லே - சிந்து நதிக்கரையில் இமயமலையின் அரவணைப்பு!

லேவில் உள்ள ஒரு பண்டைய,  ஒன்பது அடுக்கு அரண்மனை,  அனைவரின் கவனத்தையும் கவர்கின்றது. இந்த அரண்மனை,  நம்ஜியால் வம்சத்தை சேர்ந்த `செங்ஜி நம்ஜியால்' என்ற அரசரால் கட்டப்பட்டது. இது,  இடைக்கால கட்டடக்கலையின் சிறப்பான  பாணியை சித்தரிக்கிறது.  

லேவில், புத்த துறவிகள், இந்துக்கள், மற்றும் லாமாக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இங்கே சாந்தி ஸ்துபம், மற்றும் ஷங்கர் மடாலயம் போன்ற  ஆய்வு மையங்கள் உள்ளன.

இவை லேவின் அழகிற்கு மேலும் அழகு சேர்கின்றன. கடந்த சில ஆண்டுகளில்,  லே நகரம், மத்திய ஆசியாவின்  ஒரு சிறந்த  வர்த்தக மையமாக வளர்ந்துள்ளது. இது சுய வர்த்தக வாய்ப்புகளை பல்வேறு வணிக மக்களுக்கு வழங்குகிறது.

ஷாப்பிங் செய்வதில் ஆர்வம் உள்ள சுற்றுலா பயணிகள்,  திபெத்திய கலை படைப்புகளான நகை,  குளிர்கால கம்பளி ஆடைகள், மற்றும் கை அல்லது இயந்திரம் மூலம்  நெய்த,  தரை விரிப்புகளை வாங்கலாம். 

பனியால் மூடப்பட்ட  இமாலய சிகரங்கள் இவ்விடத்தின்  அழகை அதிகரிக்கின்றன. சாகசம் விரும்பும் பயணிகள்,  லேவின் பல பகுதிகளுக்கு ட்ரெக்கிங் செல்லலாம். இமாலயத்தின் கரடுமுரடான நிலப்பகுதிக்கு ட்ரெக்கிங் செல்வதன் மூலம்,  இவ்விடத்தின் இயற்கை அழகை ஆழ்ந்து அனுபவிக்க முடியும்.

பழங்காலத்தில் கட்டப்பட்ட, மொகலாயர் காலத்தை சேர்ந்த, வரலாற்று சிறப்பு மிக்க, `ஜமா மஸ்ஜித்' மற்றும் `ஷெ அரண்மனை' ஆகியன லேவின் முக்கியமான சுற்றுலா தலங்களாகும்.  இதில் ஷெ அரண்மனை லடாக் அரசர்களின் கோடை கால அரண்மனை, என்று அழைக்கப்படுகின்றது. இங்கே மிகப் பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்று உள்ளது.

லேவின் கோடை காலம்,  மார்ச் முதல்  ஜூன் வரை உள்ள நான்கு மாதங்களாக்கும். கோடை காலமே,  லேவை பார்வையிட மிகவும் பொருத்தமானது.  இந்த பருவத்தில், லேவின் அதிகபட்ச வெப்பநிலை 30° C வரையிலும், சராசரி வெப்பநிலை 20° C ஆகவும் உள்ளது. கோடை காலமே லேவின் இனிமையான பருவமாகும்.  

லேவின் குளிர்காலம் மிகவும் கடுமையானது.  இந்த நேரத்தில், இவ்விடத்தின்  வெப்பநிலை -28° C வரை குறையக்கூடும். அக்டோபர், மற்றும் நவம்பர் மாதங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதுண்டு.

மிகவும் குளிர்ந்த வெப்பநிலை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களுக்கு பனி கடி நோய் ஏற்படுகின்றது. சரியான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவதன் மூலம் பனிக்கடியை தவிர்க்கலாம்.

லே நகரம், பருவமழை காலங்களில் சராசரியாக 90 மிமீ  மழைபொழிவை பெறுகிறது.  மார்ச் முதல்  செப்டம்பர் வரை உள்ள ஏழு மாதங்களில், இவ்விடத்தின் வெப்பநிலை மிதமாக உள்ளதால், லேவை பார்வையிட இதுவே சிறந்த தருணமாகும்.

லேவில் சீரற்ற காலநிலை  நிழவுவதால், சுற்றுலா பயணிகள், கம்பளி ஆடைகள், தடித்த சாக்ஸ், கையுறைகள்,  தொப்பிகள் அல்லது கம்பளி தொப்பி, தடிமனான பூட்ஸ் அல்லது நடைபயிற்சி காலணிகள், சன்ஸ்கிரீன், லிப் தைலம், மற்றும் கண்ணாடி ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். இது சுற்றுலா பயணிகளை சீரற்ற காலநிலையிலிருந்து பாதுகாக்கும்.

லே சென்று வர தினசரி விமானங்கள் தில்லி, ஜம்மு மற்றும் ஸ்ரீநகரிலிருந்து இயக்கப்படுகின்றன.  தில்லி விமான நிலையம் இந்தியா மற்றும்  வெளிநாட்டு விமான நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

விமான நிலையத்தில் இருந்து லேவை, வாடகை கார்கள் மூலம் அடையலாம். இதற்கு,  1000 ருபாய் வரை செலவாகும். ரயில் மூலம் பயணம் செய்ய விரும்பும் சுற்றுலா பயணிகள், லேவிற்கு அருகில் உள்ள ஜம்மு ரயில் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இது லேவிலிருந்து 734 கி.மீ. தொலைவில் உள்ளது.

இது தவிர, சாலை வழியாக லேவை அடைய விரும்பும் சுற்றுலா பயணிகள்,  ஜம்மு & காஷ்மீர் மாநில சாலை போக்குவரத்து கழகம் மூலம் வழங்கப்படும் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். 

JKSRTC,  ஸ்ரீநகரிலிருந்து 734 கிமீ தொலைவில் உள்ள லேவிற்கு,  தினசரி பேருந்து சேவைகளை வழங்குகிறது. சாலை வழியாக லேவை அடைய மற்றொரு சுலபமான வழி உள்ளது.

லேவிலிருந்து 474 கிமீ தொலைவில் உள்ள மணாலியின் வழியாக,  ஹிமாச்சல மாநில சாலை போக்குவரத்து கழக பேருந்து வசதியை பயன்படுத்தி,  லேவை அடையலாம்.

Please Wait while comments are loading...