லே அரண்மனை, லே

லே அரண்மனை 17-ஆம் நூற்றாண்டில் செங்கே நம்க்யால் ராஜாவால் கட்டப்பட்டது. இந்த அரண்மனையின் நீள்மாடக்கூடம், திபெத்திலுள்ள லாசா என்ற இடத்தில் உள்ள போடலா அரண்மனை போலவே இருக்கும்.

டோக்ராவின் அரசப்படைகள் 19-ஆம் நூற்றாண்டில் லடாக்கை கைப்பற்றியபோது, இந்த அரண்மனையில் இருந்த அரச குடும்பம் ஸ்டாக் அரண்மனைக்கு குடிபெயர்ந்தது. இந்த அரண்மனை ஒன்பது அடுக்குகளைக் கொண்டது. இதன் மேல் அடுக்கில் அரச குடும்பத்தினர் குடியிருந்தனர். கீழ் தளத்தில் காப்பக அறைகளும் தொழுவங்களும் உள்ளன.

அழிந்து கொண்டிருக்கும் இந்த அரண்மனையை பாதுகாக்க இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி மையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதன் அழகையும், இண்டஸ் பள்ளத்தாக்கு மத்தியில் உள்ள ஸ்டாக் கங்ரி மற்றும் லடாக் மலைத்தொடர்களின்  அழகையும் ரசிக்கலாம்.

Please Wait while comments are loading...