ஹெமிஸ் - கிறங்கடிக்கும் ஸ்தலங்களுக்காக திறக்கப்பட்ட வாசல்!

ஜம்மு காஷ்மீரின் மிகவும் பிரபலமான சுற்றுலா மையம் ஹெமிஸ். இது ‘லே’ வில் இருந்து 40 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. இயற்கையின் மடியில் சில நேரம் செலவிட விரும்புவர்களுக்கு இது ஒரு உகந்த இடம், மேலும் இங்கு அமைந்துள்ள “ஹெமிஸ் மடாலயம்” அல்லது “கோம்பா” சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் நன்றாக அறியப்பட்ட ஒன்றாக உள்ளது. இந்த மடமானது 1630 ஆண்டு, முதல் அவதாரமான ஸ்டாகசாங்க் ரஸ்பா நவாங்க் கயாட்ஸொ என்பரால் கட்டப்பட்டது. இது மறுபடியும் செஞ்ச் நம்பார் கயால்வா என்பரால் மகாயோகா தந்த்ரா பள்ளியின் சமய போதனைகளுக்காக 1672 ம் ஆண்டு புணரமைக்கப்பட்டது.

ஹெமிஸ் மடாலயத்தின் பெரிய ஈர்ப்பு அங்கு அமைந்துள்ள தாமிரத்தினால் செய்யப்பட்ட புத்தர் சிலையாகும். “கால சக்ரா” அல்லது “நேரசுழற்சி” மற்றும் “நான்கு கால்பகுதிகளின் கடவுள்களை குறிக்கும் அழகிய ஒவியங்கள் மடாலயத்தின் சுவர்களில் காணப்படுகின்றன.

ஹெமிஸின் வருடாந்திர திருவிழாவானது ஜூன்/ஜூலை மாதங்களில் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் பங்குபெறும் இந்த திருவிழாவில் திபெத்திய புத்த மத வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த “சிங்கம் போல் கர்ச்சிக்கும் குரு” என்று அழைக்கப்படும் குரு பத்ம சாம்பவாவிற்கு மரியாதை செய்யபடுகிறது.

சிந்து நதி கரைகளில் அமைந்துள்ள “ஹெமிஸ் தேசிய பூங்கா” இவ்விடத்தின் மற்றொரு பிரபலமான கண்கவர் இடம். மேலும் இது “ஹெமிஸ் அதி உயர தேசிய பூங்கா” எனவும் அழைக்கப்படுகிறது.

இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பாதுக்காக்கப்பட்ட வன தொடர் ஆகும். 4400 சதுர கி.மீ. மொத்த பரப்பளவு கொண்ட ஹெமிஸ் தேசிய பூங்கா தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தேசிய பூங்காவாக உள்ளது. பனி சிறுத்தை, மான், குட்டை வால் குரங்கு, சிவப்பு நரிகள், ஓநாய்கள், லேமர்கீர் கழுகு, மற்றும் தங்க கழுகு போன்ற உயிரினங்களை இந்த பூங்காவில் காணலாம்.

ஹெமிஸ் பகுதியை சுற்றிப்பார்க்க ஆர்வமாக உள்ள சுற்றுலா பயணிகள், விமானம், ரயில்வே மற்றும் சாலை வழியாக இங்கு வர முடியும். ஏப்ரல் முதல் ஜூன் இடையே உள்ள கோடை காலம் ஹெமிஸை சுற்றிப்பார்க்க சிறந்த பருவம், குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை -30 ° செல்ஸியஸுக்கும் மிகவும் குறைவாகவும், உறைந்தும் காணப்படுகிறது.

Please Wait while comments are loading...