குஃப்ரி –சிம்லாவின் பனிக் கிரீடம்

குஃப்ரி என்னும் சிறிய நகரம் சிம்லாவிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில், கடல் மட்டத்திலிருந்து 2743 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.இங்குள்ள மக்கள் பேசும் மொழியில் 'ஏரி' என்று பொருள்படும் 'குஃப்ர்' எனும் வார்த்தையிலிருந்து குஃப்ரி என்ற பெயர் இந்த நகருக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. பல்வகையான அழகிய இடங்கள் இந்நகரத்தில் உள்ளதால், ஆண்டு முழுதும், சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் இங்கு வந்து செல்கின்றனர். 

மஹசு மலை உச்சி,  கிரேட் இமயமலை இயற்கைப் பூங்கா,  ஃபகு, போன்றவை முக்கியமான சுற்றுலாத்தலங்கள் ஆகும்.180 க்கும் மேற்பட்ட பறவை மற்றும் விலங்கு இனங்கள் கிரேட் இமயமலை இயற்கைப் பூங்காவில் உள்ளன.

ஃபகு எனப்படும் இடம் மிக அமைதியான இடமாகும். இது குஃப்ரியிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மிக அழகிய மலைக்குன்றுகளும் அழகிய மர வேலைப்பாடுகள் கொண்ட கோவில்களும் இப்பகுதியைச் சுற்றி அமைந்துள்ளன. கோவில்கள் அதிகம் நிறைந்துள்ளதால், ஆன்மீகத் தலமாகவும் விளங்குகிறது.

பலவிதமான சாகச மற்றும் பிற விளையாட்டுக்களை விரும்புபவர்கள், பனிமலையேற்றம், பனிச்சறுக்கு விளையாட்டுக்கள், குதிரையேற்றம், கேம்பிங்க், கோ- கார்ட்டிங்க் போன்றவற்றை விளையாடி மகிழ்கின்றனர். சாகச விளையாடுக்களைத் தவிர, எளிதில் செல்ல முடியாத இடங்களுக்குச் செல்ல குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

சிம்லாவிற்கு 34 கிலோ மீட்டர் தூரத்தில் ஜப்பராத்தி என்னும் விமான நிலையம் அமைந்துள்ள சிறுநகரம், இந்நகரத்திற்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும். பல முக்கிய நகரங்களுக்கும் இந்த விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.

குஃப்ரி நகரம், குறுகிய இரயில் பாதை மூலம் சிம்லாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிம்லாவானது   குஃப்ரியிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கல்சா  என்னும் நகரத்திலிருந்து இரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

கல்சாவிலிருந்து இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் இரயில்கள் உண்டு. பேருந்து மூலம் பயணம் செய்ய விரும்பும் சுற்றுலா  பயணிகளுக்காக, சிம்லா, நர்தண்டா, ரான்பூர் போன்ற ஊர்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாநில அரசு போக்குவரத்து பேருந்துகளும், தனியார் சொகுசு பேருந்துகளும், சிம்லாவிலிருந்து குஃப்ரி நகரத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன. கோடை காலங்களில் , அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரை இங்கு 12℃ முதல் 19℃  வரை வெப்பநிலை நிலவுகிறது.

மழைக்காலங்களில் மிகக் குறைந்த அளவு மழைப் பொழிவே இங்கு உள்ளது.  அப்பொழுது இங்கு வெப்பநிலை 10℃ க்கும் குறைவாகக் காணப்படுகிறது. குளிர்காலங்களில் மிக அதிகக் குளிர் காணப்படுகிறது.

அந்த காலங்களில் 0℃க்கும் குறைவாகவே வெப்பநிலை உள்ளது.  மார்ச் முதல் நவம்பர் வரையான காலமே இப்பகுதியில் சுற்றுலா மேற்கொள்வதற்கு உகந்த காலமாகும்.

Please Wait while comments are loading...