ஹிந்து யாத்ரீகர்கள் மத்தியில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலமாக இந்த பிர்கு லேக் கருதப்படுகிறது. இமயமலைத்தொடரின் மலைகளுக்கிடையே புதைந்துள்ள இந்த ஏரியின் கரைப்பகுதியில் தெய்வீக ரிஷியான பிருகு முனிவர் தவம் செய்து வசித்ததாக நம்பப்படுகிறது.
இவர் ஹிந்து புராண ஐதீக மரபின் ஏழு முக்கிய ரிஷிகளில் ஒருவராவார். பிருகு சம்ஹிதா எனும் சாஸ்திர நூலை அவர் இந்த ஏரிக்கரையில் இயற்றினார் என்றும் ஐதீகமாய் நம்பப்படுகிறது.
கடந்த காலம் மற்றும் வரும் காலம் குறித்த பதிவுகளை இந்த சாஸ்திர நூலில் அவர் பதிந்துள்ளார் என்பதாக சொல்லப்படுகிறது. நேரு குண்டம் எனப்படும் இயற்கை நீரூற்று ஒன்றும் இப்பகுதியின் அழகைக்கூட்டும் விதத்தில் இப்பகுதியில் அமைந்துள்ளது. இதற்கான நீர் பிருகு ஏரியிலிருந்தே சுரக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.