ஃபரிதாபாத் - வரலாற்று சிறப்பு மிக்க நகரம்!

ஹரியானா மாநிலத்தில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்குகிறது ஃபரிதாபாத். இவ்வூரை நிர்மாணித்த பாபா ஃபரித் என்பவரின் பெயரால் இவ்வூர் அழைக்கப்படுகிறது. இவர் இங்கு கட்டிய கோட்டை, மசூதி மற்றும் ஒரு தொட்டி ஆகியவை இன்று சிதைத்துபோன நிலையில் காணப்படுகின்றன. டெல்லி குர்கான் மற்றும் உத்திர பிரதேசத்தின் பகுதிகளால் இந்நகரம் சூழப்பட்டுள்ளதால் புவியியல் முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகிறது. யமுனை நதிக்கு அருகில் உள்ள இந்த நகரம் டெல்லியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தொழில் சார்ந்த மையமாக விளங்கும் ஃபரிதாபாத் பல பொருட்களின் தயாரிப்பில் முதன்மையாக விளங்குகிறது.

ஃபரிதாபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

பத்கல் ஏரி, சூரஜ்குந்த் ராஜா நஹர் சிங் அரண்மனை, ஷிர்தி சாய் பாபா கோவில், சிவன் கோவில், புனித மேரி ஆர்த்தோடாக்ஸ் தேவாலயம், தௌஜ் ஏரி, ஆரவல்லி ஃகோல்ப் கோர்ஸ், நஹர் சிங் கிரிக்கெட் விளையாட்டரங்கம், நகர பூங்கா, ஜர்னா மந்திர் கிராமம், மொஹப்தபத், ஃபரீத் கானின் கல்லறை, மாதா வைஷ்னோ தேவி மந்திர் சன்ஸ்தான் மற்றும் ஃபரிதாபாத் அனல்மின் நிலையம் போன்றவைகள் தான் இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களாகும்.

ஃபரிதாபாத்தின் வானிலை

மழைக்காலத்தை தவிர ஃபரிதாபாத்தின் மற்ற அனைத்து காலங்களிலும் வானிலை மிதவறட்சியுடன் அதிக வெப்பத்துடன் இருக்கும். இருப்பினும் பருவமழைக்காலங்களில் ஈரப்பதத்தின் அளவு அதிகமாகவே இருக்கும்.

Please Wait while comments are loading...