Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குர்கான் » ஈர்க்கும் இடங்கள் » கனவுகளின் இராச்சியம்

கனவுகளின் இராச்சியம், குர்கான்

112

கனவுகளின் இராச்சியம் என்பது ஹரியானா மாநிலத்தில் உள்ள  குர்கானின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது தங்க முக்கோணத்தின் மிக அருகில் எளிதில் அணுகும் வண்ணம் அமைந்துள்ளது. இதை எளிதாக ஆக்ரா, தில்லி மற்றும் ஜெய்ப்பூரில் இருந்து அடையலாம்.

நாட்டின் கலை, கலாச்சாரம், உணவு, பாரம்பரியம் மற்றும் பிற கலைகளின் புகலிடமாக விளங்குவதால்  இது ஒரு சிறந்த காட்சி இடமாக விளங்குகிறது. இது நவீன தொழில்நுட்பத்தின் அற்புதமான படைப்பாகும்.

ஜனவரி 29, 2010 இல் நிறுவப்பட்ட இது ஓய்வு பள்ளத்தாக்கு பார்க் அருகில் உள்ளது. பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் கனவுகளின் இராச்சியத்துடன் இணைந்துள்ளனர்.

கனவுகளின் இராச்சியம் இந்திய சுற்றுலா பயணிகளை மட்டுமல்ல சர்வதேச பயணிகளையும் கவர்கிறது. இங்கு இந்திய பாரம்பரிய மற்றும் நவீன கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள பொழுதுபோக்கு முறையில் வழங்கப்படுகிறது.

கைவினை, இசை நிகழ்ச்சிகள்,  நாடகங்கள், திருவிழாக்கள், தெரு நடனங்கள், மற்றும்  புராண நிகழ்ச்சிகள் போன்றவை இங்கு வழங்கப்படுகின்றன.

நௌடன்கி மஹால் மற்றும் ஷ்ஹொவ்ஸ்ஹ திரையரங்கு போன்றவற்றில் இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தின் பல்வேறு வடிவங்கள் காட்சிகளாக நடத்தப்படுகின்றன. மேலும் இங்குள்ள கலாச்சார அரங்கில் இந்திய உணவு மற்றும் கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தபடுகின்றன.

நௌடன்கி மஹாலில் சுமார்  835 பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து காட்சிகளை கண்டுகளிக்க முடியும். இங்கு பாலிவுட்டை போன்று  இசை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இங்கு  இந்திய சினிமாவின்  கண்கவர் நிகழ்ச்சிகள் காண்பவரின் மனதை கவரும் மற்றும் பளிச்சிடும் வகையில் வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் நிகழ்ச்சிகள் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவையாக விளங்குவதால் இங்கு வரும் பயணிகளின் மனதை மிகவும் கவர்கிறது.

தானியங்கி பறக்கும் பார்கள், ஹைட்ராலிக் மேடை மற்றும் மேட்ரிக்ஸ் ஒலி அமைப்பு போன்றவை மிகப் பெரிய வாழ்க்கை அனுபவத்தை கொடுக்கிறது. நௌடன்கி மஹாலில் உள்ள  மஹாராஜா தளம் பார்வையாளர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளை வழங்குகிறது. காட்சிகளின் இடைவேளையில்  தின்பண்டங்கள் மற்றும் பானங்கள் பரிமாறப்படுகின்றன.

இங்குள்ள ஷோ ஷா திரையரங்கில் ராம் லிலா மற்றும் கிருஷ்ணா லிலா போன்ற புராண கதைகள்  நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் காண்பிக்கப்படுகின்றன. ஆடம்பர திருமண ஒத்திகைகள் கூட இங்கு நடைபெறுகின்றன.

ஆடம்பரமான ஆடைகள் மற்றும் அற்புதமான நடனங்களுடன் இந்திய காவியங்கள் அற்புதமான முறையில் இங்கு வழங்கப்படுகிறது. திறமை வேட்டைகளும் இங்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது. மேலும் இங்கு சுமார் 350 இருக்கைகள் கொண்ட மூடப்பட்ட கலையரங்கம் உள்ளது.

கலாச்சார அரங்கில் ஒரு குளிரூட்டப்பட்ட இடம் ஆகும். இங்கு பார்வையாளர்கள் இந்திய கலாச்சாரம், மற்றும் உணவுகளை அனுபவித்து மகிழ்கிறார்கள். மேலும் அவர்கள் ஷாப்பிங் வேட்டையில் திகட்டத் திகட்ட ஈடுபடுகின்றார்கள்.

இது கோவாவின் வாழ்க்கை,  கேரளாவின் காயல், ராஜஸ்தானின் அரச வாழ்க்கை,  அல்லது பஞ்சாபின் பழமையான வாழ்க்கை போன்றவற்றை சுற்றுலா பயணிகள் இந்த ஒரே இடத்தில் அனுபவித்து மகிழலாம்.

இது இந்தியாவின் வளமான பாரம்பரியம் மற்றும் கட்டிடக் கலையை பிரதிபலிக்கிறது. பார்வையாளர்கள் கலைஞர்களுடன் உரையாடலாம். உணவுப் பிரியர்கள் இங்கு  இந்தியாவின்  14 மாநிலங்களில் கிடைக்கும் எண்ணற்ற சுவையான உணவுகளை உண்டு மகிழலாம்.

ஒவ்வொரு மாநிலத்தின்  பெவிலியன்களின்  கட்டமைப்பு அந்தந்த மாநிலத்தின் தனிப்பட்ட சிறப்புகளை  குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெஹ்க்ஹன பார் மற்றும் கேரளா பார் என்கிற இரண்டு லவுஞ்ச் பார்கள் கலாச்சார கல்லியில் உள்ளன.  இது 100,000 சதுர அடி பரப்பளவிற்கு மேல் பரந்து விரிந்துள்ளது.

IIFA வின் பஸ் கஃபே IIFA வால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு அலங்காரம், மேடை, இசை மற்றும் சிறப்பு தொழில் நுட்பம் போன்றவை சிறப்பாக காட்சிப்படுத்தப்படுகின்றன.

இது பாலிவுட்டின் கருப்பொருளால் வடிவமைக்கபட்ட  ரெஸ்டோ-பார் ஆகும். இங்கு  ஆடைகள், சுவரொட்டிகள், IIFA விருதுகள் மற்றும் பிற மதிப்புள்ள பாலிவுட் நினைவு பொருட்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat