Search
 • Follow NativePlanet
Share

மணாலி சுற்றுலாத்தலம் –காத்திருக்கும் வெண்பனி கனவுலகம்

71

கடல் மட்டத்திலிருந்து 1950 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மணாலி சுற்றுலாத்தலம் ஹிமாச்சல் பிரதேஷ மாநிலத்திலேயே மிகப்பிரசித்தமான மலைவாசஸ்தல சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது ‘தேவர்கள் வசிக்கும் பூமி’ எனப்படும் குலு மாவட்டத்தின் ஒரு அங்கமாக உள்ள இந்த மணாலி மாநிலத்தலைநகரான சிம்லாவிலிருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ளது.

ஹிந்து புராணிக நம்பிக்கைகளின்படி, ஆக்கக்கடவுளான பிரம்மாவால் இந்தியாவை நிர்வகிக்குமாறு நியமிக்கப்பட்ட மனு எனும் அவதாரத்தின் பெயரால் இந்த மணாலி அழைக்கப்படுகிறது.

ஏழு யுகங்களை ஆக்கி அழித்தபின் மனு இந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. ஏழு முக்கிய ரிஷிகள் வசித்த புனித பூமியாகவும் இந்த மணாலி நகரம் ஹிந்து புராண ஐதீகத்தில் குறிப்பிடப்படுகிறது.

மனம் மயக்கும் இயற்கை அழகு, வண்ணமயமான மலர்த்தோட்டங்கள், பனிமுடீய மலைச்சிகரங்கள் மற்றும் சிவப்பு-பச்சை ஆப்பிள் தோட்டங்கள் போன்ற உன்னதமான அழகம்சங்களின் மூலம் இந்த மணாலி காலங்காலமாக சுற்றுலாப்பயணிகளை வசீகரித்து வருகிறது.

இங்கு விஜயம் செய்யும் பயணிகள் ‘கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க்’, ஹடிம்பா கோயில், சோலங் வாலி எனும் பள்ளத்தாக்கு, ரோஹ்தங் பாஸ் மற்றும் பியாஸ் குண்ட் எனும் சிறு ஏரி போன்ற இடங்களை தவறாமல் பார்ப்பது அவசியம். பண்டோஹ் அணை, சந்திரகானி பாஸ், ரகுநாத் கோயில் மற்றும் ஜகந்நாதி தேவி கோயில் ஆகியவை இங்குள்ள இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.

1533ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள ஹடிம்பா கோயில் ஹடிம்பா தேவிக்காக கட்டப்பட்டிருக்கிறது. ஹடிம்பா எனும் அசுரனின் சகோதரி இந்த ஹடிம்பா தேவி என்பதாக புராணிக ஐதீகம் கூறுகிறது.

உள்ளூர் நம்பிக்கைகளின்படி, இந்த கோயிலை கட்டுவித்த அரசன் இது போன்று மற்றொரு கோயில் உருவாககக்கூடாது என்பதற்காக இந்த கோயிலைக்கட்டிய கலைஞர்களின் வலது கையை துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது.

மணாலியில் உள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமான சோலங் பள்ளத்தாக்கு இங்குள்ள 300 மீ உயரம் கொண்ட ‘ஸ்கி’ (பனிச்சறுக்கு) மின் தூக்கி வசதியை கொண்டுள்ளது.

இங்கு வருடாந்திரமாக நடத்தப்படும் குளிர்கால பனிச்சறுக்கு (ஸ்கி) திருவிழாவின் போது ஏராளமான சுற்றுலா ரசிகர்கள் இங்கு வருகை தருகின்றனர். ரோஹ்தங் பாஸ் எனப்படும் உயரமான மலையேற்றப்பாதை இப்பகுதியில் முக்கியமான பிக்னிக் ஸ்தலமாக பயணிகள் மத்தியில் பிரபலமாக அறியப்படுகிறது.

வாகனம் (ஜீப்) செல்லக்கூடிய உயரமான மலைச்சாலையாக அறியப்படும் இந்த மலைப்பாதை சாகசப்பொழுதுபோக்கு பிரியர்கள் பாராகிளைடிங் (பாராசூட் பறப்பு), மவுண்டெய்ன் பைக்கிங் மற்றும் பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு உதவியாக உள்ளது.

இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடாவிட்டாலும் இந்த மலைப்பாதை ஸ்தலத்திலிருந்து மயிர்க்கூச்செரிய வைக்கும் எழில் காட்சிகளையும், பனிச்சிகரங்களையும், மலைகளையும் பார்த்து ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மணாலியில் பியாஸ் குண்ட் எனும் ஸ்தலத்திற்கும் பயணிகள் விஜயம் செய்யலாம். மஹாபாரத காவியத்தை எழுதிய வியாச முனிவர் இந்த இடத்தில் நீராடியதாக சொல்லப்படுகிறது. உள்ளூர் நம்பிக்கைகளின்படி இந்த புனித ஆற்றில் மூழ்கி எழுந்தால் எந்த விதமான தோல் வியாதியும் குணமாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

மணாலியில் உள்ள வஷிஷ்ட் எனும் கிராமம் மணற்பாறைகளால் அமைக்கப்பட்டுள்ள கோயில்களுக்கும் இயற்கை நீரூற்றுகளுக்கும் புகழ் பெற்றுள்ளது. உள்ளூர் கதைகளின்படி ராமனின் தம்பியான லட்சுமணன் இந்த கிராமத்திலுள்ள சல்ஃபர் நீரூற்றுகளை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது. இவை தவிர இக்கிராமத்தில் கால குரு மற்றும் ராமர் கோயில் ஆகியவை பயணிகள் தரிசிக்க வேண்டிய அம்சங்களாக அமைந்துள்ளன.

காட்டுயிர் அம்சங்களை பார்த்து ரசிக்க விரும்பும் பயணிகள் தவறாது ‘கிரேட் ஹிமாலயன் நேஷனல் பார்க் எனப்படும் தேசியப்பூங்காவிற்கு விஜயம் செய்யலாம். இங்கு பல அருகி வரும் பறவையினங்களும் வெஸ்ட்டர்ன் டிராகோபான் எனும் காட்டுக்கோழியும் இந்த பூங்காவில் வசிக்கின்றன. 30 வகையான பாலூட்டி விலங்குகள் மற்றும் 300 வகையான பறவைகள் இந்த பூங்காவில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன.

1500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாக சொல்லப்படும் ஜகன்னாதி தேவி கோயில் ஒரு முக்கியமான யாத்ரீக ஸ்தலமாக மணாலியில் வீற்றுள்ளது. விஷ்ணுவின் சகோதரியான புவனேஷ்வரிக்காக இந்த இந்த ஜகன்னாதி தேவி கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர ரகுநாத் கோயில் மணாலி பகுதியில் மற்றொரு பிரசித்தமான ஆலயமாக அமைந்துள்ளது. இந்த கோயிலின் வடிவமைப்பு வட இந்திய ஹிமாலயப்பகுதிக்குரிய பஹாரி பாணி கலையம்சங்கள் மற்றும் பிரமிடு கோபுர பாணி ஆகிய இரண்டின் கலவையாக காட்சியளிக்கிறது.

சாகச துணிகர பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் விளையாட்டுகளை விரும்புவோர்க்கு உகந்த சுற்றுலாத்தலமாகவும் மணாலி புகழ் பெற்றுள்ளது. சிகரமேற்றம், மலைப்பாதை சைக்கிள் சவாரி, ஆற்றுப்படகுச்சவாரி, மலையேற்றம், ஜார்பிங் எனப்படும் சுவாரசியமான கண்ணாடி உருண்டை சவாரி மற்றும் பாராகிளைடிங் போன்ற பல்விதமான சாகசப்பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு நிறைந்துள்ளன.

தேவ் திப்பா பேஸ் கேம்ப், பின் பார்வதி பாஸ், பியாஸ் குண்ட், BAL பாஸ், சந்த்ரகனி, பிராச்சியல் மற்றும் SAR தல் லேக் போன்ற முக்கியமான மலையேற்றப்பாதைகள் மணாலி சுற்றுலாத்தலத்தில் அமைந்துள்ளன.

ரொஹ்தங் பாஸ், லடாக் மற்றும் லஹௌல்-ஸ்பிட்டி பிரதேசம் போன்றவை மணாலியில் மலைப்பாதை சைக்கிள் சவாரிக்கு ஏற்ற இடங்களாக அமைந்துள்ளன. ஜுன் முதல் செப்டம்பர் வரையில் இந்த சாலைகளில் பனி உறைந்திருக்காது என்பதால் இக்காலம் சைக்கிள் சவாரிக்கு ஏற்றதாக இருக்கும்.

மணாலி சுற்றுலாத்தலத்துக்கு பயணிகள் விமான மார்க்கம், ரயில் மார்க்கம் மற்றும் சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். மணாலிக்கு அருகில் 50 கி.மீ தூரத்தில் புந்தர் விமான நிலையம் அல்லது குலு-மணாலி உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது.

இங்கிருந்து டெல்லி, சிம்லா, சண்டிகர்,பதான்கோட் மற்றும் தரம்சாலா போன்ற நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. வெளிநாடுகளிலிருந்து மணாலிக்கு வரும் பயணிகளுக்கு வசதியாக அருகில் டெல்லி சர்வதேச விமான நிலையமும் அமைந்துள்ளது.

மணாலி சுற்றுலாத்தலத்துக்கு அருகில் 165 கி.மீ தூரத்தில் ஜோகீந்தர் நகர் ரயில் நிலையம் உள்ளது. இது சண்டிகர் வழியாக மற்ற நகரங்களுடன் ரயில் இணைப்பு வசதிகளை அளிக்கிறது.

இது தவிர ஹிமாசல் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக்கழகம் (HPTDC) மணாலியிலிருந்து சண்டிகர், சிம்லா, டெல்லி மற்றும் பதான்கோட் போன்ற நகரங்களுக்கு சொகுசுப்பேருந்துகளை இயக்குகிறது.

மணாலி சுற்றுலாத்தலத்தில் வருடமுழுதுமே இதமான இனிமையான பருவநிலை நிலவுகிறது. இருப்பினும் இந்தியாவிலேயே பிரசித்தமான இந்த மலைவாசஸ்தலத்துக்கு பயணம் மேற்கொள்ள மார்ச் முதல் ஜூன் வரையான பருவம் மிகவும் உகந்ததாக உள்ளது.

மணாலி சிறப்பு

மணாலி வானிலை

சிறந்த காலநிலை மணாலி

 • Jan
 • Feb
 • Mar
 • Apr
 • May
 • Jun
 • July
 • Aug
 • Sep
 • Oct
 • Nov
 • Dec

எப்படி அடைவது மணாலி

 • சாலை வழியாக
  மணாலி சுற்றுலாத்தலம் மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்களுடன் ஹிமாசல் பிரதேச மாநில போக்குவரத்து கழகமான HPTC மூலமாக இயக்கப்படும் பேருந்து சேவைகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர குல்லு மணாலியிலிருந்து சண்டிகர், சிம்லா, டெல்லி மற்றும் பதான்கோட் போன்ற நகரங்களுக்கு ஹிமாசல் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக்கழகம் (HPTDC) சொகுசுப்பேருந்துகளையும் இயக்குகிறது.
  திசைகளைத் தேட
 • ரயில் மூலம்
  மணாலி சுற்றுலாத்தலத்திற்கு அருகில் 165 கி.மீ தூரத்தில் ஜோகீந்தர் நகர் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் மணாலியிலிருந்து 310 கி.மீ தூரத்திலுள்ள சண்டிகர் வழியாக இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு ரயில் இணைப்பு வசதிகளை கொண்டுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து டாக்சிகள் மூலமாக பயணிகள் மணாலி சுற்றுலாத்தலத்தை அடையலாம்.
  திசைகளைத் தேட
 • விமானம் மூலம்
  புந்தர் விமான நிலையம் அல்லது குல்லு மணாலி விமான நிலையம் மணாலி சுற்றுலாத்தலத்திற்கு அருகிலுள்ள விமான நிலையமாக 50 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கிருந்து சிம்லா, சண்டிகர், பதான்கோட், தரம்சாலா, மற்றும் டெல்லி போன்ற நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. இந்த விமான நிலையத்திலிருந்து டாக்சிகள் மூலமாக பயணிகள் மணாலி சுற்றுலாத்தலத்தை அடையலாம். வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு வசதியாக அருகில் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.
  திசைகளைத் தேட

மணாலி பயண வழிகாட்டி

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Oct,Wed
Return On
21 Oct,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
20 Oct,Wed
Check Out
21 Oct,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
20 Oct,Wed
Return On
21 Oct,Thu