Search
  • Follow NativePlanet
Share

கோட்காயீ – ஒளிந்திருக்கும் ஏகாந்த அமைதி!

9

கோட்காயீ எனும் இந்த சிறு நகரம் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தின் சிம்லா  மாவட்டத்தில்  கடல் மட்டத்திலிருந்து 1800 மீ உயரத்தில் வீற்றிருக்கிறது. இந்த இடத்தில் உள்ள ஒரு சிகரத்தின் உச்சியில் அமைந்துள்ள ராஜ அரண்மனையின் காரணமாக கோட்காயீ என்ற பெயர் வந்துள்ளது. ‘கோட்’ எனும் சொல்லுக்கு கோட்டை என்றும், ‘காயீ’ எனும் சொல்லுக்கு சிகரம் என்பதும் பொருளாகும். இந்த இடத்தின் தனித்தன்மையான இயற்கை அழகும், நிசப்தம் நிலவும் சூழலும் வெகு தூரத்திலிருந்தும் சுற்றுலா ரசிகர்களை ஈர்க்கின்றன.

23000 ஹெக்டேர்கள் பரப்பில் அமைந்துள்ள ஆப்பிள் தோட்டங்கள் இப்பகுதியில் முக்கியமான அடையாளமாகும். உரிமையாளர்களிடம் முறையான அனுமதி பெற்று பயணிகள் இந்த தோப்புகளுக்கு விஜயம் செய்யலாம்.

மேலும் கோட்காயீ பகுதியில் மலர்த்தாவரங்களின் வளர்ப்பும் பிரதான தொழிலாக விளங்குகிறது. கிரி ஆறு இந்த நகரத்திற்கு அருகில் ஓடுவதே இப்பகுதியின் மண் வளத்திற்கு காரணமாகும்.  

ராணா சாப் மன்னரால் கட்டப்பட்டுள்ள கோட்காயீ அரண்மனை ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக திகழ்கிறது. பகோடா கோயில் பாணியில் அமைந்து கூரையுடன் திபெத்திய கட்டிடக்கலை அம்சங்களுடன் இந்த அரண்மனை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கோட்காயீ பகுதியில் உள்ள பல கோயில்களில் மஹாமாயீ கோயில் மற்றும் லங்க்ரா வீர் கோயில் ஆகியவை பிரசித்தமாக அறியப்படுகின்றன. இந்த கோயில்கள் தவிர பயணிகள் நேரா காட்டி, கியாலா வனப்பகுதி மற்றும் திலோன் தடாகம் போன்றவற்றுக்கும் விஜயம் செய்து மகிழலாம்.

கோட்காயீ சுற்றுலாஸ்தலமானது விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கம் போன்ற போக்குவரத்து வசதிகள் மூலம் எளிதில் சென்றடையும்படி  அமைந்துள்ளது.

சிம்லா விமான நிலையம் கோட்காயீக்கு அருகில் உள்ளது. இங்கிருந்து குல்லு மற்றும் டெல்லிக்கு சேவைகள் உள்ளன. வெளிநாட்டுப்பயணிகள் டெல்லி வழியாக சிம்லாவுக்கு இணைப்புச்சேவைகள் மூலம் வரலாம்.

சிம்லா ரயில் நிலையம் கோட்காயீக்கு அருகில் உள்ள ரயில் நிலையமாகும். இது கல்கா நிலையத்துடன் இணைப்புகளை கொண்டுள்ளது. சாலை மார்க்கமாக பயணிக்க விரும்பும் பயணிகள் அருகில் உள்ள நகரங்களிலிருந்து பேருந்துகள், டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் மூலமாக கோட்காயீ சுற்றுலாத்தலத்தை அடையலாம்.

கோட்காயீ பகுதியின் பருவநிலை வருடம் முழுக்க இனிமையானதாகவே காட்சியளிக்கிறது. ஏப்ரல் மாதத்தில் இங்கு கோடை துவங்குகிறது. இது ஜூன் வரை நீடிக்கிறது.

இக்காலத்தில் அதிகபட்சமாக 28°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 15°C வெப்பநிலையும் நிலவுகிறது. தவிர, குளிர்காலம் நவம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் 15°C முதல் 4°C  வரை வெப்பநிலை நிலவுகிறது.

கோட்காயீ சிறப்பு

கோட்காயீ வானிலை

சிறந்த காலநிலை கோட்காயீ

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கோட்காயீ

  • சாலை வழியாக
    சிம்லாவிலிருந்து நேரடி பேருந்துகள் மூலமாக சுற்றுலாப்பயணிகள் கோட்காயீ நகரத்திற்கு எளிதாக வந்தடையலாம். தவிர டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் மூலமும் கோட்காயீ நகருக்கு வரலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கோட்காயீ நகரத்திற்கு அருகில் சிம்லா ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது கல்கா ரயில் நிலையத்துடன் மீட்டர் கேஜ் பாதையால் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயில் நிலையங்களிலிருந்து டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் மூலமாக பயணிகள் கோட்காயீ சுற்றுலாத்தலத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கோட்காயீ நகரத்திற்கு அருகில் சிம்லா விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து டெல்லி, குல்லு போன்ற நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. வெளிநாட்டு பயணிகளுக்கு வசதியாக டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிம்லாவுக்கு இணைப்பு சேவைகள் உண்டு. சிம்லா விமான நிலையத்திலிருந்து பயணிகள் டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் மூலம் கோட்காயீ நகருக்கு வரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 May,Sat
Check Out
10 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun