குர்கான் - வணிகத்தின் விருட்சமாய் மாறிவரும் நகரம்!

குர்கான், ஹரியானா மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும், இந்த நகரம் ஹரியானாவின் நிதி மற்றும் தொழிற்துறையின் தலைநகராகவும் திகழ்கிறது. இந்த  நகரம் தலைநகர் தில்லியில் இருந்து சுமார் 30 கி.மீ தெற்கே அமைந்துள்ளது. குர்கான் தலைநகர் தில்லியின் நான்கு முக்கிய சேட்டிலைட் நகரங்களில் ஒன்றாகும். மேலும் இது தேசிய தலைநகர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாவும் திகழ்கிறது.

குர்கான் நகரம் பழைய குர்கான் மற்றும் புதிய குர்கான் என்கிற இரண்டு நகரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பழைய குர்கான் நகரம் மோசமான உள்கட்டமைப்பு மற்றும் மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கின்றது.

இதற்கு எதிர்மறையாகபுதிய குர்கான் வானளாவிய கட்டடங்களுடன் நன்கு திட்டமிடப்பட்டு முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. குர்கான் நகரம் சண்டிகர் மற்றும் மும்பைக்கு பிறகு இந்தியாவில் மூன்றாவது அதிகளவு தனிநபர் வருமானம் உள்ள நகரம் ஆகும்.

குர்கான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியமான இடங்கள்

குர்கான் தொடக்கத்தில் தில்லிக்கு தென்மேற்கில் உள்ள ஒரு சிறிய விவசாய கிராமமாக இருந்தது. ஆனால் இப்போது இந்த நகரம் அதன் மக்கள் தொகை  மற்றும் பொருளாதார நிலையில் பெரும் அபிவிருத்தி அடைந்துள்ளது.

இப்போது இந்த நகரம் சுற்றுலா துறையில் பெரும் ஏற்றம் கண்டுள்ளது. குர்கான் நகரில் 80-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன. அவற்றில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மால் எனக் கருதப்படும் ஆம்பியன்ஸ் மால், சிட்டி சென்டர் மால் மற்றும் பிளாசா மால் போன்றவை மிக முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

இவற்றை தவிர செக்டர் 29-ல் அமைந்துள்ள கனவுகளின் ஓய்வு பள்ளத்தாக்கு பூங்கா மற்றும் கனவுகளின் இராச்சியம் போன்ற ஓய்வு பூங்காக்களும் குர்கான் சுற்றுலாவில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை அப்புகர், சுல்தான்பூர் பறவைகள் சரணாலயம், பட்டோடி அரண்மனை மற்றும் பல இடங்கள் பெரிதும் ஈர்க்கின்றன.

குர்கான் நகரின் உட்கட்டமைப்பு

சில காலங்களுக்கு முன்னர் தில்லியின் செயல் படாத புறநகராக இருந்த குர்கானில் இப்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மேலும் இங்கு ஆடம்பர அலுவலக வளாகங்கள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் போன்றவை அதிக அளவில் உள்ளன.

சமீப காலங்களில் குர்கான் நகரம் ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய ஏற்றத்தை சந்தித்துள்ளது. குர்கான், ஆரம்பத்தில் தில்லியின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய விவசாய கிராமமாக இருந்தது.

ஆனால் இங்குள்ள மக்களுக்கு சொந்தமான பண்ணைகளை ரியல் எஸ்டேட் டெவலப்பரான  டிஎல்எஃப் குழுமம் வாங்கிய பின்னர் அதன் மக்கள் மற்றும் பொருளாதார நிலைகளின் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

விரைவான நகரமயமாக்கல் காரணமாக இங்குள்ள விவசாயிகள் தங்களுடைய நிலங்களை தனியார் சொட்டு டெவலப்பர்களுக்கு விற்று விட்டு மிகப் பெரிய கோடீஸ்வரர்களாக மாறி விட்டனர்.

சில்லறை வணிகம் குர்கானில் மிகப் பெரிய தொழிலாக உருவெடுத்து வருகிறது. இங்கு 43-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன. அவற்றுள் முன்பு இந்தியாவின் முதலாவது மிகப் பெரிய மால் ஆக இருந்து கொச்சியில் உள்ள லுலு மாலிடம் தன்னுடைய முதலாவது இடத்தை பறிகொடுத்ததுமான ஆம்பியன்ஸ் மால் மிக முக்கியமானதாகும்.

கொச்சியில் உள்ள லுலு மால் இந்தியாவில் முதலாவது மிகப் பெரிய மாலாகவும் ஆசியாவில் இரண்டாவது பெரிய மாலாகவும் கருதப்படுகிறது. குர்கானில் உள்ள மால்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் அதிக மால்கள் உள்ள மூன்றாவது பெரிய நகரமாக குர்கான் விளங்குகிறது.

பெரும் எண்ணிக்கையிலான பன்னாட்டு மற்றும் தேசிய நிறுவனங்கள் தில்லி அருகே உள்ள இந்த வளர்ந்து வரும் நகரத்தில் தங்களுடைய தலைமையகத்தை திறந்துள்ளன.

இந்த நகரம் ஹரியானாவில் அமைந்துள்ள போதிலும், தலைநகர் தில்லியின் ஒரு பகுதியாக விளங்குகிறது. இங்குள்ள  உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக  குர்கான் தொழிலதிபர்களின் விருப்பமான இடமாக கருதப்படுகிறது.

குர்கானை பார்ப்பதற்கான சிறந்த நேரம்

குர்கானுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா செல்லலாம். எனினும், குர்கானுக்கு குளிர்காலத்தில் சுற்றுலா செல்வதே சிறந்தது. ஆண்டின் இந்த நேரத்தில், இங்கு  வானிலை இனிமையானதாகவும் மென்மையாகவும் விளங்குகிறது.

மேலும் இந்தப் பருவத்தில் இங்குள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தும் பல்வேறு நடவடிக்கைகளை அனுபவித்தும் மகிழலாம். மேலும் இங்கு குளிர்காலத்தில் வெப்ப பிரச்சனையில் சிக்காமல் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட்டு மகிழலாம்.

குர்கானை எவ்வாறு அடைவது?

குர்கான் ரயில் மற்றும் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தேசிய விமான நிலையம் குர்கானுக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும்.

இந்த விமான நிலையம் தில்லியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.  இந்த விமான நிலையம் குர்கானை நாட்டின் பிறா பகுதிகளிடனும் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளுடனும் இணைக்கின்றது.

Please Wait while comments are loading...