீரத்துறவியினால் உருவாக்கப்பட்ட ராம்ராய் அல்லது ராமராதா என்ற ஐந்து குளங்களும் இங்கே உள்ளன. அவருக்காக கட்டப்பட்டுள்ள பழமையான கோவில் ஒன்றும் இவ்விடத்தில் உள்ளது. புராண நகரமான ஹஸ்தேகர் நகருக்கும் சுற்றுலா வருவது பயனுள்ள அனுபவமாகும்.

நார்வானா தாலுகாவில் அமைந்துள்ள ஹஸ்ரத் கைய்பி சாஹிப்-ன் கல்லறை பல்வேறு வகையான பக்தர்கள் வந்து செல்லும் இடமாகும். மாபெரும் சூஃபி துறவியான ஹஸ்ரத் கைய்பி சாஹிப்பின் நினைவுகளை தாங்கியுள்ள இடமாக இந்த கல்லறை உள்ளது.

நாகேஸ்வர மகாதேவா, நாகதம்னி தேவி மற்றும் நாகஷேத்ரா ஆகிய மூன்று வரலாற்றுக்கு முந்தைய தலங்களைக் கொண்டுள்ள சாபிடோன் நகரமும் இங்குதான் உள்ளது. ஜின்ட்-ல் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள இக்காஸ் கிராமத்தில் உள்ள ஏகஹம்ஸா கோவிலும் மற்றுமொரு முக்கியமான புனிதத்தலமாக உள்ளது.

அஸ்வினி குமார தீர்த்தம் மற்றுமொரு புனிதத் சுற்றுலாத் தலம். இவரைப் பற்றி மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புனித நூல்களின் படி, அஸ்வினி குமார தீர்த்தத்தின் நீரில் குளிக்கும் பக்தர்களின் ஆன்மாவிற்கு சொர்க்கத்திற்கான பாதை திறக்கப்படும்.

இந்த புனித இடத்தில் இருக்கும் தண்ணீருக்கு நோய்களைத் தீர்க்கும் சக்தி உள்ளது மற்றும் தீராத நோய்களையும் இது தீர்த்து வைக்கும்.

ஜின்ட் நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும் பாரா என்ற கிராமத்தில் மகா விஷ்ணுவிற்காக உருவாக்கப்ப்ட்ட வராஹ தீர்த்தம் என்ற வழிபாட்டுத்தலம் உள்ளது. மகா விஷ்ணு பன்றி உருவத்தை எடுத்த போது, இந்த இடத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது.

ஜின்ட்-ல் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ள நிர்ஜன் கிராமத்தில் அமைந்துள்ள முஞ்சவாடா தீர்த்தம் கடவுள்களின் கடவுளாக கருதப்படும் மகாதேவருடன் தொடர்புடைய புனிதத் தலமாக கருதப்படுகிறது.

யக்ஷினி மகாகிரஹிக்கான கோவில் ஒன்றும் யக்ஷினி தீர்த்தம் என்ற இடத்தில் இங்கே உள்ளது. இது ஜின்ட்-ல் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள திக்கேரா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

ஜின்ட் நகரத்திற்கு தெற்காக 11 கிமீ தொலைவில் உள்ள போன்கெர் கேரி என்ற கிராமத்தில் உள்ள புஷ்காரா என்ற வழிபாட்டுத்தலம் மற்றுமொரு புகழ்பெற்ற வழிபாட்டுத்தலமாக உள்ளது.

புராண கதைகளில், இந்த கோவில் பரசுராமர் கட்டியதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், மக்கள் நம்பிக்கையையும் மற்றும் பற்றையும் வெளிப்படுத்தும் மற்றுமொரு மதத்தலமாக பாபா போன்கெர் கோவில் உள்ளது.

ஜின்ட் நகரத்திற்கு வடக்காக 16 கிமீ தொலைவில் உள்ள காசோஹன் கிராமத்தில் காயாசோதனா என்ற வழிபாட்டுத்தலம் அமைந்துள்ளது. புராண கால பாரம்பரியப்படி மகா விஷ்ணு இந்த இடத்தில் நீராடியபோது காயாசோதனா, லோகோட்டாரை உருவாக்கியுள்ளார்.

ஸ்ரீ தீர்த்தம் என்ற இந்த இடம் ஜின்ட் நகரத்தின் நார்வானா தாலுகாவில் உள்ள சிம்லா என்ற கிராமத்தில் உள்ளது. இது மிகவும் உயர்வான வழிபாட்டுத் தலமாக உள்ளது. இந்த இடத்திற்கு அருகில் உள்ள புனித குளத்தில் நீராடினால் அழிவில்லாத அமைதியும், மகிழ்ச்சியும் பக்தர்களுக்கு கிடைக்கும்.

ஜின்ட் மாவட்டத்தின் நார்வானா தாலுகாவிலுள்ள சங்கான் என்ற கிராமத்தில் ஒரு பெண் தெய்வத்திற்கான கோவில் உள்ளது. இந்த இடத்தில் இருக்கும் தெய்வத்தை நோக்கி, குறிப்பாக பெண்கள் செய்யும் பிரார்த்தனையால் சாங்கினியின் முழு அருளும் அவர்களுக்கு கிடைக்கும்.

ஜின்ட்-ன் பருவநிலை

கோடை, மழை மற்றும் குளிர்காலம் என அனைத்து விதமான பருவநிலைகளும் ஜின்ட்-ல் நிலவி வருகிறது. இங்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற மாதங்களாக நவம்பர் முதல் மார்ச் வரையிலான நாட்கள் உள்ளன.

ஜின்டை அடையும் வழிகள்

ஜின்ட்டிற்கு சிறப்பான சாலை வசதிகள் உள்ளன. ஜின்ட் இரயில் நிலையம் அருகிலுள்ள பெரிய நகரங்களுடன் தொடர்பிலுள்ளது.

Please Wait while comments are loading...