Search
  • Follow NativePlanet
Share

சங்கூ - ஏகாந்தத்தின் தனித்துவ அழகு!

8

சங்கூ என்ற நகரம் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கிலில் இருந்து 42 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இயற்கை அழகு நிரம்பிய இவ்விடம், சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்க்கும் வகையில் இருக்கும். இவ்விடம் ஒரு கிண்ணத்தை போன்ற வடிவில் உள்ள பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. சுரு ஆற்றின் முக்கிய மூலமான நக்போச்சு மற்றும் கர்த்சே ஆறுகள் இந்த பள்ளத்தாக்கில் பாய்ந்தோடுகின்றன.

இந்த இடம் கார்போ-கர் என்ற கோவிலுக்காக மிகவும் பிரபலம். இந்த கோவில் முஸ்லிம் புலவர் மற்றும் துறவியான சய்யது மிர் ஹசிம் என்பவருக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

இவர் தான் புத்த மத அரசர் தி-நம்க்யல் என்பவருக்கு இஸ்லாமியத்தை பற்றி போதனை நடத்தினார். 16-ஆம் நூற்றாண்டில் தி-நம்க்யல் ஒரு முஸ்லிமாக மாறியதன் விளைவால் ஏற்பட்டதே இந்த போதனை. சுற்றுலாப் பயணிகள் இந்த கோவிலுக்கு சென்று தங்கள் பிரார்த்தனைகளை மேற்கொள்வர்.

சங்கூ செல்லும் வழியில், அதன் மிக அருகாமையில் உள்ள காடுகளுக்கும் சென்று வரலாம். இந்த காடுகளில் பல வகையான மரங்களை, முக்கியமாக டியோடர் மற்றும் வில்லோ மரங்களை காண நேரிடலாம். இவ்விடம் வார இறுதி நாட்களில் சுற்றுலாச் செல்ல உகுந்த இடம்.

சுற்றுலாப் பயணிகள் சங்கூவை சென்று வர அனைத்து முக்கிய வகை போக்குவரத்துகளையும் பயன்படுத்தலாம். லே விமான நிலையமும் ஸ்ரீநகர் விமான நிலையமும் தான் இந்த இடத்துக்கு மிக அருகில் இருக்கும் விமான நிலையங்கள்.

இந்த இரு விமான நிலையங்களும் அவுரங்கபாத், ஜம்மு, டெல்லி, பெங்களூர் மற்றும் பூனே நகரங்களுடன் விமான சேவையில் ஈடுபட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து சங்கூவை அடைய பேருந்துகள் அல்லது வாடகை கார்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரயில் மார்க்கமாக சங்கூ வருபவர்கள், அதற்கு மிக அருகில் உள்ள ஜம்மு தவி ரயில் நிலையத்தில் இறங்கி கொள்ள வேண்டும். இந்த ரயில் நிலையத்திலிருந்து நியூடெல்லி, பெங்களூர், திருவந்தபுரம் மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவைகள் இயங்குகின்றன.லே, கார்க்கில் மற்றும் சுரு பள்ளத்தாக்கின் பிற பகுதிகளிலிருந்து சங்கூ வந்தடைய சீரான பேருந்து சேவைகளும் உள்ளன.

சங்கு வட்டாரம் வருடம் முழுவதும் உச்ச அளவு வானிலையை கொண்டதாக இருக்கும். கோடைகளில் வெதுவெதுப்பான வெப்ப நிலையும் குளிர் காலத்தில் உறைந்து போகும் அளவிற்கு உச்ச அளவு குளிர் இருக்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான வானிலை சற்று மிதுவானதாக இருப்பதால், சங்கூவை சுற்றிப் பார்க்க இதுவே சரியான தருணம்.

சங்கூ சிறப்பு

சங்கூ வானிலை

சிறந்த காலநிலை சங்கூ

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சங்கூ

  • சாலை வழியாக
    சங்கூவை கார்க்கில், லே மற்றும் சுரு பள்ளத்தாக்கின் சில இடங்களில் இருந்து பேருந்துகளில் வந்தடையலாம். ஸ்ரீநகரிலிருந்து லே மற்றும் கார்கிலுக்கு சிறப்பு டீலக்ஸ் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புபவர்கள் குறைந்த கட்டணத்தை செலுத்தி பயணிக்கலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சங்கூவிற்கு மிக அருகில் இருக்கும் ரயில் நிலையம் ஜம்மு தவி ரயில் நிலையமாகும். இங்கிருந்து இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களான பெங்களூர், டெல்லி, திருவனந்தபுரம் மற்றும் சென்னைக்கு ரயில்கள் இயங்குகின்றன. ஜம்மு ரயில் நிலையத்திலிருந்து சங்கூவிற்கு செல்ல பேருந்துகளும் வாடகை கார்களும் கிடைக்கும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சங்கூவிற்கு மிக அருகாமையில் இருப்பது லே விமான நிலையம். இங்கிருந்து இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களான டெல்லி, ஔரங்கபாத், ஜம்மு, பெங்களூர் மற்றும் பூனேவிற்கு சென்று வர வசதிகள் உள்ளன. விமான நிலையத்திலிருந்து சங்கூவிற்கு செல்ல பேருந்துகளும் வாடகை கார்களும் கிடைக்கும். ஸ்ரீநகர் விமான நிலையமும் கூட சங்கூவிற்கு அருகில் இருக்கும் விமான நிலையம் தான். இங்கிருந்தும் சங்கூவிற்கு செல்ல நேரடி பேருந்து வசதிகள் உள்ளன. சங்கூவிற்கு மிக அருகாமையில் இருக்கும் சர்வதேச விமான நிலையம் டெல்லியில் இருக்கிறது. இங்கிருந்து உலகத்தில் உள்ள முக்கியாமான விமான நிலையங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat