சாந்தி ஸ்தூபம், லே

சாந்தி ஸ்தூபம் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திலுள்ள லே மாநகராட்சியில், சாங்ஸ்பாவிலுள்ள விவசாய புறநகரில்  அமைந்துள்ளது. இது "பீஸ் செச்ட்" என்ற ஜப்பானிய புத்த மடத்தை சேந்தவர்களால் கட்டப்பட்டது.

ஸ்தூபம் என்றால் தூண் என்று பொருள். தங்க முலாம் பூசிய பலகைக்கு பெயர் போன்ற இந்த தூண், புத்த கதைகளை குறிக்கும். இது 1983-ஆம் வருடம் தலாய் லாமாவின்  ஆணையின் படி கட்டப்பட்டதாகும்.

இது புத்தரின் கொள்கைகளை பரப்பும் விதமாக நிறுவப்பட்டது. லேவிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஸ்தூபம். லே அரண்மனையை பார்த்தவண்ணம் இந்த தூண் அமைந்திருப்பதால் இந்த தூணுக்கு கோட்டை ரோடு வழியாக நடந்தே செல்லலாம்.

இந்த ஸ்தூபம் 1991-ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இதை திறந்து வைத்தது டென்சின் க்யாட்சோ  என்ற 14-ஆம் தலாய் லாமா. சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு வாடகை ஜீப் அல்லது கார்களில் செல்லலாம். தீரச்செயல் புரிய விரும்புபவர்கள் இந்த இடத்திற்கு நடை பயணம் மூலமாகவே செல்லலாம்.

Please Wait while comments are loading...