Search
  • Follow NativePlanet
Share

லடாக் - இந்திரலோகத்தொடு போட்டி போடும் நகரம்!

31

இண்டஸ் நதிக்கரையில் அமைந்துள்ள லடாக், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலம். இது "தி லாஸ்ட் ஷங்ரி லா/கடைசி ஷங்ரி லா", "குட்டி திபெத்", "நிலவு பூமி", "உடைந்த நிலவு" என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

தலைநகரமான லெஹ்ஹை தவிர லடாக்கிற்கு அருகாமையில் அல்ச்சிநூப்ரா பள்ளத்தாக்கு, ஹெமிஸ், லமயுரு, சன்ஸ்கர் பள்ளத்தாக்கு, கார்கில், பன்கொங்க் சோ, சோ கர் மற்றும் சோ மோரிரி போன்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

அழகிய ஏரிகளும் மடங்களும், மதி மயக்கும் இயற்கை காட்சிகளும் மலை உச்சிகளும் இந்த இடத்தின் சில முக்கிய ஈர்ப்புகள். லடாக்ஹி, புரிக், திபெடன், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தான் இங்கு பரவலாக பேசப்படும் மொழிகள்.

உலகின் மிக முக்கியமான இரண்டு மலைத்தொடர்களான கரகோரம் மற்றும் இமயமலையின் நடுவில், கடல் மட்டத்தின் மேல் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது லடாக். கூடுதலாக, இணைத்தொடர்களான  சன்ஸ்கர் மற்றும் லடாக், லடாக் பள்ளத்தாக்கை சுற்றி உள்ளது.

லடாக் என்பது ஆரம்ப காலத்தில் மூழ்கிய ஏரியின் ஒரு பகுதியாகவும், பின் சில புவிச்சரிதவியல் மாற்றங்களின் காரணமாக பள்ளத்தாக்காக மாறியது என்று நம்பப்படுகிறது.

இப்பொழுது உள்ள லடாக், ஜம்மு & காஷ்மீரை 10-ஆம் நூற்றாண்டில் திபெத்திய  வம்சாவழி அரசர்களால் ஆளப்பட்டு வந்தன. 17-ஆம் நூற்றாண்டில் ஆண்ட செங்கே நம்க்யல் அரசரால் இமயமலையின் அரசாட்சி பரந்து விரிந்து உச்சத்தில் இருந்தது.

பின்னர் 18-ஆம் நூற்றாண்டில் லடாக்கும் பல்டிஸ்டானும் ஜம்மு & காஷ்மீர் அரசாட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1947-ல் இந்தியாவின் பிரிவினைக்குப் பின் பல்டிஸ்டான் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது.

இந்த வட்டாரத்தில் புத்த மதமே ஆளுமை பெற்றிருப்பதால், லடாக்கின் சுற்றுலா தலங்களில் கொம்பாஸ் என்றழைக்கப்படும் மடங்கள் பிரதான முக்கியத்தவம் பெறுகிறது.

ஹெமிஸ் மடம், சங்கர் மடம், மாதோ, மடம், ஷேய் மடம், ஸ்பிடுக் மடம் மற்றும் ஸ்டன்க மடம் போன்றவைகள் தான் கவனிக்கத்தக்க உள்ள முக்கிய மடங்கள். இது போக திக்சே மடமும் செமோ மடமும் பார்க்கப்பட வேண்டிய மடங்களே.

கல்டன் நம்சொட், புத்த பூர்ணிமா, தோச்மோச்சே மற்றும் லோசர் திருவிழாக்களை லடாக் முழுவதும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நேரத்தில் பல சுற்றுலாப் பயணிகள் லடாக்கை மொய்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

தோச்மோச்சே திருவிழாவின் போது புத்த துறவிகள் நடனம் புரிந்து, இறை வணக்கம் செலுத்தி, கெட்டது மற்றும் தீய சக்திகளிடம் இருந்து இந்த வட்டாரத்தை காக்க சடங்குகள் புரிந்து, இரண்டு நாள் இதை கொண்டாடுவர். திபெத்தியன் துறவிகளின் முக்கிய திருவிழாவாக சகா டவா கொண்டாடப்படுகிறது.

இது கௌதம புத்தரின் பிறந்த நாளான புத்தாஹூட்டையும், உடல் இறப்பையும் சேர்த்து கொண்டாடப்படுவதற்கான திருவிழா. திபெத்தியன் ஆண்டுக்குறிப்பின் நான்காவது மாதத்தில், மே அல்லது ஜூன்-ல் கொண்டாடப்படுகிறது இத்திருவிழா. பொதுவாக அந்த மாதம் முழுவதும் நடக்கும் இந்த விழா.

இந்த வட்டாரத்தை சுற்றிப் பார்க்க கார் அல்லது பைக்கை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக பயணிகள் தங்களின் சொந்த வாகனத்தை பயன்படுத்துவதே வசதி என்றெண்ணி அவர்களுடைய வாகனத்திலேயே வருவர்.

மிகவும் கரடு முரடான நிலப்பகுதியை கொண்டிருப்பதால், பயணிகள் தங்கள் வண்டிகளுக்கான உதிரிப் பாகங்களை கையில் வைத்திருத்தல் அவசியமானது. இது அவசர காலக்கட்டத்தில் பயன்படும். துப்காஸ் அல்லது சூப் நூடில்ஸ் மற்றும் மொமோஸ் அல்லது மாவு உருண்டைகள் இந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து உணவகத்திலும் கிடைக்கும்.

லடாக்கிற்கு சுற்றுலா வருவதற்கு மே முதல் செப்டம்பர் வரை உள்ள காலத்தில் ஏதேனும் தேர்ந்தெடுக்கலாம். ரம்மியமான வானிலையை கொண்டிருக்கும் இந்நேரத்தில் தட்பவெப்ப நிலை 33 டிகிரி செல்சியசை தாண்டுவது கிடையாது.

லடாக் சிறப்பு

லடாக் வானிலை

சிறந்த காலநிலை லடாக்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது லடாக்

  • சாலை வழியாக
    லடாக்கிற்கு ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் இருந்து தரை வழியே வருவதற்கு வசதிகள் உள்ளன. ரொஹ்தங் பாஸ் வழியாக மணாலியிலிருந்து லடாக் செல்லும் பாதை ஜூலை முதல் செப்டம்பர் வரை திறந்து விடப்படும். சோஜி பாஸ் வழியாக ஸ்ரீநகரிலிருந்து லடாக் செல்லும் பாதை ஜூன் முதல் அக்டோபர் வரை திறந்திருக்கும். இந்த இரண்டு ரோடு தான் இந்த மூன்று நகரத்தையும் இணைக்கிறது. ஜம்மு & காஷ்மீர் போக்குவரத்து கழகமும் (JKSRTC) ஹிமாச்சல் போக்குவரத்து கழகமும் (HRTC) லடாக்கிற்கு தேவையான பேருந்து சேவைகளை அளிக்கின்றன. மேலும் பயணிகள் வாடகை கார் அல்லது ஜீப்களையும் பயன்படுத்தலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    லேவிற்கு அருகில் இருக்கும் ரயில் நிலையம் ஜம்மு தாவி உள்ளன. இது லடாக்கிலிருந்து 712 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஜம்மு ரயில் நிலையத்திலிருந்து நாட்டிலுள்ள முக்கிய நகரங்களான புது டெல்லி, மும்பை, பூனே, சென்னை போன்றவைகளுக்கு ரயில் சேவை உள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    லடாக் விமான நிலையத்திலிருந்து மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவை உள்ளது. இருப்பினும் ஜம்மு விமான தளம் தான் ஜம்மு & காஷ்மீரில் உள்ள முக்கிய விமான தளம். இங்கிருந்து இந்தியாவிலுள்ள பல முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, புனே, சென்னை போன்றவைகளுக்கு விமான சேவை உள்ளது. டெல்லியிலிருக்கும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூலம் லடாக்கிற்கு வெளிநாட்டுப் பயணிகள் வந்து சேரலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Mar,Tue
Check Out
20 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Mar,Tue
Return On
20 Mar,Wed