Search
  • Follow NativePlanet
Share

பானிபட் - இந்தியாவின் கைத்தறி நகரம்!

27

ஹரியானாவில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் தான் பானிபட். இந்தியாவின் வரலாற்றை மாற்றியமைத்த மூன்று யுத்தங்கள் இங்கு நடந்துள்ளன. ஒரே பெயரில் உள்ள இந்த மாவட்டமும், நகரமும் எண்ணற்ற வரலாற்றுப் பெருமை மிக்க நினைவுச் சின்னங்கள் மற்றும் கலாச்சார தலங்களை கொண்டுள்ளன. பகவத் கீதையின் முதல் செய்யுளில் 'தரம்ஷேத்ரா' என்ற பெயரில் பானிபட் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வரலாற்றுச் சிறப்பு மட்டுமல்லாமல், 'நெசவாளர்களின் நகரம்' என்றும் பானிபட் அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் கைத்தறி பொருட்கள் இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் அயல் நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

பானிபட் நகரத்தைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

பானிபட் நகரத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு நினைவுச்சின்னங்கள், கட்டிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உளள்ன. பானிபட் மியூசியத்தில் நவீன கால கைவினைப் பொருட்கள் மட்டுமல்லாமல், அதன் வரலாற்றை வெளிப்படுத்தும் ஆர்வமூட்டக் கூடிய பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. இங்கிருக்கும் 'பழைய கோட்டை' என்ற அழிந்த நிலையில் இருக்கும் பழமையான கோட்டைக்கும் நீங்கள் சென்று வரலாம்.

இந்தியாவின் பிற நகரங்களைப் போலவே பானிபட்டிலும் பல்வேறு மதம் தொடர்பான தலங்கள் உள்ளன. முகலாய வம்சத்தை நிறுவியவரான பாபரால் கட்டப்பட்ட காபுலி ஷா மசூதி என்ற பழமையான மசூதி பானிபட்டில் உள்ளது. தேவி கோவில் என்ற பெயரில் இருக்கும் இந்து மத கோவிலும் கட்டிடக்கலையின் சிறப்புகளை பெற்றுள்ள இடமாக உள்ளது.

முகலாயப் படையை எதிர்த்து இரண்டாவது பானிபட் யுத்தத்தில் தீரமுடன் போர் புரிந்த ஹெமு-வின் சமாதி ஸ்தால் அல்லது நினைவிடமும் இங்கே உள்ளது. அக்பருடைய முகாமில் அவருடைய தலை வெட்டப்பட்டது. அதன் பின்னர், அவருடைய நினைவிடம் அவருடைய ஆதரவாளர்களால் இந்த இடத்தில் கட்டப்பட்டது.

பாபருடன் 'முதல் பானிபட் யுத்தத்தில்' போரிட்ட இப்ராஹிம் லோடியின் கல்லறையும் பானிபட் தாலுகா அலுவலகத்திற்கு அருகில் உள்ளது. இப்ராஹிம் லோடி இந்த இடத்தில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். நீங்கள் பானிபட்டில் இருக்கும் வேளையில், பு-அலி ஷா கலந்தரின் சமாதிக்கும் செல்லலாம்.

இப்ராஹிம் லோடியை போரில் வெற்றி கொண்டதன் நினைவாக பாபர் உருவாக்கிய குளம் மற்றும் ஒரு மசூதியை கொண்டுள்ள காபுலி பூங்கா தோட்டத்திற்கும் நீங்கள் செல்லலாம். சில ஆண்டுகளுக்குப் பின்னர், 'சபுட்ரா' என்றழைக்கப்படும் மேடையை ஹுமாயூன் இங்கே கட்டினார்.

மேலும், பு-அலி ஷா கலந்தரில் உள்ள சலார் குஞ்ச் கேட் கல்லறை மற்றும் கலா ஆம்ப் ஆகிய இடத்திற்கும் நீங்கள் சென்று வரலாம்.

பானிபட்டின் பருவநிலை

பானிபட் நகரத்தில் மிதவெப்ப நிலை பிரதேச பருவநிலை நிலவுவதால் கோடை, மழை மற்றும் குளிர்காலம் ஆகிய பருவங்கள் நிலவி வருகின்றன.

இங்கே கோடைக்காலம் மிகவும் வெப்பமாகவும், குளிர்காலம் மிகவும் குளிராகவும் இருக்கும். வரவேற்பு தரும் வகையிலும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும் குளிர்காலத்தில் இங்கே சுற்றுலா வருவது சிறந்தது.

பானிபட் நகரத்தை அடையும் வழிகள்

இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுடனும் பானிபட் மிகவும் நன்றாக விமானம், இரயில் மற்றும் சாலை போக்குவரத்துகளால் இணைக்கப்பட்டுள்ளது.

பானிபட் சிறப்பு

பானிபட் வானிலை

சிறந்த காலநிலை பானிபட்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பானிபட்

  • சாலை வழியாக
    பானிபட் நகரம் GT கர்னால் சாலையில் அமைந்துள்ளது மற்றும் டெல்லி நெடுஞ்சாலையிலிருந்து 1 மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது. மிகவும் சிறப்பாக பொது மற்றும் தனியார் போக்குவரத்து சாதனங்களால் இணைக்கப்பட்டுள்ள இந்நகரத்திலிருந்து டெல்லி, அம்பாலா, கர்னால் மற்றும் பிற முக்கிய நகரங்ளுக்கும், அருகிலுள்ள நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பானிபட் நகரம் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுடன் இரயில் வழியாக மிகவும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. பானிபட் இரயில் நிலையத்திற்கு ஜம்மு தாவி, டெல்லி, மும்பை மற்றும் ஜெய்ப்பூரிலிருந்து இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பானிபட்டுக்கு அருகில் உள்ள விமான நிலையம் 98 கிமீ தொலைவில் உள்ள டெல்லி விமான நிலையமாகும். டெல்லியில் இருந்து நீங்கள் டாக்ஸிகள் அல்லது பேருந்துகளில் பானிபட் நோக்கி செல்ல முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 May,Sat
Check Out
10 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun