Search
  • Follow NativePlanet
Share

கைலாஸ்ஹஹர்  - பண்டைய திரிபுரா இராச்சியம்! 

8

கைலாஸ்ஹஹர், திரிபுரா மாநிலத்தில் உள்ள வட திரிபுரா மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். இது திரிபுரா மாநிலத்தின்  தென்முனையில் அமைந்துள்ளது, மேலும் இது பங்ளாதேஷுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. கைலாஸ்ஹஹர் ஒரு வரலாற்று நகரம் ஆகும்.  இங்கு கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து உள்ள தலைமுறைகள் வசிப்பதாக நம்பப்படுகிறது. 

உனகோட்டியுடன் (நூற்றாண்டுகள் பழமை மிக்க கல் சித்திரங்களுக்கு பெயர் பெற்றது) நெருங்கிய தொடர்பில் உள்ள கைலாஸ்ஹஹர், பண்டைய காலத்தில் திரிபுரா இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது.

கைலாஸ்ஹஹரின் வரலாறு!

கற் சித்திரங்களுக்காக அறியப்படும் உனகோட்டி, பண்டைய காலந்தொட்டே கைலாஸ்ஹஹருடன் தொடர்பில் உள்ளது. உள்ளூர் நாட்டுப்புற கதைகளின் படி ஜுஜ்ஹர் அரசர் (திரிபுரப்டா அல்லது திரிபுரா காலண்டரை உருவாக்கியவர்) சிவனின் சந்ததி ஆவார்.

அவர் சிவனை நோக்கி ச்ஹ்ஹம்புல்நகரில் உள்ள மௌ நதிக்கரையில் தவமிருந்ததாக நம்பப்படுகிறது. அந்த  ச்ஹ்ஹம்புல்நகரே கைலாஸ்ஹஹரின்  உண்மையான பெயர் என நம்பப்படுகிறது.

வேறு சில மக்கள்  கைலாஸ்ஹஹர் என்கிற பெயர்  'ஹர்' (சிவபெருமானின் மற்றொரு பெயர்) மற்றும் கைலாஷ பர்வதம்  (சிவனின் இருப்பிடம்) என்கிற இரண்டு வார்த்தைகள் இணைந்து  'கைலாஷ்-ஹர்' என ஆயிற்று என்று தெரிவிக்கின்றனர்.

இந்த 'கைலாஷ்-ஹர்' பின்னர் மருவி கைலாஸ்ஹஹர் என வழங்கலாயிற்று. திரிபுராவின் அரசர் ஆதி தர்மப்ஹ 7ஆம் நூற்றாண்டில் இங்கே ஒரு மிகப் பெரிய வேள்வி நடத்திய பின்னர் கைலாஸ்ஹஹர்  என்கிற பெயர் மிகப் பிரபலமாயிற்று.  

கைலாஸ்ஹஹர் மக்கள்

உண்மையில் கைலாஸ்ஹஹர் என்பது ஒரு சிறிய நகரம் ஆகும். மேலும் இது நகர் பேரூராட்சி. ஆனால் இதன் புவியியல் வரம்புகள், வேறுபட்ட மக்களை இதனுடன் பிணைத்துள்ளது.

நீண்ட காலமாக இங்கு  பெங்காலிகள் வாழ்ந்து வருவதுடன்  கைலாஸ்ஹஹரின் சமூக கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கைலாஸ்ஹஹரில் பெங்காலிகளைத் தவிர்த்து கணிசமான அளவிற்கு மலை வாழ் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.

சமயச் சிறப்பும், திருவிழாக்களும்!

மதம், திருவிழா, மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் கைலாஸ்ஹஹர் வாழ்க்கையின் ஒரு பகுதி மற்றும் அங்கமாக மாறி விட்டது. அநேகமாக ஆண்டின் ஒவ்வொரு மாதமும் கைலாஸ்ஹஹர் சில திருவிழா அல்லது கலாச்சார செயல்பாடுகளுக்காக தன்னை அலங்கரித்து கொள்கிறது. 

கைலாஸ்ஹஹரில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள் மற்றும் புத்த மதத்தினர் நல்லுறவுடன் ஒரு உண்மையான மதச்சார்பற்ற வாழ்க்கையை வாழ்வதால், பன்முக கலாச்சாரம் இந்த நகரத்தின் ஒவ்வொரு மூலை மற்றும் முடுக்குகளிலும் காணப்படுகிறது.

துர்கா பூஜா மற்றும் காளி பூஜா போன்றவை கைலாஸ்ஹஹரின் மிகவும் புகழ்பெற்ற திருவிழாக்கள் ஆகும். எனினும், இங்கு நிறைந்திருக்கும் பிற மதத்தை சேர்ந்தவர்களின் தயவால் கிறிஸ்துமஸ், புத்த பூர்ணிமா மற்றும் பிற விழாக்கள் கூட இங்கு மிக பிரபலமாக உள்ளன.

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்

கைலாஸ்ஹஹர் ஒரு அழகிய நகரம் ஆகும். இந்த அழகிய நகரத்தில் உள்ள கோயில்கள் பச்சைப்பசேலான தேயிலை தோட்டங்களுடன் சேர்த்து கண்ணுக்கினிய காட்சியை வழங்குகின்றன.

கைலாஸ்ஹஹருக்கான சுற்றுலா இங்குள்ள லக்ஹி நாராயண் பாரி, 14 தெய்வங்கள் கோவில் அல்லது ச்ஹொஉடோ டெவொதார் மந்திர் மற்றும்  அருகிலுள்ள 16 தேயிலை தோட்டங்கள் ஆகியவற்றை காணாமல் முழுமை அடையாது.  

லக்ஹி நாராயண் பாரி : லக்ஹி நாராயண் பாரி என்பது சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட இந்தியாவில் உள்ள பழமையான மற்றும் தனித்தன்மை வாய்ந்த கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

கிருஷ்ணருக்காக கட்டப்பட்ட இந்தக் கோவில் உள்ள கிருஷ்ண விக்ரஹம் கிருஷ்ணானந்த ஸேவயெத் மூலம் நிறுவப்பட்டது.

 ச்ஹொஉடோ டெவொதார் மந்திர்: 14 தெய்வங்களின் கோவில் அல்லது ச்ஹொஉடோ டெவொதார் மந்திரில் இறைவன் மற்றும் இறைவியின் 14 சிலைகள் உள்ளன.

அகர்தலாவில்  இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த ச்ஹொஉடோ டெவொதார் மந்திரில் ஜூலை மாதம் கொண்டாடப்படும் க்ஹர்ச்ஹி பூஜைக்கு பெருந்திரளான மக்கள் வருகை புரிகின்றனர்.

தேயிலைத் தோட்டங்கள்: கைலாஸ்ஹஹரின் ஆன்மீகத் தலங்களில் இருந்து சிறிது ஓய்வு கொடுப்பது இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பசுமையான தேயிலைத் தோட்டங்கள் தான்.

இந்த தேயிலைத் தோட்டங்கள் பெரும்பாலும் தனியார் வசம் உள்ளன. அவ்வாறு இருந்தாலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலையின் சுவை அளவிட முடியாதது. இங்கு வளர்க்கப்படும் தேயிலைகள் இயற்கை முறையில் வளர்க்கப்படுகின்றன.

கைலாஸ்ஹஹரின் சுற்றுலா இங்கிருந்து சில நினைவுப் பொருட்களை வாங்கிச் செல்லாமல் முழுமை பெறாது. பெரும்பாலான வட கிழக்கு மாநிலங்களைப் போல் சுற்றுலா பயணிகள் கைலாஸ்ஹஹரில் இருந்து பொக்கிஷமாக கருதப்படும் பழங்குடியின தொல்பொருள்களை வாங்கிச் செல்லலாம்.

திரிபுரா மாநிலத்தின் வளர்ந்து  வரும் புகழைப் பார்க்கையில் கைலாஸ்ஹஹரை ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாக மாற்றும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன.

இன்று  கைலாஸ்ஹஹர் கணிசமான எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. சுற்றுலா பயணிகளில் பலர் கிருஷ்ண பகவானின் ஆசீர்வாதம் மற்றும் 14 தெய்வங்களின் வாழ்த்துக்களை பெற வந்தவர்கள் ஆவார்கள்.  

கைலாஸ்ஹஹர் சிறப்பு

கைலாஸ்ஹஹர் வானிலை

சிறந்த காலநிலை கைலாஸ்ஹஹர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கைலாஸ்ஹஹர்

  • சாலை வழியாக
    தேசிய நெடுஞ்சாலை 44 நாட்டின் பிற பகுதிகளுடன் கைலாஸ்ஹஹரை இணைக்கிறது. இந்த நகரத்தின் உயிர்நாடியான நெடுஞ்சாலை, இந்த நகரத்தை நேரிடையாக அகர்தலாவுடன் இணைக்கிறது. பல்வேறு வகையான போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி கைலாஸ்ஹஹரை அடைய முடியும். மாநில போக்குவரத்து பேருந்துகள் மற்றும் தனியார் டாக்சிகள் போன்றவை சில பொதுவான போக்குவரத்து வழிகள் ஆகும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ரயில்கள் மூலம் மிகச் சரியாக கைலாஸ்ஹஹரை அடைய முடியாவிட்டாலும் கைலாஸ்ஹஹரில் இருந்து குமார்காட் ரயில் நிலையம் மிகத் தொலைவில் இல்லை. கைலாஸ்ஹஹரில் இருந்து சுமார் 27 கீ.மீ. தொலைவில் உள்ள குமார்காட்டை சாலை மூலம் அடைய 50 நிமிடங்களே பிடிக்கும். குமர்காட் வழியாகச் செல்லும் ஒரு சில ரயில்கள் மாற்றுவழியாக குமர்காட்டை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கிறது. அவைகள் சாத்தியமான விருப்பங்கள் ஆகும்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கைலாஸ்ஹஹருக்கு அருகிலுள்ள விமான நிலையம் திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவில் உள்ள ஸிஙெர்பிஹில் விமான நிலையம் ஆகும். விமான நிலையத்தில் இருந்து கைலாஸ்ஹஹரை அடைய நேரடி பேருந்துகள் மற்றும் மற்றும் டாக்சிக்கள் கிடைக்கின்றன. அகர்தலா விமான நிலையம் நாட்டின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சுலபமாக கவுகாத்தி, இம்பால், சில்சார், கொல்கத்தா, தில்லி போன்ற நகரங்களை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
25 Apr,Thu
Check Out
26 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
25 Apr,Thu
Return On
26 Apr,Fri

Near by City