Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கைலாஸ்ஹஹர் » வானிலை

கைலாஸ்ஹஹர் வானிலை

கைலாஸ்ஹஹரை சுற்றிப் பார்க்க குளிர் காலமே மிகவும் சிறந்தது. குளிர்காலத்தில் வெப்பநிலை குறைந்து மிகவும் லேசாக இருக்கும். ஆகவே  கைலாஸ்ஹஹருடன் இணைந்த பல்வேறு பகுதிகளைப் பார்க்க இதுவே சிறந்த நேரம். மற்றொரு சிறந்த நேரம் மழை குறையும் நேரம் ஆகும். அந்தப் பருவத்தில் மழை குறைந்து எங்கும் பசுமை நிறைந்து காணப்படும்.

கோடைகாலம்

கைலாஸ்ஹஹரின் கோடைகாலம் வெப்பம் மிகுந்து சூடாக காணப்படும். மேலும் இங்கு நிழவும் ஈரப்பதம் சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இங்கு மார்ச் மாதத்தில் தொடங்கும்  கோடை காலம் மே இறுதி வரை நீடிக்கிறது. கோடைகாலத்தில்  கைலாஸ்ஹஹரின் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகும். எனவே இந்தப் பருவத்தில்  கைலாஸ்ஹஹருக்கு சுற்றுலா செல்வது நல்லதல்ல.

மழைக்காலம்

இங்கு ஜூன் மாதத்தில் தொடங்கும் பருவமழை செப்டம்பர் இறுதி வரை நீடிக்கிறது. பரந்த மழைப் பொழிவுகள் இந்த மாதங்களில் நிலவும். மிகத் தீவிரமான மழையை இந்தப் பருவத்தில் எதிர்பார்க்கலாம். மழை காலத்தில் கைலாஸ்ஹஹருக்கு பயணம் மேற்கொள்வது நல்லதல்ல. எனினும் மழை குறையும் பொழுது பயணிகள் சுற்றுலாவை மேற்கொள்ளலாம்.

குளிர்காலம்

கைலாஸ்ஹஹரின் குளிர்காலம் டிசம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி வரை நீடிக்கிறது. குளிர்காலத்தில் கைலாஸ்ஹஹரின் வெப்பநிலை அதிக அளவு குறைவதில்லை. எனவே கைலாஸ்ஹஹரை சுற்றிப் பார்க்க இதுவே சிறந்த பருவம் ஆகும். குளிர்காலத்தில்  கைலாஸ்ஹஹரின்  குறைந்த பட்ச வெப்ப நிலை 10 டிகிரி செல்ஸியஸை ஒட்டியே காணப்படும். ஆகவே குளிர்காலத்தில் கைலாஸ்ஹஹருக்கு சுற்றுலா மேற்கொள்வது மிகவும் வசதியானது.