Search
  • Follow NativePlanet
Share

ரேவாரி - இந்தியாவின் கடைசி ஹிந்து அரசாட்சி!

12

ரேவாரி என்ற நகரம் ஹரியானா மாநிலத்தில் உள்ள ரேவாரி மாநகராட்சியில் அமைந்துள்ளது. டெல்லியிலிருந்து 89 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதால் தேசிய தலைநகர வட்டாரத்தில் ஒரு பகுதியாக விளங்குகிறது. இந்தியாவின் கடைசி ஹிந்து பேரரசரான ஹேமு படித்து வளர்ந்ததெல்லாம் ரேவாரியில் தான் என்று வரலாறு கூறுகிறது.

ஹவேலி என்றழைக்கப்படும் இவர் வாழ்ந்த மாளிகை இன்னமும் கூட இந்த நகரத்தில் உள்ள குதப்பூர் என்ற இடத்தில் உள்ளது.  இவர் காப்பர் தகடுகள், பாத்திரங்கள் மற்றும் பித்தளை போன்ற உலோக பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு இவர் வாழ்ந்த காலத்திலேயே அடித்தளம் நாட்டினார்.

இப்போதும் கூட இவ்வூர் இந்த தொழிற்சாலைகளுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. ரேவாரி ஹரியானாவில் உள்ள குர்கான் மாநகராட்சியின் ஒரு பகுதியாக விளங்கியது. பின்னர் 1989 வரை மகேந்திரகர்ரின் ஒரு பகுதியாக இருந்தது. அதற்கு பின்னரே இது தனி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

ரேவாரி மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

ரேவாரியிலுள்ள ரேவாரி ஹெரிடேஜ் ஸ்டீம் லோகோமோடிவ் அருங்காட்சியகம் தான் அங்குள்ள முக்கியமான ஈர்ப்பாகும். இந்த இடம் 1893-ஆம் கட்டப்பட்டதாகும்.

இந்தியாவிலேயே இந்த ஒரு அருங்காட்சியகத்தில் மட்டும் தான் பல மைல் தூரம் பயணம் செய்த சில ஸ்டீம் எஞ்சின்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.

1990-ஆம் ஆண்டிலிருந்து இந்த ஸ்டீம் என்ஜின்களின் பயன்பாடு நிறுத்தப்பட்டதால் அவைகள் கவனிப்பாரின்றி இருந்தன. பின்னர் இரயில்வே துறை டிசம்பர் 2002-ல் இந்த இடத்தின் உரிமையை கோரி இதனை ஹெரிடேஜ் அருங்காட்சியகமாக மாற்றியது.

ரேவாரியின் வானிலை

ரேவாரியில் எப்போதும் வறந்த வானிலையே நிலவும். இங்கு கோடை, குளிர் மற்றும் பருவம் என்று மூன்று காலங்கள் நிலவும்.

ரேவாரியை அடைவது எப்படி?

ரேவாரிக்கு இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து விமானம், இரயில் மற்றும் சாலை வழியாகவும் வந்தடையலாம்.

ரேவாரி சிறப்பு

ரேவாரி வானிலை

சிறந்த காலநிலை ரேவாரி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ரேவாரி

  • சாலை வழியாக
    வட இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுடன் என்.எச்.8 (டெல்லி-ஜெய்ப்பூர்-மும்பை), என்.எச்.71 (ஜலந்தர்-ரோஹ்டக்-ஜஜ்ஜார்-ரேவாரி) மற்றும் என்.எச்.71B (ரேவாரி-தருஹேரா-சொஹ்னா-பல்வால்) வழியாக ரேவாரி இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    இந்திய இரயில்வே அமைப்பின் முக்கிய பங்கு வகிக்கிறது ரேவாரியில் உள்ள இரயில் நிலையம். இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு இங்கிருந்து நேரடி இரயில் சேவைகள் உள்ளன. இங்கிருந்து 6 இரயில் பாதைகள் பிரிந்து செல்கின்றன. அவைகள் ரிங்கஸ் வழியாக அஜ்மெர், அல்வார் வழியாக அஜ்மெர், டெல்லி, ஹிசார், லோஹறு மற்றும் ரோஹ்டக் ஆகும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ரேவாரிக்கு மிக அருகில் இருப்பது புது டெல்லியில் இருக்கும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமாகும். டெல்லியிலிருந்து டாக்சி அல்லது அரசு/தனியார் பேருந்துகள் மூலம் ரேவாரிக்கு செல்லலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri