லடாக் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Srinagar, India 4 ℃ Heavy rain
காற்று: 14 from the NE ஈரப்பதம்: 74% அழுத்தம்: 1015 mb மேகமூட்டம்: 99%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Monday 11 Dec 2 ℃ 35 ℉ 7 ℃44 ℉
Tuesday 12 Dec -4 ℃ 25 ℉ 6 ℃43 ℉
Wednesday 13 Dec -5 ℃ 24 ℉ 4 ℃39 ℉
Thursday 14 Dec -5 ℃ 23 ℉ 5 ℃41 ℉
Friday 15 Dec -3 ℃ 26 ℉ 7 ℃44 ℉

லடாக் வர சிறந்த நேரம் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை. இது இங்கே கோடைக்காலமாகும். இந்த நேரத்தில் வானிலை மிகவும் ரம்மியமாக இருக்கும். வெப்ப நிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதிகப்பட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வரை செல்லலாம்.

கோடைகாலம்

(ஜூன் முதல் செப்டம்பர்): சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்தில் லடாக் வருவதற்கே அதிகம் விரும்புகின்றனர். இந்நேரத்தில் தெளிவான விண்ணையும் மிதுவான தட்பவெப்ப நிலையும் இருப்பதால் சுற்றுலா வர உகுந்த நேரமாகும். இந்த காலத்தில் வெப்ப நிலையானது 20 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

மழைக்காலம்

மழைக்காலத்தின் போது லடாக்கில் சராசரியாக 90 மி.மீ. அளவு மழை பெய்யும். இருப்பினும் நிலச் சரிவுகள் நடக்க வாய்ப்பிருப்பதால்  ரோடுகள் மூடப்பட்டுவிடும்.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் மே): லடாக்கில் குளிர் காலம் மிகவும் கடுமையாக இருக்கும். இந்தக் காலத்தில் வெப்பநிலை -28 டிகிரி செல்சியஸ் வரை குறையும். இக்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் பனிப் புண்களை பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. சில நேரங்களில் பனி மழையும் பெய்யும். எனவே இக்காலத்தில் லடாக் வருவதை தவிர்க்க வேண்டும்.