Search
  • Follow NativePlanet
Share

நர்கண்டா - பனிச்சறுக்கு விளையாட்டின் சொர்க்கபுரி

17

ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கண்களைக் கவரும் பனி மூடிய இமயமலை தொடர்கள் மற்றும் மலையடிவாரத்தில் பசுமையான காடுகளையும் கொண்ட அழகிய சுற்றுலாத்தலம் தான் நர்கண்டா.

நர்கண்டா நகரத்தில் இருக்கும் சுற்றுலாப் பகுதிகளில், மிகவும் பிரபலமான இடமாக இந்நகரிலேயே உயரமான பகுதியாக விளங்கக் கூடிய ஹடூ சிகரம் உள்ளது. மலையின் உச்சியில் அமைந்திருக்கும் ஹடூ மாதா கோவில் உள்ளூர்வாசிகளால் பயபக்தியுடன் கொண்டாடப்படும் புனிதத்தலமாக விளங்குகிறது.

இந்து மதத்தில் காலம் மற்றும் மாற்றத்தின் கடவுளாக சித்தரிக்கப்படுகின்ற காளி தேவிக்காக கட்டப்பட்டிருக்கும் மாகாமாயா கோவில் நர்கண்டாவின் மற்றுமொரு புகழ் பெற்ற கோவிலாக விளங்குகிறது.

தானேடாரில் உள்ள ஸ்டோக்ஸ் பண்ணை, பரவலான மக்களால் அறியப்படும் ஆப்பிள் பழத் தோட்டமாகவும் மற்றும் உலகளவில் புகழ் பெற்ற இடமாகவும் உள்ளது. 18-வது நூற்றாண்டில் இந்த பண்ணையைத் துவக்கிய அமெரிக்கரான சாமுவேல் ஸ்டோக்ஸ் என்பவரின் பெயரைத் தாங்கியதாக இந்த இடம் விளங்குகிறது.

நர்கண்டாவில் இருந்து 17 கிமீ தொலைவில், சட்லெஜ் நதிக்கரையில் அமைந்திருக்கும் பழமையான கிராமமான கோட்காருக்கும் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம். இந்த கிராமம் 'U' வடிவ பள்ளத்தாக்கில் அமைந்திருக்கிறது.

கோட்காரில் இருந்தபடியே குலு பள்ளத்தாக்கின் சுற்று வட்டக்காட்சிகள் (Panoramic View), ஜிக்ஜாக் சாலைகள் மற்றும் பனி படர்ந்த இமயமலை தொடர்கள் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகளால் ரசித்திட முடியும்.

பனிச்சறுக்கு மற்றும் மலையேற்றத்திற்கு புகழ் பெற்ற நர்கண்டா நகரம், சுற்றுலாப் பயணிகள் பனி மூடிய இமயமலை சரிவுகளில் குளிர்கால விளையாட்டுக்களை விளையாடி மகிழும் வாய்ப்பினை தரும் இடமாகும்.

ஏப்ரல் முதல் ஜுன் மாதங்கள் வரை, மிதமான வெப்பத்தை தாங்கிய கோடைகாலம் நீடிப்பதால் நர்கண்டாவிற்கு வருகை தர உகந்த நாட்களாக இவை உள்ளன. நர்கண்டா நகரம் விமானம், சாலை மற்றும் இரயில் ஆகிய போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள் எளிதில் அடையும் இடமாக உள்ளது.

நர்கண்டா சிறப்பு

நர்கண்டா வானிலை

நர்கண்டா
14oC / 57oF
  • Sunny
  • Wind: NE 9 km/h

சிறந்த காலநிலை நர்கண்டா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது நர்கண்டா

  • சாலை வழியாக
    புது டெல்லி மற்றும் சிம்லா தவிர அருகிலிருக்கும் பிற நகரங்களான ராம்பூர் மற்றும கின்னா ரிலிருந்தும் நர்கண்டாவிற்கு பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கபட்டு வருகின்றன. குப்ரி, மாட்டியானா, தியோக் மற்றும் ஃபாகு ஆகிய சிறு நகரங்களிலிருந்தும் நர்கண்டாவிற்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    நர்கண்டாவிற்கு மிக அருகிலிருக்கும் இரயில் நிலையமாக 78 கிமீ தொலைவிலிருக்கும் கல்கா அகல இரயில் பாதை நிலையம் விளங்குகிறது. இந்த இரயில் பாதை சண்டிகர் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களுடன் இணைந்திருக்கிறது. கல்கா-சிம்லா பாதைகளில் மலிவான விலையில் சிறிய வகை பொம்மை ரயில்களும் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    நர்கண்டாவில் இருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஜுப்பார்ஹாட்டி விமான நிலையம் தான் மிகவும் அருகிலுள்ள விமான நிலையமாகும். இந்த விமான நிலையம் டெல்லி, மும்பை மற்றும் ஸ்ரீ நகர் ஆகிய பிற இந்திய நகரங்களுடன் தொடர்ச்சியான விமான சேவைகளை இயக்கி வருகிறது. நர்கண்டா மற்றும் சிம்லா செல்வதற்கான வாடகை கார்கள் மற்றும் பேருந்துகள் விமான நிலையத்திலேயே கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Oct,Tue
Return On
21 Oct,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Oct,Tue
Check Out
21 Oct,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Oct,Tue
Return On
21 Oct,Wed
  • Today
    Narkanda
    14 OC
    57 OF
    UV Index: 5
    Sunny
  • Tomorrow
    Narkanda
    8 OC
    47 OF
    UV Index: 5
    Partly cloudy
  • Day After
    Narkanda
    10 OC
    49 OF
    UV Index: 5
    Partly cloudy