குருக்ஷேத்ரா – புராதன இந்திய இதிகாச மரபின் மையக்களம்

குருக்ஷேத்ரா எனும் பெயர் ‘தர்மபூமி’ எனும் பொருளை உணர்த்துவதாக கூறப்படுகிறது. பரத வம்சத்தை சேர்ந்த ‘குரு’ ஆண்ட மண் என்பதால் குருஷேத்திரம் என்ற பெயர் வந்திருக்கிறது. அந்த  பரத வம்சத்தில் உதித்த பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நிகழ்ந்த உக்கிரமான போர் இந்த ஸ்தலத்தில்தான் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

அர்ஜுனனுக்கு கண்ணன் கீதோபதேசம் செய்வித்த ஸ்தலம் எனும் பெருமையையும் இது பெற்றிருக்கிறது. கீதை உபதேசத்தில் கூறப்பட்ட கருத்துகள் ஹிந்து மரபின் புனித தத்துவங்களாக கருதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இதர சில முக்கியமான புனித நூல்களும் இந்த ஸ்தலத்தில் எழுதப்பட்டிருக்கிறன.

குருக்ஷேத்ரா நகரம் செழுமையான வரலாற்றுப்பின்னணி மற்றும் புராணிக ஐதீக மரபை  கொண்டுள்ளது. காலப்போக்கில் பௌத்தம் மற்றும் சீக்கிய மதக்குருக்கள் விஜயம் செய்த முக்கியமான ஆன்மீக நகரமாகவும் வளர்ச்சியடைந்திருக்கிறது.

எனவே ஹிந்துக்கள், புத்த மதத்தினர், சீக்கிய மதத்தினர் ஆகிய மூன்று பிரிவினரும் விஜயம் செய்யும் புனித யாத்திரை ஸ்தலமாக இது தற்போது வளர்ச்சியடைந்துள்ளது.

வழிபாட்டுத்தலங்கள், கோயில்கள், சன்னதிகள், குருத்வாராக்கள் மற்றும் தீர்த்த குண்டங்கள் என ஏராளமான ஆன்மீக ஐதீக அம்சங்கள் இந்நகரத்தில் நிரம்பியுள்ளன.

குருக்ஷேத்ரா மற்றும் சுற்றியுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்கள்

புராதன பின்னணி கொண்ட குருக்ஷேத்ரா நகரில் பல்வேறு ஆன்மீக ஸ்தலங்கள் அமைந்திருக்கின்றன. இங்குள்ள பிரம்மசரோவர் தீர்த்தக்குளம் வருடாவருடம் அதிகமான யாத்ரீகர்களை ஈர்க்கும் முக்கியமான அம்சமாக வீற்றிருக்கிறது.

சூரிய கிரகண நாளில் இந்த ஸ்தலத்திற்கு அதிகமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த புனித குளத்தில் நீராடினால் மன நிம்மதி கிட்டும் என்பதாக நம்பப்படுகிறது. மறைந்துபோன மூதாதையர் மற்றும் குடும்பத்தினர் பெயரில் பிண்டதானம் செய்வதற்கான சடங்கு ஸ்தலமாகவும் இது அறியப்படுகிறது.

ஹிந்துக்கள் மத்தியில் முக்கியமான புனிதயாத்திரை ஸ்தலமாக விளங்கும் குருக்ஷேத்ராவில் ஜோதிஸார் எனும் இடம் முக்கியவத்துவம் பெற்றுள்ளது.

இங்குதான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்வித்ததாக கூறப்படுகிறது. ஜோதிஸார் ஸ்தலத்தில் தினமும் மாலை நேரத்தில் ஒளி-ஒலி காட்சித்திரையிடல் நிகழ்ச்சியும் பார்வையாளர்களுக்காக நிகழ்த்தப்படுகிறது.

1987ம் ஆண்டில் இங்கு குருக்ஷேத்ரா வளர்ச்சி வாரியத்தின் மூலம் ஒரு கிருஷ்ணா மியூசியம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த மியூசியம் ஷீ கிருஷ்ணர் குறித்த தகவல்கள், கதைகள் மற்றும் தத்துவங்கள் போன்றவற்றை விளக்கும் சேகரிப்புகளை கொண்டுள்ளது. இவற்றில் கலைப்பொருட்கள், சிலைகள், ஓவியங்கள், எழுத்துப்பிரதிகள் மற்றும் நினைவுப்பொருட்கள் ஆகியவை அடங்கும்.

புகழ்பெற்ற இந்திய விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் பெயரால் அமைக்கப்பட்டுள்ள ஒரு கோளரங்கம் ஒன்றும் இந்நகரத்தில் உள்ளது. நகரஎல்லையில் மலைக்குன்றின்மீது அமைந்துள்ள ஷேய்க் செஹ்லி எனும் கல்லறை ஒன்றும் ஒரு சுற்றுலா அம்சமாக அறியப்படுகிறது.

குருக்ஷேத்ராவை ஒட்டிய தானேசர் எனும் இடத்திலுள்ள ஸ்தானேஷ்வர் மஹாதேவ் கோயிலில் உள்ள சிவலிங்கம் பக்தர்கள் மத்தியில் முக்கியமான அம்சமாக வணங்கப்படுகிறது.

இங்குள்ள நாபிகமல் கோயிலில் விஷ்ணு, பிரம்மா ஆகிய இரண்டு தெய்வங்களின் சிலைகள் அருகருகே ஸ்தாபிக்கப்பட்டிருப்பதும் விசேஷமாக சொல்லப்படுகிறது. பெரிய கோயிலாக இல்லாவிட்டாலும் பிரம்மாவுக்கு அமைக்கப்பட்டுள்ள முக்கியமான கோயிலாக இது கருதப்படுகிறது.

வெண்பளிங்குக்கற்களால் அமைக்கப்பட்டுள்ள பிர்லா மந்திர் எனும் கோயிலும் குருக்ஷேத்ரா நகரத்தில் இடம் பெற்றுள்ளது. செவின் பாட்ஷாஹிஸ் எனும் குருத்வாரா ஒன்று இங்கு ஹர்கோவிந்த் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

பன் கங்கா எனப்படும் தனது ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு படையினரோடு அவர் இந்த ஸ்தலத்திற்கு விஜயம் செய்ததாக சொல்லப்படுகிறது. பீஷ்ம குண்ட் எனப்படும் புராணிக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலம் ஒன்றும் இங்கு பிரசித்தமாக விளங்குகிறது.

குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள நரக்தாரி என்று அழைக்கப்படும் கிராமத்தில்  அம்புப்படுக்கையில் உயிர்விட்ட பீஷ்மருக்காக அமைக்கப்பட்டுள்ள கோயில் ஒன்றும் உள்ளது. திதார் நகர் எனும் முக்கியமான ஆன்மிக ஸ்தலம் ஒன்றும் குருக்ஷேத்ராவில் ஏராளமான யாத்ரீகர்களை ஈர்க்கிறது.

எப்படி செல்வது குருக்ஷேத்ராவுக்கு

ரயில் மற்றும் சாலை மார்க்கமாக குருக்ஷேத்ராவுக்கு பயணிகள் விஜயம் செய்யலாம். அருகிலுள்ள சண்டிகர் நகரத்தில் விமான நிலையமும் அமைந்துள்ளது.

Please Wait while comments are loading...