Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹெமிஸ் » வானிலை

ஹெமிஸ் வானிலை

ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள கோடை கால மாதங்கள் சுற்றுலா செல்வதற்கு சிறந்த நேரம். வெளிப்புற நடவடிக்கைகளுக்கு இந்த கால நிலை சாதகமாக அமைகிறது. குளிர் காலத்தில் இங்கு சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகள் அதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் வெப்ப நிலையானது – 30 டிகிரி செல்ஸியஸிற்கு குறைவாக காணப்படும்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை): ஹெமிஸ் கோடை  காலம் ஏப்ரலில் இருந்து தொடங்கி ஜூன் மாதம் வரை தொடர்கிறது. கோடை காலத்தில் ஹெமிஸின் சராசரி வெப்பநிலை 15 ° செல்ஸியஸாக பதிவாகிறது. எனினும் அதிகப்பட்ச வெப்பநிலை 20 ° C  அடையலாம்,  எனினும், இது அரிதாக நடக்கும். 

மழைக்காலம்

ஹெமிஸ்  அரிதாக மழை பெறும் நகரமாக இருப்பதால், மழை குறைவாகவே பொழிகிறது. இதன் காரணமாக ஹெமிஸ் பகுதியில் காடுகள் உலர் காடுகளாக காணப்படுகின்றன.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை):  குளிர்காலம் அக்டோபரில் துவங்குகிறது மற்றும் பிப்ரவரி வரை நீடிக்கும். குளிர்காலத்தில் ஹெமிஸின்  குறைந்தபட்ச வெப்பநிலை  -30 ° செல்ஸியஸிற்கும் குறைவாக இருக்கும். இந்த இடத்தை சுற்றிப்பார்க்க விரும்பும் பயணிகள் இந்த பருவத்தை தவிர்ப்பது நல்லது. டிசம்பர் மாதத்தில் இருந்து கடும் பனிப்பொழிவும் இங்கு ஆரம்பிக்கிறது.