Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹெமிஸ் » ஈர்க்கும் இடங்கள் » ஹெமிஸ் தேசிய பூங்கா

ஹெமிஸ் தேசிய பூங்கா, ஹெமிஸ்

12

ஹெமிஸ் தேசிய பூங்கா இவ்விடத்தின் அல்லது ஹெமிஸ் அதி உயர தேசிய பூங்கா  கடல் மட்டத்திலிருந்து 3300 முதல் 6000 மீ உயரத்தில் சிந்து நதியின் கரையில் அமைந்துள்ளது. இது புகழ்பெற்ற புத்த மடாலயமான, ஹெமிஸ் மடாலயத்தின் பேரால் பெயரிடப்பட்டது.

1981 ம் ஆண்டு, இந்த இடம் 600 சதுர கி. மீ கொண்ட பரப்பளவில் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 1988ம் ஆண்டு இந்த பகுதி சுமார் 3350 சதுர கி.மீ அதிகரிக்கப்பட்டு பின்னர் மீண்டும் 1990 ம் ஆண்டு 4400 கி.மீ ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்த சேர்க்கைக்கு பின்னர் ஹெமிஸ் தேசிய பூங்கா தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தேசிய பூங்கா என அறிவிக்கப்பட்டது. மேலும்  நாட்டின் நந்தா தேவி  உயிரின காப்பகத்திற்கு  அடுத்தபடியாக  இரண்டாவது மிகப்பெரிய தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட பகுதியாக ஹெமிஸ் தேசிய பூங்கா அறியப்படுகிறது.

அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் தேசிய பூங்காவில் வசிக்கின்றன. மர்மட்டுகள், சிங்க வால் குரங்குகள், சிவப்பு நரிகள், மான், ஓநாய்கள், பனி சிறுத்தை போன்ற அரிய வகை விலங்குகள் மற்றும் குட்டை வால் குரங்குகள்,  உரியல்கள்  மற்றும் மற்ற உயிரினங்கள் இந்த பூங்காவில் வசித்து வருகின்றன.

இப்பகுதியில் மழை குறைவு என்பதால் இங்குள்ள தாவர வகைகள்,  உலர் காடுகளான ஆல்பைன், பிர்ச் – எப் மற்றும் பாப்புலஸ்-ஸாலிக்ஸ் முதலியவை. தகவல்களின் படி ஹெமிஸ் தேசிய பூங்காவில் எழுபதிற்கு அதிகமான பறவை இனங்கள் மற்றும் 16 வகையான பாலூட்டி இனங்களும் காணப்படுகின்றன.

லேமர்கீர் கழுகு, தங்க கழுகு, மற்றும் இமாலய க்ரிஃபென் கழுகு போன்றவை இந்த தேசிய பூங்காவில் காணப்படும் பறவை இனங்கள் . சுற்றுலா பயணிகள் ஆண்டின் எந்த நேரத்திலும் ஹெமிஸ் தேசிய பூங்காவை பார்க்க முடியும் ஆனால் மே முதல் அக்டோபர் வரையிலான காலம் மிகவும் ஏற்றது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri