தலாய் - மலைகளுக்கும் காடுகளுக்கும் இடையே ஒளிந்திருக்கும் அற்புதம்!

தலாய், திரிபுரா மாநிலத்தில் மிகச்சமீபத்தில் உருவாக்கப்பட்ட மாவட்டமாகும். தன் தலைமையகத்தை அம்பாஸாவில் கொண்டுள்ள தலாய், பங்களாதேஷ் நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்தபடி அமைந்துள்ளது. 1995ல் உருவாக்கப்பட்ட இந்த ஊர் பஞ்சாயத் ராஜ் அமைச்சகத்தால் இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட மாவட்டகங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத் தலைநகர் அகர்டலாவில் இருந்து 90 கிமீ தொலைவில் உள்ள இவ்வூரில் இருந்து தரைவழியாக தலைநகரை அடைய 3மணி நேரம் ஆகிறது.

இயற்கை அழகு!

பெரும்பாலும் மலைகளாலும், காடுகளாலும் சூழப்பட்டுள்ள தலாயின் அடர்ந்த காடுகளை ரசிக்க வருடந்தோறும் திரிபுராவிற்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள்.

தலாயில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த தொழிற்வளர்ச்சியும் இல்லையென்றாலும் அண்ணாச்சிப் பழ சாறு எடுக்கும் தொழிற்சாலை வடகிழக்கு வேளாண்மை விற்பனை கழகத்தால் நிறுவப்பட்டிருக்கிறது (NERAMAC).

இங்கிருக்கும் கிராமவாசிகள் கைவினைப்பொருட்கள் செய்வதிலும், ஊதுபத்திகள் தயாரிப்பதிலும் சிறந்து விளங்குகிறார்கள்.   

தலாய் நகரத்திற்கு அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்!

தலாய் நகரம் சுற்றுலாப்பயணிகளை மற்றுமல்லாது யாத்ரீகர்களை ஈர்க்கும் இடமாக உள்ளது. லொங்தரை மந்திர், கமலேஷ்வரி மந்திர், ராஸ் ஃபேர் ஆகிய இடங்கள் குறிப்பிடத்தக்க சுற்றுலாதளங்களாகும். தலாய் நகரம் திரிபுரா சுற்றுலாவில் மிகமுக்கியமான பங்கை வகிக்கிறது.

Please Wait while comments are loading...