Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நர்கண்டா » வானிலை

நர்கண்டா வானிலை

பல்வேறு இடங்களை தங்கு தடையின்றி மிதமான வெப்பத்துடன் பார்க்க உதவும் கோடைகாலம் நர்கண்டாவிற்கு வர மிகவும் ஏற்ற பருவமாகும். குளிர்காலங்களில் நிலவும் குளிரின் காரணமாக பயணிகள் இந்த இடத்திற்கு அந்த காலங்களில் வராமலிருந்தாலும், பனிச்சறுக்கு மற்றும் மiயேற்றத்தில் விருப்பமுள்ளவர்கள் அந்த நாட்களிலும் வருவார்கள்.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜுன் வரை) : கோடைகாலத்தின் அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸீம் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 10 டிகிரி செல்சியஸீம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆப்பிள் பழங்கள் முழுமையாக காய்த்து தொங்கும் ஆப்பிள் பழத்தோட்டங்களின் திணற வைக்கும் காட்சிகளை இந்த நாட்களில் சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.

மழைக்காலம்

ஜுலை மாதத்தில் தொடங்கும் மழைக்காலம் நர்கண்டாவில் செப்டம்பர் மாதம் வரை நீடித்திருக்கும். இந்த நாட்களில் இங்கு பெய்யும் மிதமான மழையால் இந்த இடம் தெளிவாகவும், பசுமையாகவும் காட்சியளிக்கும். இரவு நேரங்கள் சற்று குளிரானதாகவே இருக்கும்.

குளிர்காலம்

அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் குளிர்காலத்தில் நர்கண்டாவின் அதிகபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை -10 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.