Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குருக்ஷேத்ரா » ஈர்க்கும் இடங்கள் » பிரம்மசரோவர் தீர்த்தக்குளம்

பிரம்மசரோவர் தீர்த்தக்குளம், குருக்ஷேத்ரா

50

பிரம்மசரோவர் தீர்த்தக்குளம் எனும் இந்த புனித தீர்த்தம் தானேசரில் அமைந்துள்ளது. புராணக்கதைகளின்படி, ஒரு பெரிய யாகத்தின்முடிவில் பிரம்மா இந்த குருக்ஷேத்ரா நகரத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

தீர்த்தக்குளத்தின் நடுவே ஒரு சிவன் சிலையும் அமைந்துள்ளது. ஒரு பாலத்தின் வழியாக இந்த சிலைக்கருகில் சென்று தரிசிக்கலாம். நவம்பர் மாத இறுதியில் கொண்டாடப்படும் கீதா ஜயந்தி திருவிழாவின்போது இந்த தீர்த்தக்குளத்தில் ‘தீப தானம்’ மற்றும் ஆரத்தி சடங்குகள் நடத்தப்படுகின்றன.

இந்த குளத்தில் முழுகி எழுந்தால் அஸ்வமேத யாகம் நடத்தி கிடைக்கக்கூடிய பலன்களை பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

தற்போது புதுப்பிக்கப்பட்டு காட்சியளிக்கும் இந்த தீர்த்தக்குளம் 1800 அடி நீளமும் 1400 அடி அகலமும் கொண்டுள்ளது. சூரிய கிரகணம் மற்றும் கீதா ஜயந்தி போன்ற திருநாட்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்படும்.

மேலும், நவம்பர் மாத இறுதி மற்றும் டிசம்பர் மாத துவக்கத்தின்போது இந்த தீர்த்த ஸ்தலத்திற்கு ஏராளமான புலம்பெயர் பறவைகளும் விஜயம் செய்கின்றன. பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த குளமும் சுற்றியுள்ள சூழலும் மனதுக்கு சாந்தியளிக்கும் இயல்புடன் தோற்றமளிக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Aug,Fri
Return On
22 Aug,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Aug,Fri
Check Out
22 Aug,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Aug,Fri
Return On
22 Aug,Sat