Search
  • Follow NativePlanet
Share

சாங்க்லா - மனம் மயக்கும் பள்ளத்தாக்கு!

22

சாங்க்லா என்பது ஹிமாச்சல பிரதேசத்தின் கின்னார் மாவட்டை சார்ந்த எழில்மிகும் மலைப்பட்டணம். பாஸ்பா பள்ளத்தாக்கில் அமைந்து இருக்கும் இந்த இடம், திபெத்திய எல்லகளுக்கு அருகே இருக்கிறது.

திபெத்திய மொழியில் ”ஒளியின் முன்செல்லுதல்” என்னும் அர்த்தம் கொடுக்கும் கிராமத்தின் பெயரையே இந்த பட்டணமும் பெற்று இருக்கிறது. பெரிய இமாலயத்தில் ஓய்ந்திருக்கும் இந்த இடம் காட்டு சரிவுகளாலும் மலைகளினாலும் சூழப்பட்டு வசீகரிக்கும் அழகுவாய்ந்த தோற்றத்தை பெற்று இருக்கிறது.

இந்த இடம் இந்திய-சீன எல்லையில் அமைந்து இருப்பதால், 1989 வரை பயணிகள் இந்திய அரசாங்கத்தின் சிறப்பு அனுமதிபை பெற்றுக்கொண்ட பிறகு தான் இந்த இடத்திற்கு செல்ல முடிந்தது. எனினும், இந்த இடத்தில் சுற்றுலா பயணிகளின் வரத்தை அதிகரிப்பதற்காக பின்னர் இச்சட்டம் நீக்கப்பட்டுவிட்டது.

சாங்க்லா தேவதாரு கொட்டை தோட்டங்களுக்கும், அழகான ஆப்பில் மற்றும் செர்ரீ மரங்களுக்கும் பெயர்பெற்றது ஆகும். சிட்குல், கர்ச்சம் மற்றும் பாட்செரி ஆகியவை, சாங்க்லாவின் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பிரபலமான கிராமங்கள்.

இப்போது காமாட்சி என்னும் இந்து தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டு இருக்கும் கம்ரூ கோட்டையும் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலம்  ஆகும். இந்த கோவிலின் மூன்றாம் மாடியில் காமாட்சி அம்மனின் பெரிய சிலையை பயணிகள் பார்க்கலாம்.

மாதா தேவி என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்து தேவி சிட்குல் மாதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவிலும் சாங்க்லாவில் புகழ்பெற்ற வழிபாட்டு தலம் ஆகும். இந்த தெய்வத்திற்கு தங்கள் வேண்டுதல்களை செலுத்துவதற்காக ஆண்டுதோறும் திரளான மக்கள் இந்த கோவிலுக்கு வருகிறார்கள்.

மீன் பிடித்தல், டிரெக்கிங் மற்றும் முகாமிடுதல் போன்ற களிப்பூட்டும் செயல்களுக்கு சிறந்த இடமாக இருப்பதால், சாங்க்லாவின் வழியாக செல்லும் பாஸ்பா நதியும் முக்கியமான சுற்றுலாத்தலமாக கருதப்படுகின்றது.

இந்த இடம் முழுவதும் அழகான தேவதாரு மரங்களுக்கும் கருவாலி மரக்காடுகளுக்கும், கண்ணாடிபோன்ற நதிகளுக்கும், காடுகளுக்கும் இடையில் இருப்பதால், அழகுக்கே அழகு சேர்த்தது போல தோன்றுகிறது.

கடைத்தெருக்களுக்கு செல்ல விரும்பும் பயணிகள் கையினால் செய்யப்பட்ட சால்வைகள், ’கின்னாரி’ தொப்பிகள் ஆகியவற்றை பாட்செரி கிராமத்தில் இருந்து வாங்கிகொள்ளலாம்.

இக்கிராமம் சாங்க்லாவில் இருந்து ஏறத்தாழ 8 கி.மீ தொலைவில் இருக்கிறது. சில்கோசா அல்லது தேவதாரு கொட்டை என்று அழைக்கப்படும் பிரபலமான பழங்கள் பயிரிடப்படும் ஒரே இடம் பாட்செரி என்பதால், இந்த கிராமமும் புகழ்பெற்றதாக இருக்கிறது.

சாங்க்லாவிற்கு அருகே இருக்கும் மற்ற புகழ்பெற்ற இடங்கள் சாப்னி, காண்டா மற்று மீன் பண்ணை. இவ்விடத்தின்  பழங்கால மர சிற்பங்கள் மத்திய காலத்தின் கலையை சித்தரிக்கும் அதே சமயத்தில் அதிகமான சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும்.

திபெத்திய சிற்ப மையம் சாங்க்லாவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மற்றும் ஒரு புகழ்பெற்ற இடம். இங்கே இப்பகுதிகளின்  கலையை பிரதிபலிக்கும் விதமாக அழகான கைவேலைப்பாடு கொண்ட பொருட்கள் கிடைக்கும்.

சாங்க்லாவுக்கு நெருக்கமான விமானதளம், ஏறத்தாழ 238 கி.மீ. தொலைவில் சிம்லாவில் இருக்கும் ஜுபராட்டி விமானநிலையம். பயணிகள் விமான நிலையத்துக்கு வெளியே சொகுசு ஊர்திகளை நியாயமான விலையில் வாடகைக்கு எடுத்து சாங்க்லாவை அடையலாம்.

ரயில் மூலமாக பயணம் செய்ய விரும்புகிறவர்கள், கால்கா தொடர்வண்டி நிலையத்துக்கு தங்கள் பயணச்சீட்டுகளை பதிவுசெய்துகொள்ளலாம். சாங்க்லாவை இந்தியாவின் முக்கிய நகரங்களோடு இணைக்கும் நெருக்கமான முக்கிய ரயில் நிலையம், சிம்லாவில் இருக்கும் தொடர்வண்டி நிலையமே. சண்டிகரில் இருந்து தனியார் மற்றும் அரசாங்க பேருந்துகள் எளிதில் கிடைக்கப்பெறுகின்றன.

குளிர்காலம் தவிற, ஆண்டு முழுவதும் எல்லா காலங்களிலும் சாங்க்லாவின் தட்பவெப்ப நிலை இதமானதாகவே இருக்கிறது.  கோடை காலத்தில் 8 முதல் 30 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது.

மழைக்காலத்தில் சாங்க்லா குறைவான மழைப்பொழிவை பெறுகின்றது. இவ்விடம் குளிர்காலத்தில் கடுமையான குளிர்ச்சியை பெற்று இருப்பதால், அச்சமயங்களில் இங்கு பயணம் செய்வது சரியான தேர்வு இல்லை.

இச்சமயங்களில் இவ்விடத்தின் தட்பவெப்பம் 10° C முதல் -10° C வரை நிலவுகிறது. மழைக்காலமும், கோடைக்காலமும் இவ்விடத்திற்கு செல்ல சிறப்பான காலங்களாக கருதப்படுகின்றன.

சாங்க்லா சிறப்பு

சாங்க்லா வானிலை

சிறந்த காலநிலை சாங்க்லா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது சாங்க்லா

  • சாலை வழியாக
    சண்டிகர் மற்றும் சிம்லாவில் இருந்து தொடர்ச்சியாக பேருந்துகள் சாங்க்லாவுக்கு கிடைக்கப்பெறுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    சாங்க்லாவின் அருகாமை ரயில் நிலையமாக கால்கா ரயில் நிலையம் அறியப்படுகிறது.இந்த ரயில் நிலையம் நேரடியாக சிம்லா ரயில் நிலையத்தோடு இணைக்கப்பட்டு இருக்கின்றது. சிம்லா ரயில் நிலையத்திலிருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு எண்ணற்ற ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் ரயில் நிலையத்துக்கு வெளியே இருந்து சொகுசு வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு பயணிகள் சாங்க்லாவை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சாங்க்லாவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் விமானதளம் ஜுபராட்டி விமான நிலையம். இந்த விமானநிலையம் புது தில்லி மற்றும் சண்டிகர் போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களோடு இணைக்கப்பட்டு இருக்கின்றது. இங்கிருந்து 238 கி.மீ. தொலைவில் இருக்கும் சாங்க்லாவை அடைய, விமானநிலையத்துக்கு வெளியே இருக்கும் சொகுசு ஊர்திகளை பயனிகள் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat